ஆராவமுது

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பின் அனுபவக்குறிப்பு - திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் - 14-17.01.2026நேரம் நெருங்கிவிட்டது!விண்ணளந்தோன் புன்னைகையுடன், தன் ஒப்பனையறைக்குப் புறப்பட்டார். அறியாத தேவர்களும், அசுரர்களும் கடினமான தொடர் செயலால் களைத்திருந்தனர். வாசுகி இதற்கு மேல் முடியாதென்பது போல் துவண்டிருந்தார். மாந்தாரமலையும் இது எப்போது முடியுமென எண்ணியவாறு சலிப்புடன் சுழன்று கொண்டிருந்தது. கீழே பாற்கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் கடலைக் கடையும் வேகம் கூடியபடியே இருந்ததே தவிற குறையவில்லை. ஆம், தேவர்களும், அசுரர்களும் எதிர்பார்த்திருக்கும் பொருள் தங்கள் வாழ்வையே … Continue reading ஆராவமுது →

2025 பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு

இந்த பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு குழுமத்துக்கு முக்கியமான ஒன்றாக அமைந்தது. முதன்முறையாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நண்பர்கள் பங்கெடுத்தனர். கூடவே ஆந்திரா, கர்நாடகா, துபாய், ஸ்விஸ், அமெரிக்காவிலிருந்த நண்பர்களும் இணைந்துகொண்டனர். இந்த நிகழ்வை வாய்ப்பாகக்கொண்டு Ebird தளத்தில் பட்டியல் பதிவேற்றுதல் பற்றி பயிற்சியும் கொடுத்தோம். புதிய நண்பர்களுக்கு இது வாய்ப்பாக அமைந்தது. மொத்தம் 134 பட்டியல்கள் வழியே 180 பறவை இனங்கள் பதிவிடப்பட்டுள்ளன. https://ebird.org/tripreport/319873