கனவு

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொடர்டூர் ஏரி - 17.10.2026 கடந்த 17ஆம் தேதி, நண்பர் ஒருவரை சந்திப்பதாக திட்டம். காலை எட்டு மணிக்கு சந்திப்பு முடிவாகியிருந்த இடம் கொரட்டூர் ஏரிக்கு அருகில் எனபதாலும், பெரிதாக மழையும் இல்லையென்பதாலும், சுமார் ஆறரை மணியளவில் கொடர்டூர் ஏரியின் மேற்கு பகுதியை, பறவைப் பார்த்தலுக்காக வந்தடைந்தேன். எண்திசைக் காவலர்கள் போல, கொடர்டூர் ஏரியின் எட்டுதிசைகளுக்கும் பிரத்தேயகமான பறவைகள் உண்டு. உதாரணமாக ஏரியின் வடமேற்கு திசைக்கு சாம்பல் கதிர்குருவி (Ashy … Continue reading கனவு →

காணகம்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - நித்தியவனம் - 18, 19 & 20.09.2026 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு விருந்தோம்பல்; குறள் - 86; திருவள்ளுவர் செம்மீசைச் சின்னான் (Red-whiskered Bulbul) பறவைப் பார்த்தல் அறிமுகமான பின், நித்தியவனம் மிக நெருக்கமானதாக ஆகிவிட்டது. விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட குழுவினரும் இதையே உணர்வார்கள் என எண்ணுகிறேன். அதற்கு முன் வகுப்பறை, ஓய்வறை, உணவுக்கூடம், அதன் எதிரே துருத்திய பாறை, கீழே சிறு ஓடை என்றிருந்த … Continue reading காணகம் →

பறவைகள் வழியே…

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - வேலூர், சித்தூர் - 05 & 06.09.2026 விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட நண்பர்கள் இக்கட்டுரையை, கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து துவங்குவது முற்றிலும் தற்செயலானது. ஏனெனில் நான் எத்தனைத் தரவுகளைத் தந்தாலும், படித்தபின் நீங்கள் சொல்லப்போவது 'இது தற்செயலே' என்றுதான். உதாரணமாக, 1. இப்படத்தில் ஒருவரைத் தேடி பயணம் துவங்கும். நாங்களும் குறிப்பிட்ட ஒருவரைத் தேடியே இந்த இரண்டுநாள்  பயணத்தைத் துவங்கினோம். 2. அவர் கிடைக்காமல் எங்கெங்கோ அலைவார்கள். நாங்களும் அலைந்தோம். … Continue reading பறவைகள் வழியே… →

நீளகண்டப் பறவையைத் தேடி

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 30.07.2026 குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்பனித்த சடையும் பவளம்போல் மேனிப் பால்வெண்ணீறும்இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.* அப்பர் - தேவாரம் விஷ்ணுபுரம் பறவைகள் வட்டத்தில் வரும் மாதாந்திர போட்டியின் அறிவுப்புகளுக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. அறிவுப்புகளின் ஒரு பிரதி பறவைகளின் பிரதிநிதிக்கு ஒரு விசேஷமான வழியில் அனுப்பப்படுகிறது. பின் அந்த அறிவுப்புக்குத் தொடர்புடைய பறவை … Continue reading நீளகண்டப் பறவையைத் தேடி →

அடைதலென்பது

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - உன்கல் ஏரி - ஹூப்ளி - கர்நாடகம் - 24&25.06.2026 24.06.2026 அன்று விடுதியறையில் காலை 5 மணிக்கு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இன்னும் வெளியே வெளிச்சம் பரவவில்லை. விடுதியின் எதிரிலேயே உன்கல் ஏரி (Unkal kere) இருந்தது. சுற்றிலும் கம்பி வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்த அம்மாபெரும் ஏரியுள் நுழையும்  வழி எங்கென்று தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும். முந்தய நாள் இரவிலிருந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. சென்னையின் தட்பவெப்பநிலைதான் ஹூப்ளியிலிருக்கும் … Continue reading அடைதலென்பது →