மணிப்புறா(Spotted Dove) வெள்ளி மலையில் மிகவும் பரவலாக காணப்படும் பறவைகளின் ஒன்று. மின்சார கம்பி, மரம் அல்லது தரையில் மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். 'கூ , கூ , குக்ரூ' என்று குறுகுறுக்கும். அளவில் சிறிதான புறா. நீண்ட, சதுர வடிவ நுனி கொண்ட வால். கழுத்தில் காணப்படும் கருப்பு வெள்ளை புள்ளிகள், இதன் தனித்துவமான அடையாளம். கருப்பு அலகு. கண்கள் இளஞ்சிவப்பு. மேல் பகுதி சாம்பலும் பழுப்பும் கலந்த நிறம். அடிவயிறு இளஞ்சிவப்பு கலந்த சாம்பல் … Continue reading தூவித்தோழர்கள்-45
Month: April 2026
தூவித்தோழர்கள்- 44
நீலப் பைங்கிளி (Malabar Parakeet) வெள்ளிமலையில் எப்போது பறவை பார்க்க சென்றாலும், தவறாமல் பார்க்கும் பறவைகளுள் ஒன்று நீலப் பைங்கிளி. பச்சை நிற மரங்களின் பின்னணியில், இதன் நீல நிறம் தனித்து தெரியும். ஆலடி அமர்ந்திருந்த போது மிக அருகே ஒரு ஜோடி பறந்து சென்றது. கிளிகள் பறந்து செல்லும் போது, கூட்டத்தினருடன் தொடர்பில் இருக்கவும், வழி தவறி விடாமல் இருக்கவும், கூவிக்கொண்டே செல்கின்றன. தாவரவியல் வகுப்பு இடைவேளையில் குழந்தைகள் பறவை பார்த்தனர். ஒரே நேரத்தில் கூட்டமாக … Continue reading தூவித்தோழர்கள்- 44
தூவித்தோழர்கள்-43
நீலக்கண்ணி (Blue-faced Malkoha) வெள்ளிமலைக்கு வந்தபின் தெரிந்து கொண்ட பறவைகளில் ஒன்று நீலக்கண்ணி. இதன் ஆங்கில பேரான Malkoha, எனக்கு பால்கோவாவை நினைவுபடுத்தியது. சிங்களத்தில் Mal என்றால் பூ; Koha என்றால் குயில். பூங்குயில் என்ற அழகான அர்த்தத்தை பின்பு தெரிந்து கொண்டேன். ஆசிரியர்களுடன் பறவைகளுக்காக காத்திருக்கும் போது, இதை முதன் முதலில் பார்த்தேன். செம்போத்தை நினைவு படுத்தியது. செம்பழுப்பு வண்ண சிறகுகளுக்கு பதில், மின்னும் கரும் பச்சையும், கரு நீலமும் கலந்த சிறகுகள். சாம்பல் நிறத் … Continue reading தூவித்தோழர்கள்-43
உலகமான புவியின் நாள்
பறவைப் பார்த்தல் அனுபவக்குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 22.04.2026 அந்த நாள்எனக்கு நன்றாகநினைவில் இருக்கிறதுஅன்று என்னநடந்தது என்பதுதான்ஞாபகமில்லை- ஆனந்த் நமக்கு விசேஷமான நாட்கள் பல உண்டு. பிறந்த நாட்கள், பண்டிகை நாட்கள், திருவிழா நாட்கள், வார இறுதியில் வராத அரசு விடுமுறை நாட்கள், மாணவர்களுக்கு ஆசிரியர்களும், அலுவலர்களுக்கு உயரதிகாரிகளும் வராத நாட்கள் என வருடத்திற்கு சில சமயம் 366 நாட்கள் வருவதுண்டு. அவற்றில் ஒன்றென, எதிர்பாராவிதமாக நான் எதிர்கொண்ட இந்நாளுக்கு 'உலகப்புவி நாள்' … Continue reading உலகமான புவியின் நாள்
தூவித்தோழர்கள்-42
ஊதாத் தேன்சிட்டு(Purple Sunbird) வீட்டருகில் தினமும் பார்க்கக்கூடிய பறவைகளுள் ஒன்று. காலையும் மாலையும் ஜோடியாக தூங்குவாகை மரத்திற்கு வரும். அதன் குரலை தொடர்ச்சியாக கேட்க முடியும். ஓரிடத்தில் நில்லாமல், பறந்து கொண்டே இருக்கும். ஆண் பறவை மின்னும் கரு ஊதா நிறத்தில் காட்சியளிக்கும். உண்மையில் இதன் நிறம் ஊதா அல்ல. இதை விளக்கும் அருமையான காணொளி. இறகுதிர் காலத்தில் மஞ்சளும் கலந்து இருக்கும். பெண் பறவையின் மேல் புறம் அடர் நிறத்திலும், அடிப்புறம் மங்கலான நிறத்திலும் இருக்கும். … Continue reading தூவித்தோழர்கள்-42



