பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொடர்டூர் ஏரி - 17.10.2026 கடந்த 17ஆம் தேதி, நண்பர் ஒருவரை சந்திப்பதாக திட்டம். காலை எட்டு மணிக்கு சந்திப்பு முடிவாகியிருந்த இடம் கொரட்டூர் ஏரிக்கு அருகில் எனபதாலும், பெரிதாக மழையும் இல்லையென்பதாலும், சுமார் ஆறரை மணியளவில் கொடர்டூர் ஏரியின் மேற்கு பகுதியை, பறவைப் பார்த்தலுக்காக வந்தடைந்தேன். எண்திசைக் காவலர்கள் போல, கொடர்டூர் ஏரியின் எட்டுதிசைகளுக்கும் பிரத்தேயகமான பறவைகள் உண்டு. உதாரணமாக ஏரியின் வடமேற்கு திசைக்கு சாம்பல் கதிர்குருவி (Ashy … Continue reading கனவு
Category: Blogs
தட்டேக்காடு பறவைகள் சரணாலயம்
தட்டேக்காடு பறவைகள் சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பெரியார் நதிக்கரையில் அமைந்துள்ளது. இச்சரணாலயம் 25 சதுர கிலோ மீட்டர் மட்டுமே, ஆனால் 250க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு உண்டு. சாலிம் அலி இவ்வழியாக செல்லும் போது, அவரது வண்டி பழுதாக, இங்கு இரு நாட்கள் தங்கும் படி ஆனது. அப்போது இந்த பகுதியை அவர் பார்வை இட்டு சரணாலயமாக பரிந்துரைக்க பட்டது என்கின்றனர் இங்குள்ளவர்கள். இவ்விடம் இன்னும் சுற்றுலா தலமாக ஆகாததால் அமைதியான கேரள … Continue reading தட்டேக்காடு பறவைகள் சரணாலயம்
ஆசிரியரின் அன்புப் பரிசு
கோளரம்பதி ஏரி பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால் விஜய் சார் எங்கு செல்லலாம் என்று கேட்டவுடன் அந்த ஏரியை பற்றி கூறினேன். விஜி சார் ஏற்கனவே அங்கு சென்றிருந்ததால், கோளரம்பதி ஏரிக்கு செல்வது என்று முடிவாயிற்று. 4.15 மணியளவில் நான், என் கணவர், தேவ் மூவரும் சென்றோம். முதலில் பார்த்தது தரையில் உலாவிக் கொண்டிருந்த மேற்கத்திய வலசை வாலாட்டிகள். அருணா, விஜி, பவித்ரா, அருள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ஏற்கனவே பறவை … Continue reading ஆசிரியரின் அன்புப் பரிசு
தூவித்தோழர்கள்-61
கருந்தோள் பருந்து(Black-winged Kite) வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்தபோது, ஒரே இடத்தில் பறக்கக்கூடிய பறவைகளில் ஒன்று கருந்தோள் பருந்து என்று கூறினார்கள். மதிய இடைவேளையில் அது வானில் வட்டமிட்டு கொண்டிருந்ததை பார்த்தோம். சிறிது நேரத்தில் ஒரே இடத்தில் பறந்தும் காட்டியது. அதன் பின் ஒவ்வொரு முறை வெள்ளி மலை வரும்போதும், மதிய இடைவேளையில் அதை தேடுவது என் வழக்கமாயிற்று. வருடம் முழுவதும் அதை பார்க்க முடிந்தது. ஆகஸ்டு மாதத்தில் ஜோடியாக வானில் வட்டமிட்டு கொண்டிருந்தது. செப்டம்பர் … Continue reading தூவித்தோழர்கள்-61
ஒரு குரல்
ஒரு பறவையின் குரலுடன் மட்டும் தனித்து இருந்திருக்கிறீர்களா? பதிமூன்று வருடங்களுக்கு முன் ஒரு மாலை பொழுதில் பல கிளிகளின் கீச்சிடலுக்குள் அத்தனை சத்தங்களையும் மீறி தனித்து ஒலித்தது அந்த பறவையின் குரல். முதன்முதலில் நான் அப்போது தான் கவனித்தேன். பின்னர் ஒவ்வொரு மாலையும், அங்கிருக்கும் போது தனித்தோ சேர்ந்தோ ஒலிக்கும் அந்த பறவையின் குரலை கவனிக்காமல் இருக்க முடிந்ததில்லை. அப்பொழுது அது எந்த பறவை என்று பார்க்கத் தோன்றவில்லை. கிராமத்தில், கணவரின் குடும்ப வீடு மச்சு வீடு … Continue reading ஒரு குரல்


