தட்டேக்காடு பறவைகள் சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பெரியார் நதிக்கரையில் அமைந்துள்ளது. இச்சரணாலயம் 25 சதுர கிலோ மீட்டர் மட்டுமே, ஆனால் 250க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு உண்டு. சாலிம் அலி இவ்வழியாக செல்லும் போது, அவரது வண்டி பழுதாக, இங்கு இரு நாட்கள் தங்கும் படி ஆனது. அப்போது இந்த பகுதியை அவர் பார்வை இட்டு சரணாலயமாக பரிந்துரைக்க பட்டது என்கின்றனர் இங்குள்ளவர்கள். இவ்விடம் இன்னும் சுற்றுலா தலமாக ஆகாததால் அமைதியான கேரள … Continue reading தட்டேக்காடு பறவைகள் சரணாலயம்
Category: Field Trips
Posts related to group birding trips are added here.
ஆசிரியரின் அன்புப் பரிசு
கோளரம்பதி ஏரி பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால் விஜய் சார் எங்கு செல்லலாம் என்று கேட்டவுடன் அந்த ஏரியை பற்றி கூறினேன். விஜி சார் ஏற்கனவே அங்கு சென்றிருந்ததால், கோளரம்பதி ஏரிக்கு செல்வது என்று முடிவாயிற்று. 4.15 மணியளவில் நான், என் கணவர், தேவ் மூவரும் சென்றோம். முதலில் பார்த்தது தரையில் உலாவிக் கொண்டிருந்த மேற்கத்திய வலசை வாலாட்டிகள். அருணா, விஜி, பவித்ரா, அருள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ஏற்கனவே பறவை … Continue reading ஆசிரியரின் அன்புப் பரிசு
பறவைகள் வழியே…
பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - வேலூர், சித்தூர் - 05 & 06.09.2026 விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட நண்பர்கள் இக்கட்டுரையை, கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து துவங்குவது முற்றிலும் தற்செயலானது. ஏனெனில் நான் எத்தனைத் தரவுகளைத் தந்தாலும், படித்தபின் நீங்கள் சொல்லப்போவது 'இது தற்செயலே' என்றுதான். உதாரணமாக, 1. இப்படத்தில் ஒருவரைத் தேடி பயணம் துவங்கும். நாங்களும் குறிப்பிட்ட ஒருவரைத் தேடியே இந்த இரண்டுநாள் பயணத்தைத் துவங்கினோம். 2. அவர் கிடைக்காமல் எங்கெங்கோ அலைவார்கள். நாங்களும் அலைந்தோம். … Continue reading பறவைகள் வழியே…
நீளகண்டப் பறவையைத் தேடி
பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 30.07.2026 குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்பனித்த சடையும் பவளம்போல் மேனிப் பால்வெண்ணீறும்இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.* அப்பர் - தேவாரம் விஷ்ணுபுரம் பறவைகள் வட்டத்தில் வரும் மாதாந்திர போட்டியின் அறிவுப்புகளுக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. அறிவுப்புகளின் ஒரு பிரதி பறவைகளின் பிரதிநிதிக்கு ஒரு விசேஷமான வழியில் அனுப்பப்படுகிறது. பின் அந்த அறிவுப்புக்குத் தொடர்புடைய பறவை … Continue reading நீளகண்டப் பறவையைத் தேடி
அடைதலென்பது
பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - உன்கல் ஏரி - ஹூப்ளி - கர்நாடகம் - 24&25.06.2026 24.06.2026 அன்று விடுதியறையில் காலை 5 மணிக்கு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இன்னும் வெளியே வெளிச்சம் பரவவில்லை. விடுதியின் எதிரிலேயே உன்கல் ஏரி (Unkal kere) இருந்தது. சுற்றிலும் கம்பி வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்த அம்மாபெரும் ஏரியுள் நுழையும் வழி எங்கென்று தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும். முந்தய நாள் இரவிலிருந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. சென்னையின் தட்பவெப்பநிலைதான் ஹூப்ளியிலிருக்கும் … Continue reading அடைதலென்பது



