பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 23.05.2026 அந்தக் குகை, இதுவரை மானுடர் கண்ட துயரங்களிலிருந்து விடுபட வேண்டி ஒரு சோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்குள் வளர்ந்த மனிதற்களுக்கு அனுமதியில்லை. அவர்களின் மேல் பாவத்தின் கறை ஏற்கனவே படிந்துவிட்டிருந்தது. எனவே, வெவ்வேறு ஊர்களில் அன்று பிறந்த குழந்தைகள், தாயின் கருவறையை விட்டு வெளியேறி வெளிச்சத்தைக் காணும் முன்னே ஒளி புகாமல், காற்று மட்டும் செல்லும்படி முடையப்பட்டிருந்த கூடைகளுக்குள் பொதியப்பட்டு, சேவகர்களால் … Continue reading திரும்புதல்
Month: May 2026
தூவித்தோழர்கள்-48
சாம்பல் இருவாச்சி (Indian Gray Hornbill) ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு அழகு. அதற்கென்று தனித்துவமான குணங்களும் உண்டு. ஆனால் ஏதோ சில காரணங்களால், சில பறவைகள் பித்து பிடிக்க வைக்கிறது. இந்த சாம்பல் இருவாச்சி எனக்கு அப்படிப்பட்ட பறவைகளுள் ஒன்று. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத, மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் பறவை. 2024 மே பறவை பார்த்தல் வகுப்பில், ஈஸ்வர் Sir ருடன் பறவை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒன்றன்பின் ஒன்றாக ஒரு … Continue reading தூவித்தோழர்கள்-48
தூவித்தோழர்கள்-47
நீலமேனி ஈப்பிடிப்பான் (Verditer Flycatcher) டிசம்பர் மாதம் நடந்த தாவரவியல் வகுப்பில் கலந்து கொண்ட குழந்தைகள் சேர்ந்து, காலையில் பறவை பார்க்க சென்றனர். அப்போது முதல் முறையாக ஒரு பறவையை பார்த்தனர். Merlin செயலியில் துலாவி, இதுவாக இருக்கலாம் என்று முடிவு செய்தனர். யானை குடிலுக்கு செல்லும் வழியில், மின்சார கம்பியில் மிக அருகில் நீலமேனி ஈப்பிடிப்பான் அமர்ந்திருந்தது. எனக்கு பார்த்தவுடன் தெரிந்து விட்டது, காலையில் குழந்தைகள் பார்த்த பறவை இது தான் என்று. பஞ்சுருட்டான் அளவுள்ள … Continue reading தூவித்தோழர்கள்-47
தழலின் தவம்
பறவைப் பார்த்தல் அனுபவக்குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 01.05.2026 தழல் ஆடலும்அலைதலும்சிலைத்தலும் ஊர்தலும்படர்தலும்எழுதலும் தீண்டலும்பற்றலும்சேர்தலும் கொல்தலும்கொள்தலும் இவையனைத்துமாதலும்ஆன பின்இவையல்லாதாதலும் தழலே! செந்நீலநாரை (Purple heron) - என் வழி.... இன்று கொரட்டூர் ஏரிக்கு செல்லும் போதே ஒரு முடிவுடன்தான் சென்றேன். செந்நீலநாரை (Purple heron) மீனை வேட்டையாடுவதை காணாமல் திரும்புவதில்லையென்று. ஆம், கடந்த இரண்டு மாதங்களாக இந்த முயற்சியிலிருக்கிறேன். மார்ச் மாதத்திற்கான விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட குழுவினருக்கான சவால் இது. செந்நீலநாரை மீனைக் … Continue reading தழலின் தவம்
தூவித்தோழர்கள்-46
கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher) சென்னை வீட்டின் அருகே, ஒரு தாமரைக் குளம் உண்டு. ஸ்ரீயின் பள்ளி வேன் நிறுத்தம், அங்கு உள்ளதால், தினமும் காலையில் நானும் அவளும் அங்கு காத்திருப்போம். ஒரு நாள் குளத்திற்கு மேலே, பறந்து கொண்டிருந்த கருப்பு வெள்ளை மீன் கொத்தியை பார்த்தோம். ஒரே இடத்தில் பறந்தபடியே, நீரை ஆராய்ச்சி செய்தது. சட்டென்று இறக்கைகளை மடித்து, நீரில் பாய்ந்து, மீனுடன் பறந்து சென்றது. அதற்குப் பின், சுமார் பத்து ஆண்டுகள் கழித்து, … Continue reading தூவித்தோழர்கள்-46




