அதிர்வுதாங்கியின் முன்னோடி

ஊர் மரங்கொத்தி - Black-rumped flameback (தூவித்தோழர்கள்-2)  ஊர் மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 22 முறை  வரை மரத்தை தட்ட முடியும். இடையில் நிறுத்தாவிட்டால், மூளை சூடாக வாய்ப்புள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக சுருங்கி, விரியக்கூடிய மண்டை ஓட்டை கொண்டுள்ளது. இதன் நாக்கு மண்டையோட்டை சுற்றி வரும் அளவு நீளமானது. நாக்கின் நுனியில் கூர்மையான முட்கள் உள்ளன. நீண்ட நாக்கை நீட்டி மரத்தின் பிளவுகளில் மறைந்திருக்கும் பூச்சியை பிடிக்கிறது இந்தப் பறவை. இதன் நாக்கு ஓர் அதிர்வுதாங்கியாக (Shock … Continue reading அதிர்வுதாங்கியின் முன்னோடி →

பறவைகள் வழியே…

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - வேலூர், சித்தூர் - 05 & 06.09.2026 விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட நண்பர்கள் இக்கட்டுரையை, கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து துவங்குவது முற்றிலும் தற்செயலானது. ஏனெனில் நான் எத்தனைத் தரவுகளைத் தந்தாலும், படித்தபின் நீங்கள் சொல்லப்போவது 'இது தற்செயலே' என்றுதான். உதாரணமாக, 1. இப்படத்தில் ஒருவரைத் தேடி பயணம் துவங்கும். நாங்களும் குறிப்பிட்ட ஒருவரைத் தேடியே இந்த இரண்டுநாள்  பயணத்தைத் துவங்கினோம். 2. அவர் கிடைக்காமல் எங்கெங்கோ அலைவார்கள். நாங்களும் அலைந்தோம். … Continue reading பறவைகள் வழியே… →