மதுரை பயண அனுபவக்குறிப்பு - காந்திகிராமம், கொடிக்குளம் கண்மாய் - 14 & 15.02.2026 இன்னிசை மாதரிசையுளேன் நான்,இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். நான் - சுப்ரமண்ய பாரதி மதுரைக்கு, துணைவியின் தோழியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக கடந்த 13.02.26, வெள்ளிக்கிழமை இரவு வந்தடைந்தோம். இந்நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டு மீனாட்சியம்மனை தரிசிப்பதும், எங்களிருவரின் பெற்றோரையும் முதல் முறையாக விமானத்தில் பறக்கும் அனுபவத்தை அளிப்பதும் எங்கள் திட்டத்தின் முக்கிய பகுதி. அழகரும், முருகரும் … Continue reading புள்ளெலாம் நான்
Tag: wetland
வெட்கம்
பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - நாக்பூர், சந்திரபூர் - 2, 3 & 4th Feb'26 இம்முறை மகாராஷ்டிரத்திற்கு வேலை நிமித்தமாக ஓர் நெடும்பயணம். வானிலிருந்து, மண்ணுக்கு - ஒன்றிலிருந்து, மற்றொன்றுக்கு என வாகனங்களை மாற்றியபடி சென்று கொண்டே இருக்க வேண்டிய பயணம். தூங்குவதற்காக மட்டும் நிலத்தில் கால் வைத்தேன். விழித்தவுடன் மீண்டும் பயணம்! எனவே ஓய்வு நேரங்களில் நான் திட்டமிடும் பறவைப் பார்த்தலுக்கு வாய்ப்பில்லை. ஆனால் ஆடிய கால்களாயிற்றே! அதற்கான வழிகளை அதுவே கண்டடைந்தது. … Continue reading வெட்கம்
ஆராவமுது
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பின் அனுபவக்குறிப்பு - திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் - 14-17.01.2026நேரம் நெருங்கிவிட்டது!விண்ணளந்தோன் புன்னைகையுடன், தன் ஒப்பனையறைக்குப் புறப்பட்டார். அறியாத தேவர்களும், அசுரர்களும் கடினமான தொடர் செயலால் களைத்திருந்தனர். வாசுகி இதற்கு மேல் முடியாதென்பது போல் துவண்டிருந்தார். மாந்தாரமலையும் இது எப்போது முடியுமென எண்ணியவாறு சலிப்புடன் சுழன்று கொண்டிருந்தது. கீழே பாற்கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் கடலைக் கடையும் வேகம் கூடியபடியே இருந்ததே தவிற குறையவில்லை. ஆம், தேவர்களும், அசுரர்களும் எதிர்பார்த்திருக்கும் பொருள் தங்கள் வாழ்வையே … Continue reading ஆராவமுது
நிலவில் துவங்குதல்
பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி, சென்னை - 06.12.2025அவ்வப்போது நிலவிலும் துவங்குவோம் நிலவுதான் இருளுக்கும் இடமளிக்கிறது Me (left) with Govindarajan sir (Right) 06.12.2025, சனிக்கிழமை அன்று காலை, சூரியன் ஏரியில் நீராடி எழுவதை பறவைகளுடன் சேர்த்து பார்த்துவிடுவதென்று நானும் கோவிந்தராஜன் சாரும் அவரவர் வீட்டிலிருந்து கொரட்டூர் ஏரிக்கு கிளம்பினோம். இருள் இன்னும் விலகவில்லை. பௌர்ணமி கடந்து ஒரு நாளே ஆவதால், முழுநிலவு தான் தேய்வதை இன்னும் அறியவில்லை. ஏரியில் பறவைகள் … Continue reading நிலவில் துவங்குதல்
2025-08-31 சோழிங்கநல்லூர் சதுப்பு பயணம்
தியோடர் சாருடன் நேற்று உரையால் முடிந்த கையுடன் இன்று காலை சோழிங்கநல்லுர் அருகில் உள்ள சதுப்பு நிலத்திற்கு பறவை பார்க்கச் சென்றோம். இவ்விடம் 1200 ஏக்கர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தெற்குக் கோடி முனையில் உள்ளது. இதன் கிழக்கு பகுதியில் கல்லூரி வலாகம், தெற்கில் அடுக்கு மனைகள் உள்ளன. மேற்கில் சிறு ஏரியும், வடக்கில் நான்குவழிச் சாலையுமாக நடுவில் சதுப்புநிலத்தின் சிறு பகுதி உள்ளது. நாணல் போன்ற சம்பு (Typha angustifolia) முன்னாலிருக்க மற்ற நீர் தாவரங்கள் … Continue reading 2025-08-31 சோழிங்கநல்லூர் சதுப்பு பயணம்




