வெள்ளைக்கண்ணி(Indian White-eye) 2025 ஜூலை மாதம் இந்திய மரபிசைப் பயிற்சிக்கு நித்யவனம் சென்றிருந்தேன். பறவை பார்க்கும் நண்பர்கள் பலர் இருந்ததால், கிடைக்கும் இடைவேளைகளிலெல்லாம் பறவை பார்க்க சென்றோம். கிணத்துக் குடில் எதிரில் உள்ள மரத்தில் கூட்டமாக வெள்ளை கண்ணியை பார்த்தோம். மரக்கிளைகளிடைய அங்கும் இங்கும் பறந்தபடியே இருந்தது. ச்சீர் ச்சீர் என்ற மெல்லிய சீட்டியொலி போல இருந்த அதன் குரலையும் கேட்க முடிந்தது. மொட்டுக்கள், விதைகள், பழங்கள், மலரமுது மற்றும் சிறு பூச்சிகளை உண்ணும். பல சமயங்களில் … Continue reading தூவித்தோழர்கள்-60
Month: August 2026
தூவித்தோழர்கள்-59
நீலத்தாழைக் கோழி (Gray-headed Swamphen) முதன்முதலில் நீலத்தாழைக் கோழியை வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பார்த்தேன். காலை வெயிலில், அதன் ஊதாவும் நீலமும் கலந்த நிறமும், முகத்தில் இருக்கும் சிவந்த பெரிய அலகும், நெற்றிக் கவசமும் மிக அழகாக காட்சியளித்தது. சத்தமே எழுப்பாமல் அமைதியாக நாமக் கோழிகளுடன் சேர்ந்து மேய்ந்து கொண்டிருந்தன. சிவப்பு நிற மெல்லிய நீண்ட கால்களை தூக்கி வைத்து பொறுமையாக நடந்தன. © Raghavendra Pai ஆழம் குறைந்த நீர்நிலை ஓரங்களில், நீர்த்தாவரங்கள் மற்றும் காட்டுப்புதர்கள் … Continue reading தூவித்தோழர்கள்-59
தூவித்தோழர்கள்-58
சாம்பல் சிலம்பன்(Large Gray Babbler) பொள்ளாச்சி தோட்டத்தில் 'தவிட்டுக் குருவி போல கத்திக்கொண்டிருக்கும் ஒரு பறவை கூட்டம், தோட்டத்தின் பின்புறம் உள்ளது. ஆனால் பார்க்க தவிட்டுக் குருவி போல இல்லை' என்று என் அம்மா கூறினார்கள். புதுப் பறவை பார்க்க போகும் ஆர்வத்துடன் சென்றேன். தோட்டத்தில் நுழைந்த உடன் 'க்காய் க்காய்' என்று சத்தம் கேட்டது பின்புறம் சென்று பார்த்த போது, சுமார் பத்து சாம்பல் சிலம்பன்கள் கத்திக் கொண்டு, தரையில் மேய்ந்து கொண்டிருந்தன. சில பறவைகள் … Continue reading தூவித்தோழர்கள்-58
தூவித்தோழர்கள்-57
பெரிய தேன்சிட்டு (Loten's Sunbird) தில்லைவனத் தோட்டத்தில் பெரிய தேன் சிட்டை முதன்முதலாக பார்த்தேன். சட்டென்று பார்க்க ஊதா தேன்சிட்டை போலவே இருக்கும். இதன் கரு நிற அலகு நீண்டு, கீழ்புறமாக வளைந்து இருக்கிறது. குரலும் வேறுபடுகிறது. முதலில் மந்தாரை மரத்தின் கிளையில் அமர்ந்து இளஞ்சிவப்பு நிற பட்டாம்பூச்சி போன்ற மலரில் மலரமுது உண்டது. அதன் அடியில் சோற்றுக்கற்றாழை பூத்திருந்தது. செடியின் நடுவிலிருந்து உயரமாக வரும் மஞ்சரித் தண்டில் மணி வடிவ மலர்கள் கொண்ட ஆரஞ்சு நிற மஞ்சரி இருந்தது. பெரிய … Continue reading தூவித்தோழர்கள்-57
நீளகண்டப் பறவையைத் தேடி
பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 30.07.2026 குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்பனித்த சடையும் பவளம்போல் மேனிப் பால்வெண்ணீறும்இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.* அப்பர் - தேவாரம் விஷ்ணுபுரம் பறவைகள் வட்டத்தில் வரும் மாதாந்திர போட்டியின் அறிவுப்புகளுக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. அறிவுப்புகளின் ஒரு பிரதி பறவைகளின் பிரதிநிதிக்கு ஒரு விசேஷமான வழியில் அனுப்பப்படுகிறது. பின் அந்த அறிவுப்புக்குத் தொடர்புடைய பறவை … Continue reading நீளகண்டப் பறவையைத் தேடி




