சின்னான் ( Red vented bulbul)
காலை நேரத்தில் வீட்டின் எதிரில் உள்ள கருநொச்சி மரத்தில் சின்னான் வந்து அமரும். அதன் மலர் மிகவும் சிறிது. அதன் அலகோ பெரிது. எவ்வாறு மலரமுது உண்ண முடியும்? ஒரு நாள் மர்மம் விலகியது. பூவுக்கு வரும் எறும்புகளை பிடிக்க காத்திருக்கிறது. ஒரு நாள், கைக்கெட்டும் தூரத்தில் வந்து அமர்ந்து, மனதிற்கும் நெருக்கம் ஆகிவிட்டது.


பெரும்பாலும் ஜோடியாகத்தான் வருகின்றன. இரண்டிற்கும் குறிப்பிடும்படியாக ஆண் பெண் வேறுபாடு எதுவும் தெரியவில்லை. மாலை நேரங்களில் தண்ணீர் தொட்டி அருகில் உள்ள T குழாயில் நின்று பாடிக்கொண்டிருக்கும்.

படித்தறிந்தது
- முட்டைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் சிவப்பு வண்ண புள்ளிகளுடன் இருக்கும். இரண்டு அல்லது மூன்று முட்டைகள் இடும்.

- நம்மூர் சேவல் சண்டை போல், Assam மில் சின்னானை வைத்து சண்டை போடுவார்கள். நல்ல வேளையாக 2016ல் இது தடை செய்யப்பட்டது.
- 100 ஆக்கிரமிப்பு பறவைகள் பட்டியலில் 78 வது இடத்தில் இருப்பதால், ஹவாய் தீவுகளில், இயல்வாழ் செடிகளுக்கும், பறவைகளுக்கும், இதை ஆபத்தாக கருதி நீக்கி இருக்கிறார்கள்.
- சுடலைக்குயில் இதன் கூட்டில் முட்டைகள் இடும். இரண்டிற்கும் கொண்டை இருப்பதனால் இந்த முடிவோ?