கோளரம்பதி ஏரி பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால் விஜய் சார் எங்கு செல்லலாம் என்று கேட்டவுடன் அந்த ஏரியை பற்றி கூறினேன். விஜி சார் ஏற்கனவே அங்கு சென்றிருந்ததால், கோளரம்பதி ஏரிக்கு செல்வது என்று முடிவாயிற்று. 4.15 மணியளவில் நான், என் கணவர், தேவ் மூவரும் சென்றோம். முதலில் பார்த்தது தரையில் உலாவிக் கொண்டிருந்த மேற்கத்திய வலசை வாலாட்டிகள். அருணா, விஜி, பவித்ரா, அருள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ஏற்கனவே பறவை … Continue reading ஆசிரியரின் அன்புப் பரிசு
Author: Rajeshwari Raj
தூவித்தோழர்கள்-61
கருந்தோள் பருந்து(Black-winged Kite) வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்தபோது, ஒரே இடத்தில் பறக்கக்கூடிய பறவைகளில் ஒன்று கருந்தோள் பருந்து என்று கூறினார்கள். மதிய இடைவேளையில் அது வானில் வட்டமிட்டு கொண்டிருந்ததை பார்த்தோம். சிறிது நேரத்தில் ஒரே இடத்தில் பறந்தும் காட்டியது. அதன் பின் ஒவ்வொரு முறை வெள்ளி மலை வரும்போதும், மதிய இடைவேளையில் அதை தேடுவது என் வழக்கமாயிற்று. வருடம் முழுவதும் அதை பார்க்க முடிந்தது. ஆகஸ்டு மாதத்தில் ஜோடியாக வானில் வட்டமிட்டு கொண்டிருந்தது. செப்டம்பர் … Continue reading தூவித்தோழர்கள்-61
அதிர்வுதாங்கியின் முன்னோடி
ஊர் மரங்கொத்தி - Black-rumped flameback (தூவித்தோழர்கள்-2) ஊர் மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 22 முறை வரை மரத்தை தட்ட முடியும். இடையில் நிறுத்தாவிட்டால், மூளை சூடாக வாய்ப்புள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக சுருங்கி, விரியக்கூடிய மண்டை ஓட்டை கொண்டுள்ளது. இதன் நாக்கு மண்டையோட்டை சுற்றி வரும் அளவு நீளமானது. நாக்கின் நுனியில் கூர்மையான முட்கள் உள்ளன. நீண்ட நாக்கை நீட்டி மரத்தின் பிளவுகளில் மறைந்திருக்கும் பூச்சியை பிடிக்கிறது இந்தப் பறவை. இதன் நாக்கு ஓர் அதிர்வுதாங்கியாக (Shock … Continue reading அதிர்வுதாங்கியின் முன்னோடி
தூவித்தோழர்கள்-60
வெள்ளைக்கண்ணி(Indian White-eye) 2025 ஜூலை மாதம் இந்திய மரபிசைப் பயிற்சிக்கு நித்யவனம் சென்றிருந்தேன். பறவை பார்க்கும் நண்பர்கள் பலர் இருந்ததால், கிடைக்கும் இடைவேளைகளிலெல்லாம் பறவை பார்க்க சென்றோம். கிணத்துக் குடில் எதிரில் உள்ள மரத்தில் கூட்டமாக வெள்ளை கண்ணியை பார்த்தோம். மரக்கிளைகளிடைய அங்கும் இங்கும் பறந்தபடியே இருந்தது. ச்சீர் ச்சீர் என்ற மெல்லிய சீட்டியொலி போல இருந்த அதன் குரலையும் கேட்க முடிந்தது. மொட்டுக்கள், விதைகள், பழங்கள், மலரமுது மற்றும் சிறு பூச்சிகளை உண்ணும். பல சமயங்களில் … Continue reading தூவித்தோழர்கள்-60
தூவித்தோழர்கள்-59
நீலத்தாழைக் கோழி (Gray-headed Swamphen) முதன்முதலில் நீலத்தாழைக் கோழியை வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பார்த்தேன். காலை வெயிலில், அதன் ஊதாவும் நீலமும் கலந்த நிறமும், முகத்தில் இருக்கும் சிவந்த பெரிய அலகும், நெற்றிக் கவசமும் மிக அழகாக காட்சியளித்தது. சத்தமே எழுப்பாமல் அமைதியாக நாமக் கோழிகளுடன் சேர்ந்து மேய்ந்து கொண்டிருந்தன. சிவப்பு நிற மெல்லிய நீண்ட கால்களை தூக்கி வைத்து பொறுமையாக நடந்தன. © Raghavendra Pai ஆழம் குறைந்த நீர்நிலை ஓரங்களில், நீர்த்தாவரங்கள் மற்றும் காட்டுப்புதர்கள் … Continue reading தூவித்தோழர்கள்-59




