மயில் (Indian peafowl)
எதிர் வீட்டு மாடி பயன்படுத்தாமல் இருப்பதால், ஒரு ஆண் மயில் அங்கு வசிக்கிறது. காலையும் மாலையும் ஒரே அகவலும், ஆடலும் தான். எங்கள் பகுதியில் மயில்களின் எண்ணிக்கை கூடுவதற்கு, இவர்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

ஒரு நாள் காலையில் தோகையை விரிப்பதும், அகவுவதுமாக இருந்தது. சுற்றிலும் பெண் மயில்களே இல்லை. ஒரு மணி நேரம் இதையே செய்து கொண்டிருந்தது.

பகல் நேரங்களில் எங்கு செல்கிறது என்று யோசித்திருக்கிறேன். ஒரு வால் காக்கையை தொடர்ந்து போன போது, அதற்கான விடை கிடைத்தது.

அதே வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் ஓய்வெடுக்கிறது. அதன் அழகிய பளபளக்கும் நீல கழுத்தும், கண்ணைச் சுற்றிய வெள்ளையும், வண்ணக் கொண்டையும், நீளமான தோகையும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. இவ்வளவு அழகிய பறவைக்கு, ஏன் இப்படி ஒரு குரல்?
படித்தறிந்தது
- மயில் மரத்தில் வாழும் பறவையாக இருந்தாலும், தரையில் குழி தோண்டி முட்டையிடும்.
- வெள்ளை மயில்கள் Albino என்று அழைக்கப்படுகிறது. அதற்கான காரணம் Leusicm. இதில் எல்லா வகையான நிறமிகளும் குறைவாக இருக்கும். (Albinism என்பது மெலனின்(melanin) நிறமி மட்டும் இல்லாமல் இருப்பது. )
- இனப்பெருக்க காலத்திற்குப் பின், ஆண்மயில் தன் நீண்ட தொகையை படிப்படியாக உதிர்த்து விடும். இதற்குப் பெயர் Molting. மீண்டும் தோகை முழுவதும் வளர்வதற்கு ஏழு மாதங்கள் ஆகும்.
