பனை உழவாரன் (Asian Palm Swift)
பொள்ளாச்சி தோட்டத்தில் தான், முதன் முதலில் பனை உழவாரன்களை பார்த்தேன். காலையிலும் மாலையிலும் வேகமாக சுற்றி சுற்றி பறந்து, பூச்சி பிடித்துக் கொண்டிருக்கும். முதலில் பார்த்தபோது, பனை உழவாரனின் வால் ஒல்லியாக இருந்தது. Guideல் உள்ள பனை உழவாரன் மாதிரியே இருக்கிறது, ஆனால் வால் வேறு மாதிரி இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே இருந்தபோது, சட்டென்று வாலை விரித்து,பின் மூடி பறந்தது. பறப்பதற்கு உதவியாக, வாலின் வடிவத்தை மாற்ற முடியும் என்று அன்று தான் தெரிந்து கொண்டேன். ஆண், பெண் பறவைகளுக்கு வேறுபாடு இல்லை.

படித்தறிந்தது
- அதன் வால் சட்டென திசையை மாற்றவும், துல்லியமாக பறக்கவும் உதவுகிறது.
- வாழ்வின் பெரும்பாலான நேரம் பறந்து கொண்டே இருக்கும். குட்டையான கால்களை பற்றிக் கொண்டு தொங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.
- முட்டைகளை காற்று மற்றும் பனை ஓலையின் அசைவுகளில் இருந்து பாதுகாக்க, பெண் உழவார பறவை தனது உமிழ்நீரைப் பயன்படுத்தி, கூட்டில் ஒட்டும். கூட்டில் செங்குத்தாக நிமிர்ந்து அமர்ந்து அடைகாக்கும்.
