அக்கா குயில் (Common Hawk Cuckoo)
பொள்ளாச்சி தோட்டத்தில் அக்கா குயிலின் குரலை பலமுறை கேட்டிருந்தாலும், ஒரே ஒரு முறை தான் பார்க்க முடிந்தது. உடலமைப்பு சட்டென்று பார்க்க வல்லூறு போலவே இருந்தாலும், பயந்தது போல் இருக்கும் முகம் காட்டிக் கொடுத்து விடும்.

(Link-eBird checklist )
சாம்பல் நிற இறக்கைகள். மஞ்சள் நிற கருவிழிகள்.வெண்ணிற உடலில் பழுப்புநிற வரிகள். ஆண் பறவை உருவத்தில் சற்று பெரிதாக இருப்பதைத் தவிர, ஆண்,பெண் பறவைகளுக்குள் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால் அழைப்புக்களில் வேறுபாடு உள்ளது.

படித்தறிந்தது
- அக்கா குயிலால் வல்லூறு போல ஒலி எழுப்பவும் முடியும். இதன் மூலம் சிறிய பறவைகள் மற்றும் விலங்குகளை பயமுறுத்தும். இந்த தந்திரம் காட்டுச் சிலம்பன்,சிரிப்பான் ஆகிய பறவைகளின் கூட்டில் முட்டையிடவும் உதவுகிறது.
- இனப்பெருக்க காலத்தில் கேட்கும் இதன் அழைப்பு, வெறும் பாடல் அல்ல. துணையை ஈர்க்க, தனது எல்லையை நிறுவ, ஆண் பறவை இந்த தொடர்ச்சியான அழைப்பைப் பயன்படுத்துகிறது.
- நிலாக் காயும் இரவு நேரங்களிலும் இதன் குரலைக் கேட்க முடியும்.