ஆசிய நீர்பறவைகள் கணக்கெடுப்பு – AWC 2025-26

Vishnupuram Birding Circle, AWC Report

2025 ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கி 2026 பிப்ரவரி வரை நீண்ட, ஆசிய நீர்பறவைகள் கணக்கெடுப்பில் (Asian Waterbird Census) ‘விஷ்ணுபுரம் பறவைகள் வட்டம்’ குழுவினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டோம். இம்முறை இந்தியாவில் eBird செயலி மூலமாக, அதிகாரப்பூர்வமாக AWC  நடத்தப்பட்டிருக்கிறது.

மற்ற கணக்கெடுப்புகளைப் போலன்றி நீர்நிலைகளில் பறவைகளை அவதானித்து, AWC Project-ல் பட்டியலிட்டதும் மேலதிகமாக ஒரு Google படிவத்தை நிரப்ப வேண்டியிருந்தது. நீர்நிலைகளில் கண்ட பறவைகளைப் பற்றிய தகவல்கள் eBird செயலிவழியாகவும், நீர்நிலையைப் பற்றிய தகவல்களைப் படிவம் வழியாகவும் பெற இந்த ஏற்பாடு. எனவே பறவைகளை அவதானிப்பதைப் போலவே பட்டியலுக்கும், படிவத்திற்கும் நேரம் செலவிட வேண்டியிருந்தது. இருப்பினும் இச்செயலின் நல்விளைவுகளைக் கருத்தில் கொண்டு நண்பர்கள் முனைப்புடன் மூன்று மாதங்களில் 125 பட்டியல்களை பதிவேற்றியுள்ளனர். சராசரியாக இரண்டு நாட்களுக்கு மூன்று பட்டியல்கள், விஷ்ணுபுரம் பறவைகள் வட்டம் சார்பாக பதிவேற்றப்பட்டுள்ளது.

ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு இரண்டு வகைகளில் முக்கியமானது.
ஒன்று: இதுவரை பறவைகள் செறிந்த பகுதியாக குறிப்பிடப்படாத நீர்நிலைகளை, நேரில் சென்று கண்டு, பறவைகளை அவதானித்து அதனடிப்படையில் அந்த நீர்நிலை பறவைகள் செறிந்த பகுதியாக இருப்பின் நம்மால் அவற்றை eBird செயலியில் அடையாளப்படுத்தி பட்டியல் பதிவேற்ற முடிகிறது. உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டத்திலிளுள்ள வதட்டூர் ஏரி பறவைகள் செறிந்த பகுதியாக இருந்தும், குழுவின் உறுப்பினர் சென்று காண்பதற்கு முன்வரை eBird செயலியில் ஒருபட்டியல் கூட பதிவு செய்யப்படாமல் இருந்தது.
இரண்டு: இநதியாவில் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கான கொள்கைகள் வகுக்கப்படுவதில் AWC யின் பங்கு குறிப்பிடத்தகுந்ததென அறியப்படுகிறது. எனவே AWC ல் பதியப்படும் ஒவ்வொரு பட்டியலும் ஒருவகையில் அந்த நீர்நிலையை காப்பதற்கான ஒரு அடி முன்னகர்வாக கொள்ளமுடியும்.

அவ்வகையில் விஷ்ணுபரம் பறவைகள் வட்டம் குழுவினருக்கு, 2025-26 ஆண்டு ஆசிய நீர்பறவைகள் கணக்கெடுப்பு ஒரே சமயம் பறவைகளை அவதானிப்பதால் பெரும் உற்சாகமும், நீர்நிலைகளின் நிலையை பதிவு செய்ததால் வந்த மனநிறைவும் என, இரட்டிப்பு மகிழ்ச்சியளித்தாக அமைந்தது.

Trip Reports:


Dec’25: https://ebird.org/tripreport/440333

Jan’26: https://ebird.org/tripreport/482388

Feb’26: https://ebird.org/tripreport/482389