ஒரு பறவையின் குரலுடன் மட்டும் தனித்து இருந்திருக்கிறீர்களா? பதிமூன்று வருடங்களுக்கு முன் ஒரு மாலை பொழுதில் பல கிளிகளின் கீச்சிடலுக்குள் அத்தனை சத்தங்களையும் மீறி தனித்து ஒலித்தது அந்த பறவையின் குரல். முதன்முதலில் நான் அப்போது தான் கவனித்தேன். பின்னர் ஒவ்வொரு மாலையும், அங்கிருக்கும் போது தனித்தோ சேர்ந்தோ ஒலிக்கும் அந்த பறவையின் குரலை கவனிக்காமல் இருக்க முடிந்ததில்லை. அப்பொழுது அது எந்த பறவை என்று பார்க்கத் தோன்றவில்லை. கிராமத்தில், கணவரின் குடும்ப வீடு மச்சு வீடு … Continue reading ஒரு குரல்
Author: preethikaruna
நன்மங்கலம் ஏரி 1-2-2026
பலமுறை குடும்பமாக எங்கள் நண்பர்கள் ஈஸ்வரி-பொன்ராஜ் தம்பதியர் வீட்டிற்கு சென்றிருந்தாலும், இந்த முறை பறவை பார்த்தலுக்காக அவர்களின் வீட்டருகே உள்ள நன்மங்கலம் ஏரிக்கு (தென்மேற்கு பகுதி, சியான் பள்ளி, செம்பாக்கம் அருகே) சென்றது புதிய அனுபவமாக இருந்தது. அவர்களின் மகன் முகேஷ் வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பிற்கு சென்று வந்தவுடன் தன் வீட்டருகே ஏரியில் பறவைகளை பார்த்ததை கூறவும், விஜய் பாரதி அவர்களின் முன்னெடுப்பில் அங்கு செல்ல முடிவானது. விஷ்ணுபுரம் பறவை ஆர்வலர்கள், குழந்தைகள் என குழுவாக … Continue reading நன்மங்கலம் ஏரி 1-2-2026