ஆராவமுது

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பின் அனுபவக்குறிப்பு - திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் - 14-17.01.2026நேரம் நெருங்கிவிட்டது!விண்ணளந்தோன் புன்னைகையுடன், தன் ஒப்பனையறைக்குப் புறப்பட்டார். அறியாத தேவர்களும், அசுரர்களும் கடினமான தொடர் செயலால் களைத்திருந்தனர். வாசுகி இதற்கு மேல் முடியாதென்பது போல் துவண்டிருந்தார். மாந்தாரமலையும் இது எப்போது முடியுமென எண்ணியவாறு சலிப்புடன் சுழன்று கொண்டிருந்தது. கீழே பாற்கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் கடலைக் கடையும் வேகம் கூடியபடியே இருந்ததே தவிற குறையவில்லை. ஆம், தேவர்களும், அசுரர்களும் எதிர்பார்த்திருக்கும் பொருள் தங்கள் வாழ்வையே … Continue reading ஆராவமுது →

தூவித்தோழர்கள்-19

ஊர்த் தேன்சிட்டு (Purple-rumped Sunbird) வீட்டின் எதிரில் ஆடாதொடை புத‌ர் செடி உள்ளது. தினமும் காலையில், அதன் பூக்களில் தேன் குடிக்க ஒரு ஜோடி ஊர்த் தேன்சிட்டு வரும். அதன் ஒலிக்கும், உருவத்திற்கும் சம்பந்தமே இல்லை. அத்தனை குட்டிப் பறவை, சத்தமாக பாடிக் கொண்டே இருக்கும். ஏன் இவ்வளவு சக்தியை வீண் செய்கிறாய் என்று மனதிற்குள் கேட்டுக்கொள்வேன். அதன் பாடலுக்கு காரணமோ பயனோ இருக்கலாம் அல்லது பாடுவது அதற்கு மகிழ்ச்சியை தரலாம்; நான் யார் முடிவு செய்ய‌? … Continue reading தூவித்தோழர்கள்-19 →

தூவித்தோழர்கள்-18

கரும்பருந்து (Black Kite) அதிகாலை நேரம் தவிர மற்ற நேரங்களில், கரும்பருந்துகள் கூட்டமாக வானில் வட்டமிட்டு கொண்டிருப்பதை பார்க்க முடியும். உடல் முழுவதும் பழுப்பு நிறம், அலகின் மேல் பகுதி, கால்களும் மஞ்சள், வளைந்த கூரிய‌ அலகின் பெரும் பகுதி கருப்பு நிறத்திலும் இருக்கும். வால் 'V' வடிவில் இருக்கும். மதிய நேரத்தில் இரு கரும்பருந்துகள், எதிரெதிரே வட்டமாக பறந்து கொண்டிருந்ததை ஒரு முறை பார்த்தோம். ஒரு நாள் காலைநடை சென்றபோது, சாலையின் மறுபுறம் பருந்து பறந்து … Continue reading தூவித்தோழர்கள்-18 →