தூவித்தோழர்கள்-37

செவ்வலகு பூஞ்சிட்டு(Pale-Billed Flowerpecker) தினம் மாலை வீட்டின் பின்புறம் உள்ள தூங்குவாகை மரத்திற்கு செவ்வலகு பூஞ்சிட்டு வரும். மின்னல் போல மிக வேகமாக அங்கும் இங்கும் பறந்து, பூக்களில் உள்ள மலரமுதை அருந்தும். தேன் சிட்டை விட சிறிதாக இருக்கிறது. சாம்பல் வண்ண உடல். சற்றே நிறம் மங்கலான அடிப்புறம். இளஞ்சிவப்பு நிற, கீழ் நோக்கி சற்றே வளைந்த கூர்மையான அலகு. மிகச் சிறிய வால். ஆண் பெண் பறவைகளுக்கிடையே வேறுபாடு இல்லை. இந்தியாவில் காணப்படும் மிகச் … Continue reading தூவித்தோழர்கள்-37 →

தூவித்தோழர்கள்-36

குண்டுக்கரிச்சான் (Oriental Magpie-Robin) பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்தபோது, யானை குடிலருகே அனைவரும் அமர்ந்து பறவைகளுக்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு ஆண் குண்டு கரிச்சான் மர உச்சியில் அமர்ந்து பாட ஆரம்பித்தது. அதன் குரலை ஞாபகம் வைத்துக் கொண்டேன். ஒரு பறவையின் குரலை நினைவில் வைத்தேன், என்ற ஆனந்தம் ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை . அது பாடலை மாற்றி விட்டது. நான் அதிர்ச்சியாகி விட்டேன். ஒரு பறவையே வெவ்வேறு பாடலை பாடும் என்று அதன் … Continue reading தூவித்தோழர்கள்-36 →

தூவித்தோழர்கள்-35

உண்ணிக் கொக்கு(Eastern Cattle Egret) உண்ணிக் கொக்கு கால்நடைகளுடன் இருப்பதை பார்க்கலாம். முழுவதும் வெள்ளை நிறம். மஞ்சள் நிற கூரிய அலகு. கால்கள் கரும்பச்சை நிறம். தூரத்தில் இருந்து பார்க்கும் போது, கருப்பு நிறமாக தெரியும். நடக்கும்போது தலையை முன்னால் நீட்டி நீட்டி செல்கிறது. ஆண், பெண் பறவைகளிடையே வேறுபாடு இல்லை.இதன் பெயர் உண்ணிக் கொக்கு என்றிருந்தாலும் , இது கால்நடைகளின் உண்ணியை சாப்பிடுவதில்லை. மாறாக அவை நடக்கும் போது, பறக்கும் பூச்சிகளை உண்ணுகின்றன. இனப்பெருக்க கால … Continue reading தூவித்தோழர்கள்-35 →

கோடி அம்புகள்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 28.02.2026இது குருஷேத்திரத்தில் நிகழ்ந்தது!தேரோட்டியான கிருஷ்ணன் தேரில் காண்டீபத்தை கைவிட்டு கலக்கத்துடன் நின்றிருந்த அர்ஜூனனைப் பார்த்து இப்படிச் சொன்னார். "பார்த்தா கேள்! இத்துடன் நான் உன் வழியாக உலகத்திற்கு சொல்ல வேண்டிய பதினெட்டு யோகங்களும் முடிவடைந்ததன. நீ இன்னும் குழப்பத்திலிருப்பதால், உனக்கே உனக்கென கடைசியாக ஒன்றைச் சொல்லுகிறேன். கவனத்துடன் கேட்பாயாக" என்றபடி தொடர்ந்தார்."இன்றிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் மேற்கே அவதரிக்கப்போகும் மனிதக் குமாரனை, … Continue reading கோடி அம்புகள் →