தூவித்தோழர்கள்-29

பொறி மார்புச் சிலம்பன் (Puff-throated babbler)  ஆனைகட்டி சத்‍‍‍‍‍‍‍‍-தர்ஷனில் நான், தேவ், மித்து பாப்பா மூவரும், மரத்தில் இருந்த குண்டு கரிச்சானை(Oriental Magpie Robin) பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அருகில் தரையில் இருந்து இனிமையான கீக்கி ஒலி கேட்டது. ஐந்து பறவைகள் கொண்ட சிறு கூட்டத்தை பார்த்தோம். தரையில் இருப்பதாலும், கூட்டமாக கத்திக் கொண்டிருப்பதாலும், அது Babbler ஆக இருக்கலாம். Merlin செயலியில் பார்த்தால் பொறி மார்புச் சிலம்பன் என்று காட்டியது. சாம்பல் நிறப் பறவை.செம்பழுப்பு நிற தலை. … Continue reading தூவித்தோழர்கள்-29 →

தூவித்தோழர்கள்-28

மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow-wattled Lapwing) வெள்ளிமலையில் பறவை பார்த்தல் நடை செல்லும்போது, புத்தருக்கு எதிரில்,வயலுக்கு மேலே உள்ள இடத்தில் ஆள்காட்டியை முதன் முதலில் பார்த்தேன். நித்யவ‌னத்தின் வலது பக்கம் நடந்து சென்றால் குக்குருவான்கள் இருக்கும் ஆலமரம் தாண்டி உள்ள வயலில் ஒரு ஆள்காட்டி வசிக்கிறது. அதன் உரத்த குரல் அடிக்கடி கேட்கும். நீண்ட‌ மஞ்சள் கால்களை கொண்ட‌ புறா அளவுள்ள பறவை. முன் தலையும் வாலும் கருப்பு. உடல் சாம்பல் நிறம். வயிறு பகுதி வெள்ளையாக … Continue reading தூவித்தோழர்கள்-28 →

தூவித்தோழர்கள்-27

கல்லுக்குருவி (Pied Bushchat) பொள்ளாச்சி தோட்டத்தின் சின்ன‌ மருத‌மரத்தில், ஆண் கல்லுக்குருவி அமர்ந்து பாடும். பெரும்பாலும் கருப்பாக உள்ள பறவையின், இறக்கையில் ஒரு வெள்ளைக் கோடு, வாலடியும் வெள்ளை. தேன்சிட்டை விட சற்று பெரிய பறவை. பாடலை கேட்டவுடன் பெண் பறவை வந்து இணைந்து கொள்ளும். தரையில் அங்கும் இங்கும் குதித்துக் குதித்து சென்று இரை தேடும். மதிய நேரங்களில் இவற்றை வேடிக்கை பார்ப்பதே எனது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. பெண் பறவை முழுவதும் சாம்பல் நிறம். … Continue reading தூவித்தோழர்கள்-27 →

தூவித்தோழர்கள்-26

செண்பகம் (Greater Coucal) பறவை பார்த்தல் வகுப்புக்கு வருவதற்கு முன், பெயர் தெரிந்த மிகச் சில பறவைகளில் ஒன்று செம்போத்து. மாநகராட்சியிலிருந்து குப்பையை தரம் பிரித்து வாங்குவதற்கு முன், மக்கும் குப்பைகளை வீட்டின் எதிரே ஒரு குழி தோண்டி அதில் போடுவோம். பகல் நேரங்களில் தவிட்டுக்குருவி, காகம், செம்போத்து ஆகிய பறவைகள் குப்பைக் குழியில் இருந்து உணவையோ இல்லை அருகில் இருக்கும் பூச்சியையோ பிடித்து உண்ணும். வாசல் படியில் அமர்ந்து, அதைப் பார்த்துக் கொண்டே தேவ் சாப்பிடுவான். … Continue reading தூவித்தோழர்கள்-26 →

தூவித்தோழர்கள்-25

நீலவால் பஞ்சுருட்டான்( Blue tailed Bee-eater) அன்னூர் ஏரியின் அருகே நீலவால் பஞ்சுருட்டானை முதன் முதலில் பார்த்தேன். பறந்து சென்று பூச்சி பிடித்து மறுபடியும் மரத்தில் வந்து அமர்ந்தது. சிறிய பஞ்சுரட்டானை விட பெரிதாக இருக்கிறது. தலை பச்சை நிறம். முதுகும் வாலும் நீல நிறம். நீண்ட கூரிய கரு அழகு. கருப்பு நிற கண் பட்டையை ஒட்டி, மெல்லிய நீலக்கோடு உள்ளது. அல‌கின் கீழே மஞ்சள் நிறம்.கழுத்து செம்பழுப்பு நிறம். வால் சிறகின் நடுவில் உள்ள … Continue reading தூவித்தோழர்கள்-25 →