மலரினும் மெல்லிது

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - ஹைதராபாத் இன்று அதிகாலை.... என ஆரம்பிக்கும் முன் முக்கியாகமாக ஒன்று சொல்ல வேண்டியுள்ளது. பின்னர் கட்டுரை செல்லும் போக்கிலிருந்து அது விலக்கிச் செல்வதாக ஆகிவிடக்கூடும். இங்கே 'ஹிரானி ச்சாய்' என்று ஒருவகை தேனீர் தருகிறார்கள். அது இஸ்லாமியர்களின் இந்திரலோக அமிர்தம் என நினைக்கிறேன். என்ன ஒரு சுவை..! எண்ணுகையிலேயே எச்சில் ஊறுகிறது. கட்டுரைக்கு வருவோம். இன்று அதிகாலை, ஹைதராபாதில் இருக்கும் ஹுசைன் ஏரிக்கு பறவைகள் பார்க்கச் சென்றிருந்தேன். இருசக்கர வாடகை … Continue reading மலரினும் மெல்லிது →

சுதந்திரத்தின் எல்லை

பறவைப்பார்த்தல் அனுபவக் குறிப்பு - கீழகொண்டையூர் சிறு வயதில் ஏழுகடல், ஏழுமலை தாண்டி ஒரு கிளியைத் தேடி எனும் கதையை கேட்கும் போது அனைவருக்கும் தானும் அப்படியொரு சாகசப்பயணம் செய்வோம் என தோன்றாமலிருந்திருக்காது. ஆனால் சிலருக்கே அப்படியான பயணங்கள் வாய்த்திருக்கும். அதிலும் எத்தனை பேருக்கு உண்மையிலேயே அதே போன்றதொரு பறவையைத்தேடி அப்பயணம் சாத்தியமாயிருக்கும் எனத் தெரியவில்லை. இதுவரை பறவைகளைப் பார்த்து பட்டியலிடாத இடங்களுக்கு நான் செல்லும் பயணங்கள் அத்தகையதொரு சாகசத்தை சாத்தியமாக்கியிருக்கின்றன. இம்முறை கீழக்கொண்டையூர், திருவள்ளூர் மாவட்டம். … Continue reading சுதந்திரத்தின் எல்லை →

தற்செயல்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - அகமதாபாத் இன்று காலை சபர்மதி ஆற்றின் கரையோரம் பறவைகள் பார்க்க துவங்கியதும் முதலில் கண்டது ஒரு தகைவிளானை (Swallow). சிறகுகளின் வடிவம், சட்டென ஒடிந்து திரும்பும் லாவகம், வெள்ளை அடிவயிறு... நிற்க. வாலிலென்ன இரு கம்பிகளா? என தொலைநோக்கியை சரிசெய்வற்குள் பாலத்தின் அடியே சென்று மறைந்தது. ஏமாற்றத்துடன் சற்று நேரம் காத்திருந்தேன். ஒரு புள்ளி மூக்கு வாத்து (Spot billed duck), சில ஆலாக்கள் (terns) கடந்து சென்றன. நகர … Continue reading தற்செயல் →

ஒன்றும், ஐந்தும்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - வழுதிகைமேடு திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை பறவைகளைப் பார்த்து பதிவு செய்யாத இடங்களை நிரப்புவதற்காக,  வழுதிகைமேடு எனும் கிராமத்திற்கு6 ஜூலை 2025 அன்று காலை புலரிக்கு முன் சென்றிருந்தேன். கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பணைப் பகுதியிலிருந்து பறவைப் பார்த்தல் துவங்கியது. ஆற்றில் நீரோட்டம் நின்றுவிட்டிருந்தது. தடுப்பணைக்கு முன் நீர்த்தேக்கமும் அதற்கு எதிரே பொட்டல்வெளியும் என விரிந்த நிலப்பரப்பு. விரிநிலங்கள் நம்மையும் அகத்தே விரிய வைப்பவை என்பதை அனுபவத்தில் உணரமுடியும். தடுப்பணைக்கு இறங்கிச் … Continue reading ஒன்றும், ஐந்தும் →