ஆராவமுது

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பின் அனுபவக்குறிப்பு - திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் - 14-17.01.2026நேரம் நெருங்கிவிட்டது!விண்ணளந்தோன் புன்னைகையுடன், தன் ஒப்பனையறைக்குப் புறப்பட்டார். அறியாத தேவர்களும், அசுரர்களும் கடினமான தொடர் செயலால் களைத்திருந்தனர். வாசுகி இதற்கு மேல் முடியாதென்பது போல் துவண்டிருந்தார். மாந்தாரமலையும் இது எப்போது முடியுமென எண்ணியவாறு சலிப்புடன் சுழன்று கொண்டிருந்தது. கீழே பாற்கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் கடலைக் கடையும் வேகம் கூடியபடியே இருந்ததே தவிற குறையவில்லை. ஆம், தேவர்களும், அசுரர்களும் எதிர்பார்த்திருக்கும் பொருள் தங்கள் வாழ்வையே … Continue reading ஆராவமுது →

நிலவில் துவங்குதல்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி, சென்னை - 06.12.2025அவ்வப்போது நிலவிலும் துவங்குவோம் நிலவுதான் இருளுக்கும் இடமளிக்கிறது Me (left) with Govindarajan sir (Right) 06.12.2025, சனிக்கிழமை அன்று காலை, சூரியன் ஏரியில் நீராடி எழுவதை பறவைகளுடன் சேர்த்து பார்த்துவிடுவதென்று நானும் கோவிந்தராஜன் சாரும் அவரவர் வீட்டிலிருந்து கொரட்டூர் ஏரிக்கு கிளம்பினோம். இருள் இன்னும் விலகவில்லை. பௌர்ணமி கடந்து ஒரு நாளே ஆவதால், முழுநிலவு தான் தேய்வதை இன்னும் அறியவில்லை. ஏரியில் பறவைகள் … Continue reading நிலவில் துவங்குதல் →

முன் நின்று

கானமயில் ஓவியம் - Great indian Bustard - By Mr. Jayaraj S -  "Winged non sapiens - A group show of ecological fine artists" - Arthur space, Kalpa Druma - Chennai - 07.Dec. 2025 இந்த ஓவியம் பற்றி பார்வையாளனாகிய என் எண்ணங்களை தொகுத்து எழுத வேண்டும் எனத் தோன்றியது. காட்சி அரங்கில் ஒவ்வொரு ஓவியமாக பார்த்து, அவற்றின் அழகை, நேர்த்தியை, நுட்பங்களை வியந்தபடி வருகையில் … Continue reading முன் நின்று →

பரிசு

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - புழல் ஏரி, சென்னை - 20.10.2025ஒரு உரையாடலின் போது கவிஞர் சாம்ராஜ் சொன்னார், "நம் குழந்தைகள் ஆச்சரியமற்றவர்களாகிக் கொண்டிருக்கின்றனர், எதைச் சொல்லியும், காண்பித்தும் அவர்களை ஆச்சரியப்படுத்த முடியவில்லை" என்று. ஏன் குழந்தைகள் ஆச்சரியப்படுவதில்லை?மேடையில் மாயவித்தைகள் நிகழ்த்தும் ஒருவரை எவ்வகையிலும் அந்த வித்தைகள் ஆச்சரியப்படுத்தப் போவதில்லை. காற்றிலிருந்து புறா வெளிப்பட்டாலும், கண்முன்னே யானை காற்றில் மறைந்தாலும், ஆச்சரியம் பார்வையாளருக்கே. அதை நிகழ்த்துபவருக்கல்ல. ஏனெனில் மாயத்தின் பின்னிருக்கும் தந்திரம் என்னவென்று அவருக்குத் தெரியும். … Continue reading பரிசு →

ஒரு கால் சூரியன்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - அண்ணாநகர், சென்னை 'உனக்கு சந்தோஷம் தருவது எதுவோஅதுவே உனக்கு சூரியன்உதாரணமாக ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்ஒரு பப்பாளிப்பழம்ஒரு நண்பனின் முகம்ஒரு டம்ளர் தண்ணீர்இன்னும்காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்....' சூரியமறைவுப்பிரதேசம் - தேவதேவன். கடந்த ஒரு வாரம் என் வாழ்வின் சோர்வான நாட்கள். அம்மா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நானும் உடன் தங்க வேண்டியதாயிற்று. தமிழகமே ஐந்து நாள் விடுமுறையில்  என்ன செய்வதென்றறியாமல் அலை மோதிக் கொண்டிருக்க, போட்டிருந்த அனைத்து திட்டங்களையும் ஒத்திவைத்துவிட்டு … Continue reading ஒரு கால் சூரியன் →