தவிட்டுக்குருவி (Yellow-billed Babbler) வீட்டை விட்டு வெளியில் வந்தாலே, தவிட்டுக்குருவிக்கூட்டத்தை பார்க்காமல் இருக்க முடியாது. நாள் முழுவதும் அதன் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். பல சமயம் இரு கூட்டங்களை சேர்ந்த பறவைகளும் சேர்ந்து கூச்சலிடும். மற்ற சமயங்களில் ஓரிரு பறவையின் மெல்லிய, தொடர்ச்சியான ஒலி கேட்கும். தன் சிறகுகளை கோதி கொள்வதையும், கூட்டத்தின் மற்ற பறவைகளுக்கு தன் அலகால் கோதிவிடுவதையும் பார்க்க முடியும். வளர்ந்த குஞ்சுக்கும் ஊட்டி விடும். ஆண் பெண் பறவைகளுக்கிடையே வேறுபாடு இல்லை. சாம்பல் … Continue reading தூவித்தோழர்கள்-15
தூவித்தோழர்கள்-14
செம்மார்பு குக்குருவான் (Coppersmith barbet) வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பில், முதன்முதலில் செம்மார்பு குக்குருவானின் குரலைக் கேட்டேன். கொல்லன், தன் உலை களத்தில் தொடர்ந்து அடித்துக கொண்டே இருப்பது போல், சீரான இடைவெளியில் உள்ள அதன் குரல், சட்டென்று மனதில் பதிந்து விட்டது. ஆசிரியர்கள் பறவை பார்க்க கூட்டிச் சென்ற போதும் தொடர்ந்து, அதன் குரலைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். இசை வகுப்பு இடைவேளையின்போது, நண்பர்களுடன் பறவை பார்க்க சென்றோம். நித்யவன வாசலின் அருகேயிருந்த அத்தி மரத்தில் … Continue reading தூவித்தோழர்கள்-14
தூவித்தோழர்கள்-13
அக்கா குயில் (Common Hawk Cuckoo) பொள்ளாச்சி தோட்டத்தில் அக்கா குயிலின் குரலை பலமுறை கேட்டிருந்தாலும், ஒரே ஒரு முறை தான் பார்க்க முடிந்தது. உடலமைப்பு சட்டென்று பார்க்க வல்லூறு போலவே இருந்தாலும், பயந்தது போல் இருக்கும் முகம் காட்டிக் கொடுத்து விடும். (Link-eBird checklist ) சாம்பல் நிற இறக்கைகள். மஞ்சள் நிற கருவிழிகள்.வெண்ணிற உடலில் பழுப்புநிற வரிகள். ஆண் பறவை உருவத்தில் சற்று பெரிதாக இருப்பதைத் தவிர, ஆண்,பெண் பறவைகளுக்குள் பெரிய வேறுபாடு இல்லை. … Continue reading தூவித்தோழர்கள்-13
தூவித்தோழர்கள்-12
சுடலைக்குயில் (Jacobin/Pied Cuckoo) வெளியில் சென்றுவிட்டு, எங்கள் தெருவில் வரும்போது, என் நேரெதிரே இருந்து வெள்ளையும் கருப்புமாக ஒரு பறவை பறந்து வந்து, தலைக்கு மேல் மின்சார கம்பியில் அமர்ந்தது. கொண்டையை பார்த்தவுடன் தெரிந்து விட்டது, அது சுடலைக்குயில் என்று. ஒரு நிமிடம் அமர்ந்திருந்தது; பின் பறந்து சென்று விட்டது. பறவை பார்த்தலின் மிகப்பெரிய வரமே, இதுபோன்ற தருணங்கள் தான். இயற்கை கொடுத்த பரிசு போல, எங்கிருந்தோ வரும். வந்த சுவடே இல்லாமல் மறைந்தும் போய்விடும். ஆனால் … Continue reading தூவித்தோழர்கள்-12
2025 பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு
இந்த பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு குழுமத்துக்கு முக்கியமான ஒன்றாக அமைந்தது. முதன்முறையாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நண்பர்கள் பங்கெடுத்தனர். கூடவே ஆந்திரா, கர்நாடகா, துபாய், ஸ்விஸ், அமெரிக்காவிலிருந்த நண்பர்களும் இணைந்துகொண்டனர். இந்த நிகழ்வை வாய்ப்பாகக்கொண்டு Ebird தளத்தில் பட்டியல் பதிவேற்றுதல் பற்றி பயிற்சியும் கொடுத்தோம். புதிய நண்பர்களுக்கு இது வாய்ப்பாக அமைந்தது. மொத்தம் 134 பட்டியல்கள் வழியே 180 பறவை இனங்கள் பதிவிடப்பட்டுள்ளன. https://ebird.org/tripreport/319873
