தூவித்தோழர்கள்-18

கரும்பருந்து (Black Kite) அதிகாலை நேரம் தவிர மற்ற நேரங்களில், கரும்பருந்துகள் கூட்டமாக வானில் வட்டமிட்டு கொண்டிருப்பதை பார்க்க முடியும். உடல் முழுவதும் பழுப்பு நிறம், அலகின் மேல் பகுதி, கால்களும் மஞ்சள், வளைந்த கூரிய‌ அலகின் பெரும் பகுதி கருப்பு நிறத்திலும் இருக்கும். வால் 'V' வடிவில் இருக்கும். மதிய நேரத்தில் இரு கரும்பருந்துகள், எதிரெதிரே வட்டமாக பறந்து கொண்டிருந்ததை ஒரு முறை பார்த்தோம். ஒரு நாள் காலைநடை சென்றபோது, சாலையின் மறுபுறம் பருந்து பறந்து … Continue reading தூவித்தோழர்கள்-18 →

தூவித்தோழர்கள்-17

பனங்காடை (Indian Roller) எனக்கு பறவை பார்த்தலில் ஆர்வம் வந்ததற்கான காரணம் பனங்காடை தான். கருப்பு நிற அல‌கு, தலை, சிறகு, வால் ஆகியவற்றில் பல வகையான நீலம், கழுத்து மற்றும் மார்பில் வெள்ளை நிற தீற்றல்களுடன் சாம்பல் நிறம் கொண்ட பறவை. பறக்கும் போது, தெரிந்த பலவகையான நீல வண்ணங்களில் மனம் மயங்கினேன். தென்னை மர பொந்தில், அமர்ந்திருந்ததை ஒரு முறை பார்த்தேன். வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்த போது, அதன் தனித்துவமான, பறந்து … Continue reading தூவித்தோழர்கள்-17 →

தூவித்தோழர்கள்-16

தங்க மாங்குயில் (Indian Golden Oriole) வீட்டினுள் வேலை செய்தபோது, இதுவரை கேட்டிராத புதிய ’கா கா குக்கூ’ என்ற குரல் கேட்டது. Merlinல் Sound Id போட்ட போது தங்க மாங்குயில் என்று காட்டியது. உடனே வெளியில் சென்றேன். வீட்டின் பின்புறத்தில் உள்ள தூங்கு வாகை மரத்தில், ஒரு ஜோடி தங்க மாங்குயில்கள் அமர்ந்து கூவிக் கொண்டிருந்தன. தங்க மாங்குயில்– பெயருக்கு ஏற்ற மாதிரி பொன் மஞ்சள் நிற உடல், கண்ணைச் சுற்றியும் இறகிலும் கருப்பு, … Continue reading தூவித்தோழர்கள்-16 →

நிலவில் துவங்குதல்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி, சென்னை - 06.12.2025அவ்வப்போது நிலவிலும் துவங்குவோம் நிலவுதான் இருளுக்கும் இடமளிக்கிறது Me (left) with Govindarajan sir (Right) 06.12.2025, சனிக்கிழமை அன்று காலை, சூரியன் ஏரியில் நீராடி எழுவதை பறவைகளுடன் சேர்த்து பார்த்துவிடுவதென்று நானும் கோவிந்தராஜன் சாரும் அவரவர் வீட்டிலிருந்து கொரட்டூர் ஏரிக்கு கிளம்பினோம். இருள் இன்னும் விலகவில்லை. பௌர்ணமி கடந்து ஒரு நாளே ஆவதால், முழுநிலவு தான் தேய்வதை இன்னும் அறியவில்லை. ஏரியில் பறவைகள் … Continue reading நிலவில் துவங்குதல் →

முன் நின்று

கானமயில் ஓவியம் - Great indian Bustard - By Mr. Jayaraj S -  "Winged non sapiens - A group show of ecological fine artists" - Arthur space, Kalpa Druma - Chennai - 07.Dec. 2025 இந்த ஓவியம் பற்றி பார்வையாளனாகிய என் எண்ணங்களை தொகுத்து எழுத வேண்டும் எனத் தோன்றியது. காட்சி அரங்கில் ஒவ்வொரு ஓவியமாக பார்த்து, அவற்றின் அழகை, நேர்த்தியை, நுட்பங்களை வியந்தபடி வருகையில் … Continue reading முன் நின்று →