தூவித்தோழர்கள்-10

Shikra (வல்லூறு) ஒரு நாள் அதிகாலை, அதுவரை கேட்டிராத கிகீ என்ற சத்தம் கேட்டது. மெர்லினில் போட்ட போது வல்லூறு என்று வந்தது. உடனே வெளியே சென்று பார்த்தால், கண்ணில் படவில்லை. ஒருநாள் காலை பறவை பார்த்துக் கொண்டிருக்கும் போது, வீட்டில் சுவற்றிலேயே அமர்ந்திருந்தது. வெகு நேரம் அங்கு நின்று கவனித்தது, பின், பறந்து சென்று ஒரு கம்பியில் அமர்ந்தது. இப்பொழுது தினமும் பார்க்க முடிகிறது. பள்ளிக்கூடம் கிளம்பும் நேரத்தில், இதன் குரல் கேட்கும். நிமிர்ந்து பார்த்தால், … Continue reading தூவித்தோழர்கள்-10 →

தூவித்தோழர்கள்-9

சிறிய பஞ்சுருட்டான் (Asian Green Bee-eater) காலை வேளைகளில் பொள்ளாச்சி தோட்டத்தில், வேலி ஓரமாக அமர்ந்து பூச்சி பிடிக்கும். இது என்ன பறவை? சிறிதான‌ கிளி போல இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். வகுப்பிற்கு வந்த பிறகுதான் தெரிந்தது, இதன் பெயர் சிறிய பஞ்சுருட்டான் என்று. அமரும் போது, பிறை வடிவில் அதன் பச்சை நிற இறக்கையை விரிப்பது பேரழகு. தேவ் 'தேனி சாப்பிடும் போது, அதன் கொடுக்கு பஞ்சுருட்டானை பாதிக்காதா?' என்று கேட்டான். படித்த போது … Continue reading தூவித்தோழர்கள்-9 →

தூவித்தோழர்கள்-8

பனை உழவாரன் (Asian Palm Swift) பொள்ளாச்சி தோட்டத்தில் தான், முதன் முதலில் பனை உழவாரன்களை பார்த்தேன். காலையிலும் மாலையிலும் வேகமாக சுற்றி சுற்றி பறந்து, பூச்சி பிடித்துக் கொண்டிருக்கும். முதலில் பார்த்தபோது, பனை உழவாரனின் வால் ஒல்லியாக இருந்தது. Guideல் உள்ள‌ பனை உழவாரன் மாதிரியே இருக்கிறது, ஆனால் வால் வேறு மாதிரி இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே இருந்தபோது, சட்டென்று வாலை விரித்து,பின் மூடி பறந்தது. பறப்பதற்கு உதவியாக, வாலின் வடிவத்தை மாற்ற முடியும் … Continue reading தூவித்தோழர்கள்-8 →

தூவித்தோழர்கள்-7

புள்ளி ஆந்தை (Spotted Owlet) பொள்ளாச்சி தோட்டத்தின் வெளியே நானும், தேவ்வும் நடந்து கொண்டு இருந்த போது, வெகு அருகில் வேப்ப மரத்தில் புள்ளி ஆந்தை அமர்ந்திருந்தது. நாங்கள் பார்த்தவுடன் தலையை உடம்புக்குள் இழுத்து, ஒளிந்து கொள்ள முயற்சி செய்தது. அடுத்த வேப்ப மரத்திற்கு பறந்து சென்று அமர்ந்தது. அங்கிருந்து நாங்கள் பார்க்கிறோமா என்று எட்டிப் பார்த்தது. நாங்கள் அதை கவனிக்கிறோம் என்று தெரிந்தவுடன், பறந்து சென்று விட்டது. ஆந்தையின் கண்களை நேருக்கு நேர், அருகில் பார்த்தது … Continue reading தூவித்தோழர்கள்-7 →

பரிசு

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - புழல் ஏரி, சென்னை - 20.10.2025ஒரு உரையாடலின் போது கவிஞர் சாம்ராஜ் சொன்னார், "நம் குழந்தைகள் ஆச்சரியமற்றவர்களாகிக் கொண்டிருக்கின்றனர், எதைச் சொல்லியும், காண்பித்தும் அவர்களை ஆச்சரியப்படுத்த முடியவில்லை" என்று. ஏன் குழந்தைகள் ஆச்சரியப்படுவதில்லை?மேடையில் மாயவித்தைகள் நிகழ்த்தும் ஒருவரை எவ்வகையிலும் அந்த வித்தைகள் ஆச்சரியப்படுத்தப் போவதில்லை. காற்றிலிருந்து புறா வெளிப்பட்டாலும், கண்முன்னே யானை காற்றில் மறைந்தாலும், ஆச்சரியம் பார்வையாளருக்கே. அதை நிகழ்த்துபவருக்கல்ல. ஏனெனில் மாயத்தின் பின்னிருக்கும் தந்திரம் என்னவென்று அவருக்குத் தெரியும். … Continue reading பரிசு →