செம்மார்பு குக்குருவான் (Coppersmith barbet) வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பில், முதன்முதலில் செம்மார்பு குக்குருவானின் குரலைக் கேட்டேன். கொல்லன், தன் உலை களத்தில் தொடர்ந்து அடித்துக கொண்டே இருப்பது போல், சீரான இடைவெளியில் உள்ள அதன் குரல், சட்டென்று மனதில் பதிந்து விட்டது. ஆசிரியர்கள் பறவை பார்க்க கூட்டிச் சென்ற போதும் தொடர்ந்து, அதன் குரலைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். இசை வகுப்பு இடைவேளையின்போது, நண்பர்களுடன் பறவை பார்க்க சென்றோம். நித்யவன வாசலின் அருகேயிருந்த அத்தி மரத்தில் … Continue reading தூவித்தோழர்கள்-14
Author: Rajeshwari Raj
தூவித்தோழர்கள்-13
அக்கா குயில் (Common Hawk Cuckoo) பொள்ளாச்சி தோட்டத்தில் அக்கா குயிலின் குரலை பலமுறை கேட்டிருந்தாலும், ஒரே ஒரு முறை தான் பார்க்க முடிந்தது. உடலமைப்பு சட்டென்று பார்க்க வல்லூறு போலவே இருந்தாலும், பயந்தது போல் இருக்கும் முகம் காட்டிக் கொடுத்து விடும். (Link-eBird checklist ) சாம்பல் நிற இறக்கைகள். மஞ்சள் நிற கருவிழிகள்.வெண்ணிற உடலில் பழுப்புநிற வரிகள். ஆண் பறவை உருவத்தில் சற்று பெரிதாக இருப்பதைத் தவிர, ஆண்,பெண் பறவைகளுக்குள் பெரிய வேறுபாடு இல்லை. … Continue reading தூவித்தோழர்கள்-13
தூவித்தோழர்கள்-12
சுடலைக்குயில் (Jacobin/Pied Cuckoo) வெளியில் சென்றுவிட்டு, எங்கள் தெருவில் வரும்போது, என் நேரெதிரே இருந்து வெள்ளையும் கருப்புமாக ஒரு பறவை பறந்து வந்து, தலைக்கு மேல் மின்சார கம்பியில் அமர்ந்தது. கொண்டையை பார்த்தவுடன் தெரிந்து விட்டது, அது சுடலைக்குயில் என்று. ஒரு நிமிடம் அமர்ந்திருந்தது; பின் பறந்து சென்று விட்டது. பறவை பார்த்தலின் மிகப்பெரிய வரமே, இதுபோன்ற தருணங்கள் தான். இயற்கை கொடுத்த பரிசு போல, எங்கிருந்தோ வரும். வந்த சுவடே இல்லாமல் மறைந்தும் போய்விடும். ஆனால் … Continue reading தூவித்தோழர்கள்-12
தூவித்தோழர்கள்-11
கரிச்சான் (Black Drongo) ஒரு கம்பியில் அமர்ந்திருந்த காக்கையை, சுற்றி சுற்றி பறந்து துரத்தி விட்டபின், கரிச்சான் அந்த இடத்தில் அமர்ந்து கொண்டது .வகுப்பில் 'வலிமை குறைந்த பறவைகள், கரிச்சான்களின் கூடுகளுக்கு அருகில் தம்முடைய கூட்டை பாதுகாப்புக் கருதி அமைத்துக்கொள்ளும். தன் எல்லைக்குள் வரும் பெரிய பறவைகளையும் கரிச்சான்கள் தாக்கும்' என்று சொன்னது நினைவுக்கு வந்தது. மின்னும் கரிய நிறம். மெலிந்த உடல். நீண்ட பிளவுள்ள வால். மாலை வேளைகளில் தண்ணீர் தொட்டி அருகில் உள்ள T … Continue reading தூவித்தோழர்கள்-11
தூவித்தோழர்கள்-10
Shikra (வல்லூறு) ஒரு நாள் அதிகாலை, அதுவரை கேட்டிராத கிகீ என்ற சத்தம் கேட்டது. மெர்லினில் போட்ட போது வல்லூறு என்று வந்தது. உடனே வெளியே சென்று பார்த்தால், கண்ணில் படவில்லை. ஒருநாள் காலை பறவை பார்த்துக் கொண்டிருக்கும் போது, வீட்டில் சுவற்றிலேயே அமர்ந்திருந்தது. வெகு நேரம் அங்கு நின்று கவனித்தது, பின், பறந்து சென்று ஒரு கம்பியில் அமர்ந்தது. இப்பொழுது தினமும் பார்க்க முடிகிறது. பள்ளிக்கூடம் கிளம்பும் நேரத்தில், இதன் குரல் கேட்கும். நிமிர்ந்து பார்த்தால், … Continue reading தூவித்தோழர்கள்-10