தூவித்தோழர்கள்-9

சிறிய பஞ்சுருட்டான் (Asian Green Bee-eater) காலை வேளைகளில் பொள்ளாச்சி தோட்டத்தில், வேலி ஓரமாக அமர்ந்து பூச்சி பிடிக்கும். இது என்ன பறவை? சிறிதான‌ கிளி போல இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். வகுப்பிற்கு வந்த பிறகுதான் தெரிந்தது, இதன் பெயர் சிறிய பஞ்சுருட்டான் என்று. அமரும் போது, பிறை வடிவில் அதன் பச்சை நிற இறக்கையை விரிப்பது பேரழகு. தேவ் 'தேனி சாப்பிடும் போது, அதன் கொடுக்கு பஞ்சுருட்டானை பாதிக்காதா?' என்று கேட்டான். படித்த போது … Continue reading தூவித்தோழர்கள்-9 →

தூவித்தோழர்கள்-8

பனை உழவாரன் (Asian Palm Swift) பொள்ளாச்சி தோட்டத்தில் தான், முதன் முதலில் பனை உழவாரன்களை பார்த்தேன். காலையிலும் மாலையிலும் வேகமாக சுற்றி சுற்றி பறந்து, பூச்சி பிடித்துக் கொண்டிருக்கும். முதலில் பார்த்தபோது, பனை உழவாரனின் வால் ஒல்லியாக இருந்தது. Guideல் உள்ள‌ பனை உழவாரன் மாதிரியே இருக்கிறது, ஆனால் வால் வேறு மாதிரி இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே இருந்தபோது, சட்டென்று வாலை விரித்து,பின் மூடி பறந்தது. பறப்பதற்கு உதவியாக, வாலின் வடிவத்தை மாற்ற முடியும் … Continue reading தூவித்தோழர்கள்-8 →

தூவித்தோழர்கள்-7

புள்ளி ஆந்தை (Spotted Owlet) பொள்ளாச்சி தோட்டத்தின் வெளியே நானும், தேவ்வும் நடந்து கொண்டு இருந்த போது, வெகு அருகில் வேப்ப மரத்தில் புள்ளி ஆந்தை அமர்ந்திருந்தது. நாங்கள் பார்த்தவுடன் தலையை உடம்புக்குள் இழுத்து, ஒளிந்து கொள்ள முயற்சி செய்தது. அடுத்த வேப்ப மரத்திற்கு பறந்து சென்று அமர்ந்தது. அங்கிருந்து நாங்கள் பார்க்கிறோமா என்று எட்டிப் பார்த்தது. நாங்கள் அதை கவனிக்கிறோம் என்று தெரிந்தவுடன், பறந்து சென்று விட்டது. ஆந்தையின் கண்களை நேருக்கு நேர், அருகில் பார்த்தது … Continue reading தூவித்தோழர்கள்-7 →

தூவித்தோழர்கள்-6

வால் காக்கை (Rufous treepie) வால் காக்கையை பற்றி வெள்ளிமலை வகுப்பிற்கு வந்த பின் தான் தெரிந்துகொண்டேன். வீட்டின் அருகே பறவை பார்த்துக் கொண்டிருந்தபோது, தென்னை மரத்தில் அமர்ந்திருந்து. இத்தனை வருடமாக, அது இங்கே தான் இருந்திருக்கும், ஆனால் ஒரு முறை கூட அதை கவனித்ததே இல்லை. காலை நேரங்களில், வீட்டின் எதிரில் உள்ள பலா மரத்தினுள்ளே இருந்து வருவதை பார்க்கலாம். காக‌த்தைப் போன்ற முகம், பிரவுன், வெள்ளை, கருப்பு கலந்த இறக்கைகள். நீண்ட வாலின் நுனியில் … Continue reading தூவித்தோழர்கள்-6 →

தூவித்தோழர்கள்-5

காகம் (House Crow) வீட்டின் அருகே,மக்கும் குப்பைகளை போட ஒரு குழி இருந்தது. முட்டை மஞ்சள் கருவை, அதில் போடுவது வழக்கம். அதைத் தெரிந்து கொண்ட காகங்கள், என் கணவர் மஞ்சள் கருவை போட போகும்போது, காத்திருந்து அதை சாப்பிட்டன. அதை பார்த்த பின், நேரடியாக‌ காகத்திற்கு போட ஆரம்பித்தோம். சரியாக‌ ஏழரை மணிக்கு, காகங்கள் காத்திருக்க ஆரம்பிக்கும். சுமார் ஐந்து வருடங்களாக, இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்ற காகங்கள் அனைத்தும் மின்சார கம்பியில் அமர்ந்திருக்கும் போது, … Continue reading தூவித்தோழர்கள்-5 →