சாம்பல் இருவாச்சி (Indian Gray Hornbill) ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு அழகு. அதற்கென்று தனித்துவமான குணங்களும் உண்டு. ஆனால் ஏதோ சில காரணங்களால், சில பறவைகள் பித்து பிடிக்க வைக்கிறது. இந்த சாம்பல் இருவாச்சி எனக்கு அப்படிப்பட்ட பறவைகளுள் ஒன்று. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத, மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் பறவை. 2024 மே பறவை பார்த்தல் வகுப்பில், ஈஸ்வர் Sir ருடன் பறவை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒன்றன்பின் ஒன்றாக ஒரு … Continue reading தூவித்தோழர்கள்-48
Author: Rajeshwari Raj
தூவித்தோழர்கள்-47
நீலமேனி ஈப்பிடிப்பான் (Verditer Flycatcher) டிசம்பர் மாதம் நடந்த தாவரவியல் வகுப்பில் கலந்து கொண்ட குழந்தைகள் சேர்ந்து, காலையில் பறவை பார்க்க சென்றனர். அப்போது முதல் முறையாக ஒரு பறவையை பார்த்தனர். Merlin செயலியில் துலாவி, இதுவாக இருக்கலாம் என்று முடிவு செய்தனர். யானை குடிலுக்கு செல்லும் வழியில், மின்சார கம்பியில் மிக அருகில் நீலமேனி ஈப்பிடிப்பான் அமர்ந்திருந்தது. எனக்கு பார்த்தவுடன் தெரிந்து விட்டது, காலையில் குழந்தைகள் பார்த்த பறவை இது தான் என்று. பஞ்சுருட்டான் அளவுள்ள … Continue reading தூவித்தோழர்கள்-47
தூவித்தோழர்கள்-46
கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher) சென்னை வீட்டின் அருகே, ஒரு தாமரைக் குளம் உண்டு. ஸ்ரீயின் பள்ளி வேன் நிறுத்தம், அங்கு உள்ளதால், தினமும் காலையில் நானும் அவளும் அங்கு காத்திருப்போம். ஒரு நாள் குளத்திற்கு மேலே, பறந்து கொண்டிருந்த கருப்பு வெள்ளை மீன் கொத்தியை பார்த்தோம். ஒரே இடத்தில் பறந்தபடியே, நீரை ஆராய்ச்சி செய்தது. சட்டென்று இறக்கைகளை மடித்து, நீரில் பாய்ந்து, மீனுடன் பறந்து சென்றது. அதற்குப் பின், சுமார் பத்து ஆண்டுகள் கழித்து, … Continue reading தூவித்தோழர்கள்-46
தூவித்தோழர்கள்-45
மணிப்புறா(Spotted Dove) வெள்ளி மலையில் மிகவும் பரவலாக காணப்படும் பறவைகளின் ஒன்று. மின்சார கம்பி, மரம் அல்லது தரையில் மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். 'கூ , கூ , குக்ரூ' என்று குறுகுறுக்கும். அளவில் சிறிதான புறா. நீண்ட, சதுர வடிவ நுனி கொண்ட வால். கழுத்தில் காணப்படும் கருப்பு வெள்ளை புள்ளிகள், இதன் தனித்துவமான அடையாளம். கருப்பு அலகு. கண்கள் இளஞ்சிவப்பு. மேல் பகுதி சாம்பலும் பழுப்பும் கலந்த நிறம். அடிவயிறு இளஞ்சிவப்பு கலந்த சாம்பல் … Continue reading தூவித்தோழர்கள்-45
தூவித்தோழர்கள்- 44
நீலப் பைங்கிளி (Malabar Parakeet) வெள்ளிமலையில் எப்போது பறவை பார்க்க சென்றாலும், தவறாமல் பார்க்கும் பறவைகளுள் ஒன்று நீலப் பைங்கிளி. பச்சை நிற மரங்களின் பின்னணியில், இதன் நீல நிறம் தனித்து தெரியும். ஆலடி அமர்ந்திருந்த போது மிக அருகே ஒரு ஜோடி பறந்து சென்றது. கிளிகள் பறந்து செல்லும் போது, கூட்டத்தினருடன் தொடர்பில் இருக்கவும், வழி தவறி விடாமல் இருக்கவும், கூவிக்கொண்டே செல்கின்றன. தாவரவியல் வகுப்பு இடைவேளையில் குழந்தைகள் பறவை பார்த்தனர். ஒரே நேரத்தில் கூட்டமாக … Continue reading தூவித்தோழர்கள்- 44




