தூவித்தோழர்கள்-43

நீலக்கண்ணி (Blue-faced Malkoha) வெள்ளிமலைக்கு வந்தபின் தெரிந்து கொண்ட பறவைகளில் ஒன்று நீலக்கண்ணி. இதன் ஆங்கில பேரான Malkoha, எனக்கு பால்கோவாவை நினைவுபடுத்தியது. சிங்களத்தில் Mal என்றால் பூ; Koha என்றால் குயில். பூங்குயில் என்ற அழகான அர்த்தத்தை பின்பு தெரிந்து கொண்டேன். ஆசிரியர்களுடன் பறவைகளுக்காக காத்திருக்கும் போது, இதை முதன் முதலில் பார்த்தேன். செம்போத்தை நினைவு படுத்தியது. செம்பழுப்பு வண்ண சிறகுகளுக்கு பதில், மின்னும் கரும் பச்சையும், கரு நீலமும் கலந்த சிறகுகள். சாம்பல் நிறத் … Continue reading தூவித்தோழர்கள்-43 →

தூவித்தோழர்கள்-42

ஊதாத் தேன்சிட்டு(Purple Sunbird) வீட்டருகில் தினமும் பார்க்கக்கூடிய பறவைகளுள் ஒன்று. காலையும் மாலையும் ஜோடியாக தூங்குவாகை மரத்திற்கு வரும். அதன் குரலை தொடர்ச்சியாக கேட்க முடியும். ஓரிடத்தில் நில்லாமல், பறந்து கொண்டே இருக்கும். ஆண் பறவை மின்னும் கரு ஊதா நிறத்தில் காட்சியளிக்கும். உண்மையில் இதன் நிறம் ஊதா அல்ல. இதை விளக்கும் அருமையான காணொளி. இறகுதிர் காலத்தில் மஞ்சளும் கலந்து இருக்கும். பெண் பறவையின் மேல் புறம் அடர் நிறத்திலும், அடிப்புறம் மங்கலான நிறத்திலும் இருக்கும். … Continue reading தூவித்தோழர்கள்-42 →

தூவித்தோழர்கள்-41

குயில் (Asian Koel) வீட்டின் அருகில் மிக எளிதாக காணக்கூடிய பறவை குயில். ஜோடியாக தூங்குவாகை மரத்தில் அமர்ந்திருப்பதை பார்க்க முடியும். பறந்து செல்லும் பெண் குயிலின் பின்னாலேயே, ஆண் குயில் செல்லும். வேகமாக இறக்கையை அடித்துக் கொண்டு நேர்கோட்டில் பறக்கும். காகத்தைப் போன்ற கரிய உடம்பு. சிவப்பு நிறக் கண். அகலமான கூர்மையான அலகு. பழுப்பு நிறத்தில் வெண் வரிகளும், வெண் புள்ளிகளும் கொண்டிருப்பது பெண் பறவை. காலையும் மாலையும் இவற்றின் கூவுதலை தொடர்ச்சியாக கேட்க … Continue reading தூவித்தோழர்கள்-41 →

தூவித்தோழர்கள்-40

வெண்புருவ சின்னான்(White-browed Bulbul) வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்த போது தான், இப்பறவையை முதன் முதலில் பார்த்தேன். பெண்ணாடம் வீட்டருகில் தினமும் வருகிறது. வெள்ளி மலையில் தொலைவில் பார்த்த பறவையை, அருகில் கருவேப்பிலை மரத்தில் ஜோடியாக பார்த்தேன். கூச்சலிட்டுக்கொண்டு இங்கிருந்து தூங்கு வாகை மரத்திற்கு பறந்தது. அங்கிருந்து மறுபடியும் இங்கு வந்து அமர்ந்தது. இதை தொடர்ந்து சிறிது நேரம் செய்த பின் பறந்து விட்டது. ©Albin Jacob வெண்ணிற புருவம். குட்டையான அகலமான அலகு . … Continue reading தூவித்தோழர்கள்-40 →

தூவித்தோழர்கள்-39

வெண்மார்பு மீன் கொத்தி(White-throated Kingfisher) கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சென்றிருந்தபோது, தொடர்ச்சியாக காலையிலும் மாலையிலும் வெண்மார்பு மீன்கொத்தியின் குரலை கேட்க முடிந்தது. எங்கு வெளியில் சென்றாலும், மற்ற பறவைகளின் குரலை தாண்டி, இதன் குரல் கேட்டது. மின்சாரக் கம்பியில் அமர்ந்திருந்ததை பார்க்கவும் முடிந்தது. தலை மற்றும் அடிவயிறு பழுப்பு நிறம் . முதுகுப்பகுதி அழகிய நீலம். தொண்டை வெள்ளை. நீண்ட, அகலமான சிவப்பு அலகு மற்றும் கால்கள். பெண் பறவையின் பழுப்பு நிறம் சற்று மங்கி இருப்பதை … Continue reading தூவித்தோழர்கள்-39 →