காலை நடை செல்லும் போது, டான் போஸ்கோ பள்ளியின் பின்புறம், பல பறவைகளை பார்த்திருக்கிறேன். Dawn Chorus நிகழ்ச்சிக்கு, அங்கு சென்று பறவைகளின் குரல்களை பதிவு செய்யலாம் என்று முடிவு செய்தேன். காலையில் நானும் தேவும் அங்கு சென்றோம். தெருவில் நுழைந்தவுடன் ஒரு கம்பத்தில் அமர்ந்திருந்த வல்லூறு எங்களை வரவேற்றது. அங்கிருந்து பறந்து ஒரு வேப்ப மரத்தில் சென்று அமர்ந்தது . சாலையின் ஓரத்தில் மிதிவண்டிகளை நிறுத்திவிட்டு நடந்து சென்றோம். மைனா மற்றும் சின்னான்கள் இருந்தன. நீல … Continue reading அதிகாலை சங்கீதம்
Author: Rajeshwari Raj
தூவித்தோழர்கள்-38
மடையான்(Indian Pond-Heron) நீர் நிலைகளின் அருகே மடையான்களை பார்க்க முடியும். தலையிலும் மார்பிலும் பழுப்பு நிறக் கோடுகள். உடலின் மேற்புறம் பழுப்பு . மஞ்சள் நிற கருவிழி . இனப்பெருக்க காலத்தில் தலையும் உடலும் ஆரஞ்சு நிறத்திலும், முதுகு செம்பழுப்பு நிறத்திலும் இருக்கும். தலையில் இருந்து நீண்ட மெல்லிய இறகுகளும் முளைக்கும்.மஞ்சள் நிற கூர்மையான அலகின் நுனி கருப்பு. மடையான் நீர்நிலைகளின் ஓரம் தன் கழுத்தை குறுக்கிக்கொண்டு காத்திருக்கும். மீனைப் பார்த்தவுடன் சட்டென்று கழுத்தை நீட்டி மீன் … Continue reading தூவித்தோழர்கள்-38
தூவித்தோழர்கள்-37
செவ்வலகு பூஞ்சிட்டு(Pale-Billed Flowerpecker) தினம் மாலை வீட்டின் பின்புறம் உள்ள தூங்குவாகை மரத்திற்கு செவ்வலகு பூஞ்சிட்டு வரும். மின்னல் போல மிக வேகமாக அங்கும் இங்கும் பறந்து, பூக்களில் உள்ள மலரமுதை அருந்தும். தேன் சிட்டை விட சிறிதாக இருக்கிறது. சாம்பல் வண்ண உடல். சற்றே நிறம் மங்கலான அடிப்புறம். இளஞ்சிவப்பு நிற, கீழ் நோக்கி சற்றே வளைந்த கூர்மையான அலகு. மிகச் சிறிய வால். ஆண் பெண் பறவைகளுக்கிடையே வேறுபாடு இல்லை. இந்தியாவில் காணப்படும் மிகச் … Continue reading தூவித்தோழர்கள்-37
தூவித்தோழர்கள்-36
குண்டுக்கரிச்சான் (Oriental Magpie-Robin) பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்தபோது, யானை குடிலருகே அனைவரும் அமர்ந்து பறவைகளுக்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு ஆண் குண்டு கரிச்சான் மர உச்சியில் அமர்ந்து பாட ஆரம்பித்தது. அதன் குரலை ஞாபகம் வைத்துக் கொண்டேன். ஒரு பறவையின் குரலை நினைவில் வைத்தேன், என்ற ஆனந்தம் ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை . அது பாடலை மாற்றி விட்டது. நான் அதிர்ச்சியாகி விட்டேன். ஒரு பறவையே வெவ்வேறு பாடலை பாடும் என்று அதன் … Continue reading தூவித்தோழர்கள்-36
தூவித்தோழர்கள்-35
உண்ணிக் கொக்கு(Eastern Cattle Egret) உண்ணிக் கொக்கு கால்நடைகளுடன் இருப்பதை பார்க்கலாம். முழுவதும் வெள்ளை நிறம். மஞ்சள் நிற கூரிய அலகு. கால்கள் கரும்பச்சை நிறம். தூரத்தில் இருந்து பார்க்கும் போது, கருப்பு நிறமாக தெரியும். நடக்கும்போது தலையை முன்னால் நீட்டி நீட்டி செல்கிறது. ஆண், பெண் பறவைகளிடையே வேறுபாடு இல்லை.இதன் பெயர் உண்ணிக் கொக்கு என்றிருந்தாலும் , இது கால்நடைகளின் உண்ணியை சாப்பிடுவதில்லை. மாறாக அவை நடக்கும் போது, பறக்கும் பூச்சிகளை உண்ணுகின்றன. இனப்பெருக்க கால … Continue reading தூவித்தோழர்கள்-35




