கோடி அம்புகள்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 28.02.2026இது குருஷேத்திரத்தில் நிகழ்ந்தது!தேரோட்டியான கிருஷ்ணன் தேரில் காண்டீபத்தை கைவிட்டு கலக்கத்துடன் நின்றிருந்த அர்ஜூனனைப் பார்த்து இப்படிச் சொன்னார். "பார்த்தா கேள்! இத்துடன் நான் உன் வழியாக உலகத்திற்கு சொல்ல வேண்டிய பதினெட்டு யோகங்களும் முடிவடைந்ததன. நீ இன்னும் குழப்பத்திலிருப்பதால், உனக்கே உனக்கென கடைசியாக ஒன்றைச் சொல்லுகிறேன். கவனத்துடன் கேட்பாயாக" என்றபடி தொடர்ந்தார்."இன்றிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் மேற்கே அவதரிக்கப்போகும் மனிதக் குமாரனை, … Continue reading கோடி அம்புகள் →

நட்சத்திரங்களின் தொலைவு

செங்கல்பட்டு பயண அனுபவக்குறிப்பு - நட்சத்திரக் கொண்டாட்டம் & கேளம்பாக்கம் சதுப்புநிலம் -  21 & 22.02.2026 தொலைவு எனும் பொருள்தரும் சரியான சொல் எது?அருகே எனும் பொருளுக்குஅருகேவரும் சொல்லாவது உண்டா?நாங்கள் ஒரே இடத்தில் நிற்கிறோம்.என் தொலைவு, அவர் அருகாமை.எனக்கு அருகே, இவருக்கு தொலைவில்.பலர் பார்க்கும் ஒரே பொருளைச் சுட்டவெவ்வேறு சொற்கள்.உண்மையில் தொலைவைச் சுட்டும் சொல்,தொலைவா? அருகாமையா?? அன்று கண்ட ஒண்முகில்கள் (Nebula's) - நட்சத்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. © Sreeram கடந்த 21ஆம் தேதி மதியம் … Continue reading நட்சத்திரங்களின் தொலைவு →

புள்ளெலாம் நான்

மதுரை பயண அனுபவக்குறிப்பு - காந்திகிராமம், கொடிக்குளம் கண்மாய் -  14 & 15.02.2026 இன்னிசை மாதரிசையுளேன் நான்,இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். நான் - சுப்ரமண்ய பாரதி மதுரைக்கு, துணைவியின் தோழியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக கடந்த 13.02.26, வெள்ளிக்கிழமை இரவு வந்தடைந்தோம். இந்நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டு மீனாட்சியம்மனை தரிசிப்பதும், எங்களிருவரின் பெற்றோரையும் முதல் முறையாக விமானத்தில் பறக்கும் அனுபவத்தை அளிப்பதும் எங்கள் திட்டத்தின் முக்கிய பகுதி. அழகரும், முருகரும் … Continue reading புள்ளெலாம் நான் →

வெட்கம்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - நாக்பூர், சந்திரபூர் - 2, 3 & 4th Feb'26 இம்முறை மகாராஷ்டிரத்திற்கு வேலை நிமித்தமாக ஓர் நெடும்பயணம். வானிலிருந்து, மண்ணுக்கு - ஒன்றிலிருந்து, மற்றொன்றுக்கு என வாகனங்களை மாற்றியபடி சென்று கொண்டே இருக்க வேண்டிய பயணம். தூங்குவதற்காக மட்டும் நிலத்தில் கால் வைத்தேன். விழித்தவுடன் மீண்டும் பயணம்! எனவே ஓய்வு நேரங்களில் நான் திட்டமிடும் பறவைப் பார்த்தலுக்கு வாய்ப்பில்லை. ஆனால் ஆடிய கால்களாயிற்றே! அதற்கான வழிகளை அதுவே கண்டடைந்தது. … Continue reading வெட்கம் →

தேவதைக் கதை

பறவைகள் பார்த்தல் அனுபவக் குறிப்பு - அடையாறு கழிமுகம் - சென்னை - 25.01.2026 பகவன் பாரெழினி உடன் நான் உங்களுக்கு திருவாளர் தாமஸ் ஹிடோஷி புரூய்க்ஸ்மா (Thomas Hitoshi Pruiksma) அவர்களைத் தெரிந்திருக்கலாம். திருக்குறளையும், அவ்வையாரின் பாடல்களையும் தமிழ்நாடு வந்து தங்கி, தமிழ் கற்று பின் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர். தமிழ் விக்கியில் அவருக்கு பதிவிருக்கிறது. (சுட்டி கீழே). விஷ்ணுபுரம் அமெரிக்க வட்டத்தினால் நடத்தப்படும் கா.நா.சு உரையாடல் அரங்கில் இவரிடம் தாவரவியல் பேராசிரியர் லோகமாதேவி ஒரு … Continue reading தேவதைக் கதை →