நீலவால் பஞ்சுருட்டான்( Blue tailed Bee-eater) அன்னூர் ஏரியின் அருகே நீலவால் பஞ்சுருட்டானை முதன் முதலில் பார்த்தேன். பறந்து சென்று பூச்சி பிடித்து மறுபடியும் மரத்தில் வந்து அமர்ந்தது. சிறிய பஞ்சுரட்டானை விட பெரிதாக இருக்கிறது. தலை பச்சை நிறம். முதுகும் வாலும் நீல நிறம். நீண்ட கூரிய கரு அழகு. கருப்பு நிற கண் பட்டையை ஒட்டி, மெல்லிய நீலக்கோடு உள்ளது. அலகின் கீழே மஞ்சள் நிறம்.கழுத்து செம்பழுப்பு நிறம். வால் சிறகின் நடுவில் உள்ள … Continue reading தூவித்தோழர்கள்-25
Category: Blogs
தூவித்தோழர்கள்-24
கொண்டலாத்தி (Common Hoopoe) கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியில் Backyard Ultra என்ற மராத்தான் போட்டி நடைபெற்றது. மராத்தான் என்பது 42.2 கிலோமீட்டர் ஓடுவது. Ultra என்பது அதைவிட அதிகமாக 80, 100, 200 கிலோமீட்டர் ஓடுவது. மனிதன் நினைத்ததை சாதிக்க எல்லையே இல்லை. என் கணவரின் நண்பர் அதில் கலந்து கொண்டதால், அவரை சந்திக்க நாங்கள் சென்றோம். பேசிக் கொண்டிருக்கும் போது 'உப் உப் உப்' என்ற ஒலி கேட்டது. நானும், தேவும் அவரிடம் விடை பெற்றுக் … Continue reading தூவித்தோழர்கள்-24
தூவித்தோழர்கள்-23
வெண்மார்புக் கானாங்கோழி (White-breasted Waterhen) தோட்டத்தில் உள்ள என் லக்ஷ்மி அத்தையின் வீட்டுக்கு சென்ற போது, வாசலில் ஒரு நீர்ப்பறவை மேய்ந்து கொண்டிருந்தது. கையேட்டில் மட்டுமே பார்த்த பறவையை, நேரில் கண்டது மிகவும் சந்தோஷம். (New Lifelist!) அதில் வெண்மார்புக் கானாங்கோழி என்று போட்டிருந்தது. தலையின் பின் பகுதியும், முதுகும் கருஞ்சாம்பல் நிறம். முகமும், மார்பும், வயிறும் வெள்ளை. நீளமான காலும், கால் விரல்களும். வாலின் அடிப்புறம் கருஞ்சிவப்பு. வாலை ஆட்டிக்கொண்டே நடப்பது, நடனம் போல் இருக்கிறது. … Continue reading தூவித்தோழர்கள்-23
தூவித்தோழர்கள்-22
வேதிவால் குருவி (Indian paradise flycatcher) பறவை பார்த்தல் வகுப்பில் இந்த குருவியை பற்றி தெரிந்து கொண்டேன். அப்போதிலிருந்து நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் பறவை பட்டியலில் இது இருக்கிறது. வெள்ளிமலையில் குரு நித்யா அரங்கு அருகில் இருக்கும் நொச்சி மரத்தில் இப்பறவையை முதன்முதலில் பார்த்தேன். சின்னான் அளவுள்ள குருவி. செம்பழுப்பு நிற மேலுடல். வெள்ளை நிற மார்பும், வயிறும். கருப்பு நிற கொண்டையுடன் தலை. ஆண் பறவை நீண்ட வாலுடன் இருக்கும். இளம் ஆண் … Continue reading தூவித்தோழர்கள்-22
தூவித்தோழர்கள்-21
வேலி கதிர்க்குருவி (Blyth's Reed Warbler) ஜனவரியில் ஒரு நாள் காலை 'கிர்' என்ற சத்தம் கேட்டது. பறவையா பூச்சியா என்ற சந்தேகத்தில் மெர்லினை கேட்டேன். 'Hearing a Bird' என்று கூறியதால், அது பறவை தான். கம்யூனிஸ்ட் பச்சை (Chromolaena odorata) புதரில் இருந்து, அதன் குரல் கேட்கும். ஒரு வாரமாக பார்க்க முயற்சி செய்தேன். ஒருமுறை ஒரு நொடி வெளியே வந்து, மறுபடியும் புதருக்குள் சென்று விட்டது. என்ன பறவை என்று கண்டுபிடிக்க முடியாததால், … Continue reading தூவித்தோழர்கள்-21