தூவித்தோழர்கள்-20

கௌதாரி (Gray Francolin) தினமும் காலையில் இதன் 'கீகிக்கிக் கீகிக்கிக் கீகிக்கிக்' கேட்டுத்தான் எழுவேன். இந்த பறவைகளும், அதன் குரல்களும் என்னைச் சுற்றி எப்போதுமே இருந்திருக்கின்றன. ஆனால் நான் அதனை கவனித்ததே இல்லை. காகம், மயில் தவிர வேறு பறவைகள் எதையுமே பார்த்ததில்லை.வகுப்பிற்கு வந்த பின், குறைந்தபட்சம் 15 பறவை இனங்களை தினமும் பார்க்கிறேன். இங்கேயே ஒரே ஒரு முறை பார்த்த பறவை இனங்களும் உண்டு. வீட்டினுள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், ஒரு காது வெளியில் … Continue reading தூவித்தோழர்கள்-20 →

தூவித்தோழர்கள்-19

ஊர்த் தேன்சிட்டு (Purple-rumped Sunbird) வீட்டின் எதிரில் ஆடாதொடை புத‌ர் செடி உள்ளது. தினமும் காலையில், அதன் பூக்களில் தேன் குடிக்க ஒரு ஜோடி ஊர்த் தேன்சிட்டு வரும். அதன் ஒலிக்கும், உருவத்திற்கும் சம்பந்தமே இல்லை. அத்தனை குட்டிப் பறவை, சத்தமாக பாடிக் கொண்டே இருக்கும். ஏன் இவ்வளவு சக்தியை வீண் செய்கிறாய் என்று மனதிற்குள் கேட்டுக்கொள்வேன். அதன் பாடலுக்கு காரணமோ பயனோ இருக்கலாம் அல்லது பாடுவது அதற்கு மகிழ்ச்சியை தரலாம்; நான் யார் முடிவு செய்ய‌? … Continue reading தூவித்தோழர்கள்-19 →

தூவித்தோழர்கள்-18

கரும்பருந்து (Black Kite) அதிகாலை நேரம் தவிர மற்ற நேரங்களில், கரும்பருந்துகள் கூட்டமாக வானில் வட்டமிட்டு கொண்டிருப்பதை பார்க்க முடியும். உடல் முழுவதும் பழுப்பு நிறம், அலகின் மேல் பகுதி, கால்களும் மஞ்சள், வளைந்த கூரிய‌ அலகின் பெரும் பகுதி கருப்பு நிறத்திலும் இருக்கும். வால் 'V' வடிவில் இருக்கும். மதிய நேரத்தில் இரு கரும்பருந்துகள், எதிரெதிரே வட்டமாக பறந்து கொண்டிருந்ததை ஒரு முறை பார்த்தோம். ஒரு நாள் காலைநடை சென்றபோது, சாலையின் மறுபுறம் பருந்து பறந்து … Continue reading தூவித்தோழர்கள்-18 →

தூவித்தோழர்கள்-17

பனங்காடை (Indian Roller) எனக்கு பறவை பார்த்தலில் ஆர்வம் வந்ததற்கான காரணம் பனங்காடை தான். கருப்பு நிற அல‌கு, தலை, சிறகு, வால் ஆகியவற்றில் பல வகையான நீலம், கழுத்து மற்றும் மார்பில் வெள்ளை நிற தீற்றல்களுடன் சாம்பல் நிறம் கொண்ட பறவை. பறக்கும் போது, தெரிந்த பலவகையான நீல வண்ணங்களில் மனம் மயங்கினேன். தென்னை மர பொந்தில், அமர்ந்திருந்ததை ஒரு முறை பார்த்தேன். வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்த போது, அதன் தனித்துவமான, பறந்து … Continue reading தூவித்தோழர்கள்-17 →

தூவித்தோழர்கள்-16

தங்க மாங்குயில் (Indian Golden Oriole) வீட்டினுள் வேலை செய்தபோது, இதுவரை கேட்டிராத புதிய ’கா கா குக்கூ’ என்ற குரல் கேட்டது. Merlinல் Sound Id போட்ட போது தங்க மாங்குயில் என்று காட்டியது. உடனே வெளியில் சென்றேன். வீட்டின் பின்புறத்தில் உள்ள தூங்கு வாகை மரத்தில், ஒரு ஜோடி தங்க மாங்குயில்கள் அமர்ந்து கூவிக் கொண்டிருந்தன. தங்க மாங்குயில்– பெயருக்கு ஏற்ற மாதிரி பொன் மஞ்சள் நிற உடல், கண்ணைச் சுற்றியும் இறகிலும் கருப்பு, … Continue reading தூவித்தோழர்கள்-16 →