வெண்புருவ வாலாட்டி (White-browed Wagtail) அதிகாலையில் வீட்டு வேலை செய்யும் போது, இனிய பறவைப் பாடல் கேட்டது. புதிய குரலாக இருக்கிறதே என்று Merlinல் போட்டால், வெண்புருவ வாலாட்டி என்று காட்டியது. வெளியே சென்றவுடன், சட்டென்று அமைதி. வீட்டினுள் வந்தவுடன், மீண்டும் பாடல். இப்படியாக கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது. தினமும் காலையில் இதே வேலை. 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' என்று சுற்றுசுவரின் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தாலும், சட்டென்று நிசப்தம். ஒரு நாள் காலை நடை சென்று, … Continue reading தூவித்தோழர்கள்-34
Category: Blogs
நட்சத்திரங்களின் தொலைவு
செங்கல்பட்டு பயண அனுபவக்குறிப்பு - நட்சத்திரக் கொண்டாட்டம் & கேளம்பாக்கம் சதுப்புநிலம் - 21 & 22.02.2026 தொலைவு எனும் பொருள்தரும் சரியான சொல் எது?அருகே எனும் பொருளுக்குஅருகேவரும் சொல்லாவது உண்டா?நாங்கள் ஒரே இடத்தில் நிற்கிறோம்.என் தொலைவு, அவர் அருகாமை.எனக்கு அருகே, இவருக்கு தொலைவில்.பலர் பார்க்கும் ஒரே பொருளைச் சுட்டவெவ்வேறு சொற்கள்.உண்மையில் தொலைவைச் சுட்டும் சொல்,தொலைவா? அருகாமையா?? அன்று கண்ட ஒண்முகில்கள் (Nebula's) - நட்சத்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. © Sreeram கடந்த 21ஆம் தேதி மதியம் … Continue reading நட்சத்திரங்களின் தொலைவு
தூவித்தோழர்கள்-33
செம்மீசை சின்னான் (Red-Whiskered Bulbul) தாவரவியல் வகுப்பிற்கு வந்தபோது, முதன்முதலில் செம்மீசை சின்னானை பார்த்தேன். வெள்ளிமலையில் அதிகமாக காணப்படும் பறவைகளுள் ஒன்று. சின்னான் அளவே உள்ளது. கருப்பு நிற கொண்டையுடன் கூடிய தலை. தொண்டை வெள்ளை. வாலடியும் , கண்ணுக்கு அருகில் அலங்காரம் செய்தது போல் சிவப்பு. குட்டையான அலகு. கருப்பு நிற வட்டத்திற்குள் வெள்ளை நிற கன்னம். அடிப்புறம் மங்கலான நிறம். இறக்கைகளும், நீண்ட வாலும் சாம்பல் நிறம். நடு வால் இறகுகளை(rectrices) தவிர, மற்ற … Continue reading தூவித்தோழர்கள்-33
தூவித்தோழர்கள்-32
தையல் சிட்டு( Common Tailorbird) பள்ளி பாடத்திலேயே இப் பறவையின் பெயரை கேட்டிருந்தாலும், பார்த்ததே இல்லை. வகுப்பிற்கு சென்று வந்தபின், வீட்டின் அருகே பறவை பார்க்கும்போதுMerlin Appல் தையற்சிட்டின் பெயர் தினமும் வந்தது. முதல் முறை, அதை ஆடாதொடை செடியின் அருகே பார்த்தேன். செம்பழுப்புநிற தலை. மெல்லிய நீண்ட அலகு. பழுத்தும், பச்சையும் கலந்த உடல். மங்கலான நிறத்தில் உடலின் அடிப்பகுதி. சிறு பூச்சிகளையும், மலரமுத்தையும் உண்ணும் . நீண்ட வாலை ஆட்டியபடியே, கிளைக்கு கிளை, குதித்து … Continue reading தூவித்தோழர்கள்-32
தூவித்தோழர்கள்-31
செம்பருந்து (Brahminy Kite) ஒரு மதிய வேளை, உக்கடம் அருகே மின்சார கம்பத்தில் செம்பருந்து அமர்ந்திருந்தது. இரைக்கொல்லி பறவைகளுக்கே உரிய கம்பீரமான தோற்றம். தலையும் , கழுத்தும், அடிப்பகுதியும் வெள்ளை நிறம் . இறகின் நுனியில் கருப்பு. வெயிலில் அதன் செம்பழுப்பு நிறம் தீ போல ஒளிர்ந்தது. ஒரு அரசனைப் போல மேலிருந்து கீழ் நோக்கி, சுற்றிலும் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தது. அதன் அகண்ட சிறகுகளை விரித்து பறந்தது. பெரும்பாலான நேரம் அதை உயரத்திலேயே பார்த்திருப்பதால், … Continue reading தூவித்தோழர்கள்-31
