பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 23.05.2026 அந்தக் குகை, இதுவரை மானுடர் கண்ட துயரங்களிலிருந்து விடுபட வேண்டி ஒரு சோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்குள் வளர்ந்த மனிதற்களுக்கு அனுமதியில்லை. அவர்களின் மேல் பாவத்தின் கறை ஏற்கனவே படிந்துவிட்டிருந்தது. எனவே, வெவ்வேறு ஊர்களில் அன்று பிறந்த குழந்தைகள், தாயின் கருவறையை விட்டு வெளியேறி வெளிச்சத்தைக் காணும் முன்னே ஒளி புகாமல், காற்று மட்டும் செல்லும்படி முடையப்பட்டிருந்த கூடைகளுக்குள் பொதியப்பட்டு, சேவகர்களால் … Continue reading திரும்புதல்
Category: Field Trips
Posts related to group birding trips are added here.
தழலின் தவம்
பறவைப் பார்த்தல் அனுபவக்குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 01.05.2026 தழல் ஆடலும்அலைதலும்சிலைத்தலும் ஊர்தலும்படர்தலும்எழுதலும் தீண்டலும்பற்றலும்சேர்தலும் கொல்தலும்கொள்தலும் இவையனைத்துமாதலும்ஆன பின்இவையல்லாதாதலும் தழலே! செந்நீலநாரை (Purple heron) - என் வழி.... இன்று கொரட்டூர் ஏரிக்கு செல்லும் போதே ஒரு முடிவுடன்தான் சென்றேன். செந்நீலநாரை (Purple heron) மீனை வேட்டையாடுவதை காணாமல் திரும்புவதில்லையென்று. ஆம், கடந்த இரண்டு மாதங்களாக இந்த முயற்சியிலிருக்கிறேன். மார்ச் மாதத்திற்கான விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட குழுவினருக்கான சவால் இது. செந்நீலநாரை மீனைக் … Continue reading தழலின் தவம்
மங்களம்
பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - மணிமங்கலம் ஏரி - காஞ்சிபுரம் - 28.03.2026 Robert Zemeckis இயக்கி Tom hanks நடித்த 'Cast away' எனும் படத்தில் ஒரு காட்சியுண்டு. சரக்குவிமான விபத்தில் உயிர் பிழைத்து, ஒரு ஆளில்லாத தீவில் கரையொதுங்கும் நாயகன், தன்னுடன் சேர்ந்து கரையொதுங்கும் பொருட்களை, அதன் உறையைப் பிரித்து ஒவ்வோன்றாக நோக்கி அந்த தீவில் உயிர்வாழ அப்பொருட்கள் எந்த வகையில் உதவும் என்று பார்த்துக் கொண்டிருப்பார். அப்பொழுது ஒரு பொதியை பிரித்துப் … Continue reading மங்களம்
அதிகாலை சங்கீதம்
காலை நடை செல்லும் போது, டான் போஸ்கோ பள்ளியின் பின்புறம், பல பறவைகளை பார்த்திருக்கிறேன். Dawn Chorus நிகழ்ச்சிக்கு, அங்கு சென்று பறவைகளின் குரல்களை பதிவு செய்யலாம் என்று முடிவு செய்தேன். காலையில் நானும் தேவும் அங்கு சென்றோம். தெருவில் நுழைந்தவுடன் ஒரு கம்பத்தில் அமர்ந்திருந்த வல்லூறு எங்களை வரவேற்றது. அங்கிருந்து பறந்து ஒரு வேப்ப மரத்தில் சென்று அமர்ந்தது . சாலையின் ஓரத்தில் மிதிவண்டிகளை நிறுத்திவிட்டு நடந்து சென்றோம். மைனா மற்றும் சின்னான்கள் இருந்தன. நீல … Continue reading அதிகாலை சங்கீதம்
கோடி அம்புகள்
பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 28.02.2026இது குருஷேத்திரத்தில் நிகழ்ந்தது!தேரோட்டியான கிருஷ்ணன் தேரில் காண்டீபத்தை கைவிட்டு கலக்கத்துடன் நின்றிருந்த அர்ஜூனனைப் பார்த்து இப்படிச் சொன்னார். "பார்த்தா கேள்! இத்துடன் நான் உன் வழியாக உலகத்திற்கு சொல்ல வேண்டிய பதினெட்டு யோகங்களும் முடிவடைந்ததன. நீ இன்னும் குழப்பத்திலிருப்பதால், உனக்கே உனக்கென கடைசியாக ஒன்றைச் சொல்லுகிறேன். கவனத்துடன் கேட்பாயாக" என்றபடி தொடர்ந்தார்."இன்றிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் மேற்கே அவதரிக்கப்போகும் மனிதக் குமாரனை, … Continue reading கோடி அம்புகள்




