தெற்கத்திப் புதர்பாடி (Jerdon's Bushlark) தில்லைவன தோட்டத்தில் பறவை பார்த்துக் கொண்டிருக்கும்போது, மெர்லின் தெற்கத்திப் புதர்பாடி என்று காட்டியது. இதற்கு முன் ஒரே ஒரு முறை வெள்ளி மலையில், இப்பறவையை புல்லின் நடுவே பார்த்திருக்கிறேன். ஆகவே புதருக்குள் துலாவிக் கொண்டிருந்தேன். திடீரென்று மேலிருந்து மெல்லிய சீழ்க்கை ஒலி கேட்டது. நன்றாக தெரியும் படி மின்சார கம்பியில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தது. சற்றே பெரிய பெண் சிட்டுக்குருவியைப் போன்ற தோற்றம். அகலமான பழுப்பு அலகு. கண்ணருகில் மிக மெல்லிய கோடு … Continue reading தூவித்தோழர்கள்- 51
Tag: தூவித்தோழர்கள்
தூவித்தோழர்கள்-50
மாடப்புறா(Rock/Feral Pigeon) உடுப்பியில் ஒரு அடுக்குமாடி தங்குமிடத்தில் இருந்தேன். கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே ஒரு மாடப்புறா வந்த அமர்ந்தது. அடர் சாம்பல் நிற அலகு. இதன் அலகின் மேல் operculum/cere என்று அழைக்கப்படும் வெள்ளை நிற தோல் உள்ளது. இது தண்ணீர் ஒட்டாமல் தடுக்கும் பூச்சாக செயல்பட்டு, அதன் நாசியை பாதுகாக்கிறது. ஆரஞ்சு வண்ண கருவிழி. இறக்கைகளில் இரு கருமையான பட்டைகள். பெரும்பாலான பறவைகள் நீலம் அல்லது நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். வெள்ளை, கலவையான … Continue reading தூவித்தோழர்கள்-50
தூவித்தோழர்கள்-49
தூக்கணாங்குருவி(Baya Weaver) என் சிறு வயதில், முட்டாள் குரங்கும், கேட்காமல் அறிவுரை கூறிய தூக்கணாங்குருவியும் உள்ள பஞ்சதந்திர கதையில், அறிமுகமாகியது இந்த பறவை. பலமுறை இதன் கூட்டை பார்த்திருக்கிறேன். பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்து, தொலைநோக்கி வாங்கிய பின் தான், குருவியை பார்த்தேன். இனப்பெருக்க ஆண்பறவையின் தலையும், பிடரியும், மார்பும் மஞ்சள். அலகு, கன்னம், கழுத்து பகுதி கருப்பு. வயிறு, தொடை, வாலடி வெள்ளை. பழுப்பும், மஞ்சளும் கலந்த இறகுகள். இனப்பெருக்கமில்லா காலத்தில் ஆண்பறவைக்கும், பெண் பறவைக்கும் … Continue reading தூவித்தோழர்கள்-49
தூவித்தோழர்கள்-47
நீலமேனி ஈப்பிடிப்பான் (Verditer Flycatcher) டிசம்பர் மாதம் நடந்த தாவரவியல் வகுப்பில் கலந்து கொண்ட குழந்தைகள் சேர்ந்து, காலையில் பறவை பார்க்க சென்றனர். அப்போது முதல் முறையாக ஒரு பறவையை பார்த்தனர். Merlin செயலியில் துலாவி, இதுவாக இருக்கலாம் என்று முடிவு செய்தனர். யானை குடிலுக்கு செல்லும் வழியில், மின்சார கம்பியில் மிக அருகில் நீலமேனி ஈப்பிடிப்பான் அமர்ந்திருந்தது. எனக்கு பார்த்தவுடன் தெரிந்து விட்டது, காலையில் குழந்தைகள் பார்த்த பறவை இது தான் என்று. பஞ்சுருட்டான் அளவுள்ள … Continue reading தூவித்தோழர்கள்-47
தூவித்தோழர்கள்-46
கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher) சென்னை வீட்டின் அருகே, ஒரு தாமரைக் குளம் உண்டு. ஸ்ரீயின் பள்ளி வேன் நிறுத்தம், அங்கு உள்ளதால், தினமும் காலையில் நானும் அவளும் அங்கு காத்திருப்போம். ஒரு நாள் குளத்திற்கு மேலே, பறந்து கொண்டிருந்த கருப்பு வெள்ளை மீன் கொத்தியை பார்த்தோம். ஒரே இடத்தில் பறந்தபடியே, நீரை ஆராய்ச்சி செய்தது. சட்டென்று இறக்கைகளை மடித்து, நீரில் பாய்ந்து, மீனுடன் பறந்து சென்றது. அதற்குப் பின், சுமார் பத்து ஆண்டுகள் கழித்து, … Continue reading தூவித்தோழர்கள்-46



