மணிப்புறா(Spotted Dove) வெள்ளி மலையில் மிகவும் பரவலாக காணப்படும் பறவைகளின் ஒன்று. மின்சார கம்பி, மரம் அல்லது தரையில் மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். 'கூ , கூ , குக்ரூ' என்று குறுகுறுக்கும். அளவில் சிறிதான புறா. நீண்ட, சதுர வடிவ நுனி கொண்ட வால். கழுத்தில் காணப்படும் கருப்பு வெள்ளை புள்ளிகள், இதன் தனித்துவமான அடையாளம். கருப்பு அலகு. கண்கள் இளஞ்சிவப்பு. மேல் பகுதி சாம்பலும் பழுப்பும் கலந்த நிறம். அடிவயிறு இளஞ்சிவப்பு கலந்த சாம்பல் … Continue reading தூவித்தோழர்கள்-45
Tag: தூவித்தோழர்கள்
தூவித்தோழர்கள்-42
ஊதாத் தேன்சிட்டு(Purple Sunbird) வீட்டருகில் தினமும் பார்க்கக்கூடிய பறவைகளுள் ஒன்று. காலையும் மாலையும் ஜோடியாக தூங்குவாகை மரத்திற்கு வரும். அதன் குரலை தொடர்ச்சியாக கேட்க முடியும். ஓரிடத்தில் நில்லாமல், பறந்து கொண்டே இருக்கும். ஆண் பறவை மின்னும் கரு ஊதா நிறத்தில் காட்சியளிக்கும். உண்மையில் இதன் நிறம் ஊதா அல்ல. இதை விளக்கும் அருமையான காணொளி. இறகுதிர் காலத்தில் மஞ்சளும் கலந்து இருக்கும். பெண் பறவையின் மேல் புறம் அடர் நிறத்திலும், அடிப்புறம் மங்கலான நிறத்திலும் இருக்கும். … Continue reading தூவித்தோழர்கள்-42
தூவித்தோழர்கள்-41
குயில் (Asian Koel) வீட்டின் அருகில் மிக எளிதாக காணக்கூடிய பறவை குயில். ஜோடியாக தூங்குவாகை மரத்தில் அமர்ந்திருப்பதை பார்க்க முடியும். பறந்து செல்லும் பெண் குயிலின் பின்னாலேயே, ஆண் குயில் செல்லும். வேகமாக இறக்கையை அடித்துக் கொண்டு நேர்கோட்டில் பறக்கும். காகத்தைப் போன்ற கரிய உடம்பு. சிவப்பு நிறக் கண். அகலமான கூர்மையான அலகு. பழுப்பு நிறத்தில் வெண் வரிகளும், வெண் புள்ளிகளும் கொண்டிருப்பது பெண் பறவை. காலையும் மாலையும் இவற்றின் கூவுதலை தொடர்ச்சியாக கேட்க … Continue reading தூவித்தோழர்கள்-41
தூவித்தோழர்கள்-38
மடையான்(Indian Pond-Heron) நீர் நிலைகளின் அருகே மடையான்களை பார்க்க முடியும். தலையிலும் மார்பிலும் பழுப்பு நிறக் கோடுகள். உடலின் மேற்புறம் பழுப்பு . மஞ்சள் நிற கருவிழி . இனப்பெருக்க காலத்தில் தலையும் உடலும் ஆரஞ்சு நிறத்திலும், முதுகு செம்பழுப்பு நிறத்திலும் இருக்கும். தலையில் இருந்து நீண்ட மெல்லிய இறகுகளும் முளைக்கும்.மஞ்சள் நிற கூர்மையான அலகின் நுனி கருப்பு. மடையான் நீர்நிலைகளின் ஓரம் தன் கழுத்தை குறுக்கிக்கொண்டு காத்திருக்கும். மீனைப் பார்த்தவுடன் சட்டென்று கழுத்தை நீட்டி மீன் … Continue reading தூவித்தோழர்கள்-38
தூவித்தோழர்கள்-36
குண்டுக்கரிச்சான் (Oriental Magpie-Robin) பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்தபோது, யானை குடிலருகே அனைவரும் அமர்ந்து பறவைகளுக்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு ஆண் குண்டு கரிச்சான் மர உச்சியில் அமர்ந்து பாட ஆரம்பித்தது. அதன் குரலை ஞாபகம் வைத்துக் கொண்டேன். ஒரு பறவையின் குரலை நினைவில் வைத்தேன், என்ற ஆனந்தம் ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை . அது பாடலை மாற்றி விட்டது. நான் அதிர்ச்சியாகி விட்டேன். ஒரு பறவையே வெவ்வேறு பாடலை பாடும் என்று அதன் … Continue reading தூவித்தோழர்கள்-36




