தூவித்தோழர்கள்-27

கல்லுக்குருவி (Pied Bushchat) பொள்ளாச்சி தோட்டத்தின் சின்ன‌ மருத‌மரத்தில், ஆண் கல்லுக்குருவி அமர்ந்து பாடும். பெரும்பாலும் கருப்பாக உள்ள பறவையின், இறக்கையில் ஒரு வெள்ளைக் கோடு, வாலடியும் வெள்ளை. தேன்சிட்டை விட சற்று பெரிய பறவை. பாடலை கேட்டவுடன் பெண் பறவை வந்து இணைந்து கொள்ளும். தரையில் அங்கும் இங்கும் குதித்துக் குதித்து சென்று இரை தேடும். மதிய நேரங்களில் இவற்றை வேடிக்கை பார்ப்பதே எனது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. பெண் பறவை முழுவதும் சாம்பல் நிறம். … Continue reading தூவித்தோழர்கள்-27 →

வெட்கம்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - நாக்பூர், சந்திரபூர் - 2, 3 & 4th Feb'26 இம்முறை மகாராஷ்டிரத்திற்கு வேலை நிமித்தமாக ஓர் நெடும்பயணம். வானிலிருந்து, மண்ணுக்கு - ஒன்றிலிருந்து, மற்றொன்றுக்கு என வாகனங்களை மாற்றியபடி சென்று கொண்டே இருக்க வேண்டிய பயணம். தூங்குவதற்காக மட்டும் நிலத்தில் கால் வைத்தேன். விழித்தவுடன் மீண்டும் பயணம்! எனவே ஓய்வு நேரங்களில் நான் திட்டமிடும் பறவைப் பார்த்தலுக்கு வாய்ப்பில்லை. ஆனால் ஆடிய கால்களாயிற்றே! அதற்கான வழிகளை அதுவே கண்டடைந்தது. … Continue reading வெட்கம் →

தூவித்தோழர்கள்-26

செண்பகம் (Greater Coucal) பறவை பார்த்தல் வகுப்புக்கு வருவதற்கு முன், பெயர் தெரிந்த மிகச் சில பறவைகளில் ஒன்று செம்போத்து. மாநகராட்சியிலிருந்து குப்பையை தரம் பிரித்து வாங்குவதற்கு முன், மக்கும் குப்பைகளை வீட்டின் எதிரே ஒரு குழி தோண்டி அதில் போடுவோம். பகல் நேரங்களில் தவிட்டுக்குருவி, காகம், செம்போத்து ஆகிய பறவைகள் குப்பைக் குழியில் இருந்து உணவையோ இல்லை அருகில் இருக்கும் பூச்சியையோ பிடித்து உண்ணும். வாசல் படியில் அமர்ந்து, அதைப் பார்த்துக் கொண்டே தேவ் சாப்பிடுவான். … Continue reading தூவித்தோழர்கள்-26 →

தூவித்தோழர்கள்-25

நீலவால் பஞ்சுருட்டான்( Blue tailed Bee-eater) அன்னூர் ஏரியின் அருகே நீலவால் பஞ்சுருட்டானை முதன் முதலில் பார்த்தேன். பறந்து சென்று பூச்சி பிடித்து மறுபடியும் மரத்தில் வந்து அமர்ந்தது. சிறிய பஞ்சுரட்டானை விட பெரிதாக இருக்கிறது. தலை பச்சை நிறம். முதுகும் வாலும் நீல நிறம். நீண்ட கூரிய கரு அழகு. கருப்பு நிற கண் பட்டையை ஒட்டி, மெல்லிய நீலக்கோடு உள்ளது. அல‌கின் கீழே மஞ்சள் நிறம்.கழுத்து செம்பழுப்பு நிறம். வால் சிறகின் நடுவில் உள்ள … Continue reading தூவித்தோழர்கள்-25 →

தூவித்தோழர்கள்-24

கொண்டலாத்தி (Common Hoopoe) கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியில் Backyard Ultra என்ற மராத்தான் போட்டி நடைபெற்றது. மராத்தான் என்பது 42.2 கிலோமீட்டர் ஓடுவது. Ultra என்பது அதைவிட அதிகமாக 80, 100, 200 கிலோமீட்டர் ஓடுவது. மனிதன் நினைத்ததை சாதிக்க‌ எல்லையே இல்லை. என் கணவரின் நண்பர் அதில் கலந்து கொண்டதால், அவரை சந்திக்க நாங்கள் சென்றோம். பேசிக் கொண்டிருக்கும் போது 'உப் உப் உப்' என்ற ஒலி கேட்டது. நானும், தேவும் அவரிடம் விடை பெற்றுக் … Continue reading தூவித்தோழர்கள்-24 →