பலமுறை குடும்பமாக எங்கள் நண்பர்கள் ஈஸ்வரி-பொன்ராஜ் தம்பதியர் வீட்டிற்கு சென்றிருந்தாலும், இந்த முறை பறவை பார்த்தலுக்காக அவர்களின் வீட்டருகே உள்ள நன்மங்கலம் ஏரிக்கு (தென்மேற்கு பகுதி, சியான் பள்ளி, செம்பாக்கம் அருகே) சென்றது புதிய அனுபவமாக இருந்தது. அவர்களின் மகன் முகேஷ் வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பிற்கு சென்று வந்தவுடன் தன் வீட்டருகே ஏரியில் பறவைகளை பார்த்ததை கூறவும், விஜய் பாரதி அவர்களின் முன்னெடுப்பில் அங்கு செல்ல முடிவானது. விஷ்ணுபுரம் பறவை ஆர்வலர்கள், குழந்தைகள் என குழுவாக … Continue reading நன்மங்கலம் ஏரி 1-2-2026
Month: February 2026
தூவித்தோழர்கள்-30
வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் (Spot-breasted Fantail) குன்னூர் Sims பூங்காவின் உள்ளே நுழைந்ததும், பறவைகளின் இனிமையான ஒலி கேட்டது. சிறிது தூரம் சென்றவுடன், ஒரு பழுப்பு நிறப் பறவை, அதன் சிறுவாலை விசிறி போல விரித்து அங்கும் இங்கும் குதித்துக் கொண்டிருந்தது. சிறிது கூட பயமே இல்லாமல் அருகில் வந்து நின்றது. அதன் வெண் புருவங்களும், தோகை போல வாலை விரித்ததும் அழகு. சாம்பல் நிற பறவை. கரு நிற தலை. வெண்ணிற தொண்டை, புருவம். மார்பில் வெள்ளை புள்ளிகள் … Continue reading தூவித்தோழர்கள்-30
தூவித்தோழர்கள்-29
பொறி மார்புச் சிலம்பன் (Puff-throated babbler) ஆனைகட்டி சத்-தர்ஷனில் நான், தேவ், மித்து பாப்பா மூவரும், மரத்தில் இருந்த குண்டு கரிச்சானை(Oriental Magpie Robin) பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அருகில் தரையில் இருந்து இனிமையான கீக்கி ஒலி கேட்டது. ஐந்து பறவைகள் கொண்ட சிறு கூட்டத்தை பார்த்தோம். தரையில் இருப்பதாலும், கூட்டமாக கத்திக் கொண்டிருப்பதாலும், அது Babbler ஆக இருக்கலாம். Merlin செயலியில் பார்த்தால் பொறி மார்புச் சிலம்பன் என்று காட்டியது. சாம்பல் நிறப் பறவை.செம்பழுப்பு நிற தலை. … Continue reading தூவித்தோழர்கள்-29
புள்ளெலாம் நான்
மதுரை பயண அனுபவக்குறிப்பு - காந்திகிராமம், கொடிக்குளம் கண்மாய் - 14 & 15.02.2026 இன்னிசை மாதரிசையுளேன் நான்,இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். நான் - சுப்ரமண்ய பாரதி மதுரைக்கு, துணைவியின் தோழியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக கடந்த 13.02.26, வெள்ளிக்கிழமை இரவு வந்தடைந்தோம். இந்நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டு மீனாட்சியம்மனை தரிசிப்பதும், எங்களிருவரின் பெற்றோரையும் முதல் முறையாக விமானத்தில் பறக்கும் அனுபவத்தை அளிப்பதும் எங்கள் திட்டத்தின் முக்கிய பகுதி. அழகரும், முருகரும் … Continue reading புள்ளெலாம் நான்
தூவித்தோழர்கள்-28
மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow-wattled Lapwing) வெள்ளிமலையில் பறவை பார்த்தல் நடை செல்லும்போது, புத்தருக்கு எதிரில்,வயலுக்கு மேலே உள்ள இடத்தில் ஆள்காட்டியை முதன் முதலில் பார்த்தேன். நித்யவனத்தின் வலது பக்கம் நடந்து சென்றால் குக்குருவான்கள் இருக்கும் ஆலமரம் தாண்டி உள்ள வயலில் ஒரு ஆள்காட்டி வசிக்கிறது. அதன் உரத்த குரல் அடிக்கடி கேட்கும். நீண்ட மஞ்சள் கால்களை கொண்ட புறா அளவுள்ள பறவை. முன் தலையும் வாலும் கருப்பு. உடல் சாம்பல் நிறம். வயிறு பகுதி வெள்ளையாக … Continue reading தூவித்தோழர்கள்-28
