பொறி மார்புச் சிலம்பன் (Puff-throated babbler) ஆனைகட்டி சத்-தர்ஷனில் நான், தேவ், மித்து பாப்பா மூவரும், மரத்தில் இருந்த குண்டு கரிச்சானை(Oriental Magpie Robin) பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அருகில் தரையில் இருந்து இனிமையான கீக்கி ஒலி கேட்டது. ஐந்து பறவைகள் கொண்ட சிறு கூட்டத்தை பார்த்தோம். தரையில் இருப்பதாலும், கூட்டமாக கத்திக் கொண்டிருப்பதாலும், அது Babbler ஆக இருக்கலாம். Merlin செயலியில் பார்த்தால் பொறி மார்புச் சிலம்பன் என்று காட்டியது. சாம்பல் நிறப் பறவை.செம்பழுப்பு நிற தலை. … Continue reading தூவித்தோழர்கள்-29
புள்ளெலாம் நான்
மதுரை பயண அனுபவக்குறிப்பு - காந்திகிராமம், கொடிக்குளம் கண்மாய் - 14 & 15.02.2026 இன்னிசை மாதரிசையுளேன் நான்,இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். நான் - சுப்ரமண்ய பாரதி மதுரைக்கு, துணைவியின் தோழியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக கடந்த 13.02.26, வெள்ளிக்கிழமை இரவு வந்தடைந்தோம். இந்நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டு மீனாட்சியம்மனை தரிசிப்பதும், எங்களிருவரின் பெற்றோரையும் முதல் முறையாக விமானத்தில் பறக்கும் அனுபவத்தை அளிப்பதும் எங்கள் திட்டத்தின் முக்கிய பகுதி. அழகரும், முருகரும் … Continue reading புள்ளெலாம் நான்
தூவித்தோழர்கள்-28
மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow-wattled Lapwing) வெள்ளிமலையில் பறவை பார்த்தல் நடை செல்லும்போது, புத்தருக்கு எதிரில்,வயலுக்கு மேலே உள்ள இடத்தில் ஆள்காட்டியை முதன் முதலில் பார்த்தேன். நித்யவனத்தின் வலது பக்கம் நடந்து சென்றால் குக்குருவான்கள் இருக்கும் ஆலமரம் தாண்டி உள்ள வயலில் ஒரு ஆள்காட்டி வசிக்கிறது. அதன் உரத்த குரல் அடிக்கடி கேட்கும். நீண்ட மஞ்சள் கால்களை கொண்ட புறா அளவுள்ள பறவை. முன் தலையும் வாலும் கருப்பு. உடல் சாம்பல் நிறம். வயிறு பகுதி வெள்ளையாக … Continue reading தூவித்தோழர்கள்-28
தூவித்தோழர்கள்-27
கல்லுக்குருவி (Pied Bushchat) பொள்ளாச்சி தோட்டத்தின் சின்ன மருதமரத்தில், ஆண் கல்லுக்குருவி அமர்ந்து பாடும். பெரும்பாலும் கருப்பாக உள்ள பறவையின், இறக்கையில் ஒரு வெள்ளைக் கோடு, வாலடியும் வெள்ளை. தேன்சிட்டை விட சற்று பெரிய பறவை. பாடலை கேட்டவுடன் பெண் பறவை வந்து இணைந்து கொள்ளும். தரையில் அங்கும் இங்கும் குதித்துக் குதித்து சென்று இரை தேடும். மதிய நேரங்களில் இவற்றை வேடிக்கை பார்ப்பதே எனது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. பெண் பறவை முழுவதும் சாம்பல் நிறம். … Continue reading தூவித்தோழர்கள்-27
வெட்கம்
பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - நாக்பூர், சந்திரபூர் - 2, 3 & 4th Feb'26 இம்முறை மகாராஷ்டிரத்திற்கு வேலை நிமித்தமாக ஓர் நெடும்பயணம். வானிலிருந்து, மண்ணுக்கு - ஒன்றிலிருந்து, மற்றொன்றுக்கு என வாகனங்களை மாற்றியபடி சென்று கொண்டே இருக்க வேண்டிய பயணம். தூங்குவதற்காக மட்டும் நிலத்தில் கால் வைத்தேன். விழித்தவுடன் மீண்டும் பயணம்! எனவே ஓய்வு நேரங்களில் நான் திட்டமிடும் பறவைப் பார்த்தலுக்கு வாய்ப்பில்லை. ஆனால் ஆடிய கால்களாயிற்றே! அதற்கான வழிகளை அதுவே கண்டடைந்தது. … Continue reading வெட்கம்

