தூவித்தோழர்கள்-33

செம்மீசை சின்னான் (Red-Whiskered Bulbul) தாவரவியல் வகுப்பிற்கு வந்தபோது, முதன்முதலில் செம்மீசை சின்னானை பார்த்தேன். வெள்ளிமலையில் அதிகமாக காணப்படும் பறவைகளுள் ஒன்று. சின்னான் அளவே உள்ளது. கருப்பு நிற கொண்டையுடன் கூடிய தலை. தொண்டை வெள்ளை. வாலடியும் , கண்ணுக்கு அருகில் அலங்காரம் செய்தது போல் சிவப்பு. குட்டையான அலகு. கருப்பு நிற வட்டத்திற்குள் வெள்ளை நிற கன்னம். அடிப்புறம் மங்கலான நிறம். இறக்கைகளும், நீண்ட வாலும் சாம்பல் நிறம். நடு வால் இறகுகளை(rectrices) தவிர, மற்ற … Continue reading தூவித்தோழர்கள்-33 →

தூவித்தோழர்கள்-32

தையல் சிட்டு( Common Tailorbird) பள்ளி பாடத்திலேயே இப் பறவையின் பெயரை கேட்டிருந்தாலும், பார்த்ததே இல்லை. வகுப்பிற்கு சென்று வந்தபின், வீட்டின் அருகே பறவை பார்க்கும்போதுMerlin Appல் தையற்சிட்டின் பெயர் தினமும் வந்தது. முதல் முறை, அதை ஆடாதொடை செடியின் அருகே பார்த்தேன். செம்பழுப்புநிற தலை. மெல்லிய நீண்ட அலகு. பழுத்தும், பச்சையும் கலந்த உடல். மங்கலான நிறத்தில் உடலின் அடிப்பகுதி. சிறு பூச்சிகளையும், மலரமுத்தையும் உண்ணும் . நீண்ட வாலை ஆட்டியபடியே, கிளைக்கு கிளை, குதித்து … Continue reading தூவித்தோழர்கள்-32 →

தூவித்தோழர்கள்-31

செம்பருந்து (Brahminy Kite) ஒரு மதிய வேளை, உக்கடம் அருகே மின்சார கம்பத்தில் செம்பருந்து அமர்ந்திருந்தது. இரைக்கொல்லி பறவைகளுக்கே உரிய கம்பீரமான தோற்றம். தலையும் , கழுத்தும், அடிப்பகுதியும் வெள்ளை நிறம் . இறகின் நுனியில் கருப்பு. வெயிலில் அதன் செம்பழுப்பு நிறம் தீ போல ஒளிர்ந்தது. ஒரு அரசனைப் போல மேலிருந்து கீழ் நோக்கி, சுற்றிலும் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தது. அதன் அகண்ட சிறகுகளை விரித்து பறந்தது. பெரும்பாலான நேரம் அதை உயரத்திலேயே பார்த்திருப்பதால், … Continue reading தூவித்தோழர்கள்-31 →

நன்மங்கலம் ஏரி 1-2-2026

பலமுறை குடும்பமாக எங்கள் நண்பர்கள் ஈஸ்வரி-பொன்ராஜ் தம்பதியர் வீட்டிற்கு சென்றிருந்தாலும், இந்த முறை பறவை பார்த்தலுக்காக அவர்களின் வீட்டருகே உள்ள நன்மங்கலம் ஏரிக்கு (தென்மேற்கு பகுதி, சியான் பள்ளி, செம்பாக்கம் அருகே) சென்றது புதிய அனுபவமாக இருந்தது. அவர்களின் மகன் முகேஷ் வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பிற்கு சென்று வந்தவுடன் தன் வீட்டருகே ஏரியில் பறவைகளை பார்த்ததை கூறவும், விஜய் பாரதி அவர்களின் முன்னெடுப்பில் அங்கு செல்ல முடிவானது. விஷ்ணுபுரம் பறவை ஆர்வலர்கள், குழந்தைகள் என குழுவாக … Continue reading நன்மங்கலம் ஏரி 1-2-2026 →

தூவித்தோழர்கள்-30

வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் (Spot-breasted Fantail) குன்னூர் Sims பூங்காவின் உள்ளே நுழைந்ததும், பறவைகளின் இனிமையான ஒலி கேட்டது. சிறிது தூரம் சென்றவுடன், ஒரு பழுப்பு நிறப் பறவை, அதன் சிறுவாலை விசிறி போல விரித்து அங்கும் இங்கும் குதித்துக் கொண்டிருந்தது. சிறிது கூட பயமே இல்லாமல் அருகில் வந்து நின்றது. அதன் வெண் புருவங்களும், தோகை போல வாலை விரித்ததும் அழகு. சாம்பல் நிற பறவை. கரு நிற தலை. வெண்ணிற தொண்டை, புருவம். மார்பில் வெள்ளை புள்ளிகள் … Continue reading தூவித்தோழர்கள்-30 →