தூவித்தோழர்கள்-21

வேலி கதிர்க்குருவி (Blyth's Reed Warbler) ஜனவரியில் ஒரு நாள் காலை 'கிர்' என்ற சத்தம் கேட்டது. பறவையா பூச்சியா என்ற சந்தேகத்தில் மெர்லினை கேட்டேன். 'Hearing a Bird' என்று கூறியதால், அது பறவை தான். கம்யூனிஸ்ட் பச்சை (Chromolaena odorata) புதரில் இருந்து, அதன் குரல் கேட்கும். ஒரு வாரமாக பார்க்க முயற்சி செய்தேன். ஒருமுறை ஒரு நொடி வெளியே வந்து, மறுபடியும் புதருக்குள் சென்று விட்டது. என்ன பறவை என்று கண்டுபிடிக்க முடியாததால், … Continue reading தூவித்தோழர்கள்-21 →

தேவதைக் கதை

பறவைகள் பார்த்தல் அனுபவக் குறிப்பு - அடையாறு கழிமுகம் - சென்னை - 25.01.2026 பகவன் பாரெழினி உடன் நான் உங்களுக்கு திருவாளர் தாமஸ் ஹிடோஷி புரூய்க்ஸ்மா (Thomas Hitoshi Pruiksma) அவர்களைத் தெரிந்திருக்கலாம். திருக்குறளையும், அவ்வையாரின் பாடல்களையும் தமிழ்நாடு வந்து தங்கி, தமிழ் கற்று பின் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர். தமிழ் விக்கியில் அவருக்கு பதிவிருக்கிறது. (சுட்டி கீழே). விஷ்ணுபுரம் அமெரிக்க வட்டத்தினால் நடத்தப்படும் கா.நா.சு உரையாடல் அரங்கில் இவரிடம் தாவரவியல் பேராசிரியர் லோகமாதேவி ஒரு … Continue reading தேவதைக் கதை →

தூவித்தோழர்கள்-20

கௌதாரி (Gray Francolin) தினமும் காலையில் இதன் 'கீகிக்கிக் கீகிக்கிக் கீகிக்கிக்' கேட்டுத்தான் எழுவேன். இந்த பறவைகளும், அதன் குரல்களும் என்னைச் சுற்றி எப்போதுமே இருந்திருக்கின்றன. ஆனால் நான் அதனை கவனித்ததே இல்லை. காகம், மயில் தவிர வேறு பறவைகள் எதையுமே பார்த்ததில்லை.வகுப்பிற்கு வந்த பின், குறைந்தபட்சம் 15 பறவை இனங்களை தினமும் பார்க்கிறேன். இங்கேயே ஒரே ஒரு முறை பார்த்த பறவை இனங்களும் உண்டு. வீட்டினுள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், ஒரு காது வெளியில் … Continue reading தூவித்தோழர்கள்-20 →

ஆராவமுது

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பின் அனுபவக்குறிப்பு - திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் - 14-17.01.2026நேரம் நெருங்கிவிட்டது!விண்ணளந்தோன் புன்னைகையுடன், தன் ஒப்பனையறைக்குப் புறப்பட்டார். அறியாத தேவர்களும், அசுரர்களும் கடினமான தொடர் செயலால் களைத்திருந்தனர். வாசுகி இதற்கு மேல் முடியாதென்பது போல் துவண்டிருந்தார். மாந்தாரமலையும் இது எப்போது முடியுமென எண்ணியவாறு சலிப்புடன் சுழன்று கொண்டிருந்தது. கீழே பாற்கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் கடலைக் கடையும் வேகம் கூடியபடியே இருந்ததே தவிற குறையவில்லை. ஆம், தேவர்களும், அசுரர்களும் எதிர்பார்த்திருக்கும் பொருள் தங்கள் வாழ்வையே … Continue reading ஆராவமுது →

தூவித்தோழர்கள்-19

ஊர்த் தேன்சிட்டு (Purple-rumped Sunbird) வீட்டின் எதிரில் ஆடாதொடை புத‌ர் செடி உள்ளது. தினமும் காலையில், அதன் பூக்களில் தேன் குடிக்க ஒரு ஜோடி ஊர்த் தேன்சிட்டு வரும். அதன் ஒலிக்கும், உருவத்திற்கும் சம்பந்தமே இல்லை. அத்தனை குட்டிப் பறவை, சத்தமாக பாடிக் கொண்டே இருக்கும். ஏன் இவ்வளவு சக்தியை வீண் செய்கிறாய் என்று மனதிற்குள் கேட்டுக்கொள்வேன். அதன் பாடலுக்கு காரணமோ பயனோ இருக்கலாம் அல்லது பாடுவது அதற்கு மகிழ்ச்சியை தரலாம்; நான் யார் முடிவு செய்ய‌? … Continue reading தூவித்தோழர்கள்-19 →