பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - புழல் ஏரி, சென்னை - 20.10.2025ஒரு உரையாடலின் போது கவிஞர் சாம்ராஜ் சொன்னார், "நம் குழந்தைகள் ஆச்சரியமற்றவர்களாகிக் கொண்டிருக்கின்றனர், எதைச் சொல்லியும், காண்பித்தும் அவர்களை ஆச்சரியப்படுத்த முடியவில்லை" என்று. ஏன் குழந்தைகள் ஆச்சரியப்படுவதில்லை?மேடையில் மாயவித்தைகள் நிகழ்த்தும் ஒருவரை எவ்வகையிலும் அந்த வித்தைகள் ஆச்சரியப்படுத்தப் போவதில்லை. காற்றிலிருந்து புறா வெளிப்பட்டாலும், கண்முன்னே யானை காற்றில் மறைந்தாலும், ஆச்சரியம் பார்வையாளருக்கே. அதை நிகழ்த்துபவருக்கல்ல. ஏனெனில் மாயத்தின் பின்னிருக்கும் தந்திரம் என்னவென்று அவருக்குத் தெரியும். … Continue reading பரிசு
தூவித்தோழர்கள்-6
வால் காக்கை (Rufous treepie) வால் காக்கையை பற்றி வெள்ளிமலை வகுப்பிற்கு வந்த பின் தான் தெரிந்துகொண்டேன். வீட்டின் அருகே பறவை பார்த்துக் கொண்டிருந்தபோது, தென்னை மரத்தில் அமர்ந்திருந்து. இத்தனை வருடமாக, அது இங்கே தான் இருந்திருக்கும், ஆனால் ஒரு முறை கூட அதை கவனித்ததே இல்லை. காலை நேரங்களில், வீட்டின் எதிரில் உள்ள பலா மரத்தினுள்ளே இருந்து வருவதை பார்க்கலாம். காகத்தைப் போன்ற முகம், பிரவுன், வெள்ளை, கருப்பு கலந்த இறக்கைகள். நீண்ட வாலின் நுனியில் … Continue reading தூவித்தோழர்கள்-6
தூவித்தோழர்கள்-5
காகம் (House Crow) வீட்டின் அருகே,மக்கும் குப்பைகளை போட ஒரு குழி இருந்தது. முட்டை மஞ்சள் கருவை, அதில் போடுவது வழக்கம். அதைத் தெரிந்து கொண்ட காகங்கள், என் கணவர் மஞ்சள் கருவை போட போகும்போது, காத்திருந்து அதை சாப்பிட்டன. அதை பார்த்த பின், நேரடியாக காகத்திற்கு போட ஆரம்பித்தோம். சரியாக ஏழரை மணிக்கு, காகங்கள் காத்திருக்க ஆரம்பிக்கும். சுமார் ஐந்து வருடங்களாக, இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்ற காகங்கள் அனைத்தும் மின்சார கம்பியில் அமர்ந்திருக்கும் போது, … Continue reading தூவித்தோழர்கள்-5
தூவித்தோழர்கள்-4
பச்சைக்கிளி(Rose-ringed Parakeet) வீட்டின் அருகே எட்டு கிளிகள் கொண்ட ஒரு கிளி கூட்டம் வசிக்கிறது. காலையும் மாலையும் பாடிக்கொண்டே, சேர்ந்து பறந்து செல்லும். ஆண் பறவைக்கு கழுத்தில் கருப்பு நிற வளையம் இருக்கிறது. அதைத் தவிர ஆண், பெண் பறவைகளுக்கு பெரிய வேறுபாடு இல்லை. பின்புறம் உள்ள தூங்கு மூஞ்சி(Samanea saman) மரத்தில் அமர்ந்து, அவரைக்காய் போன்ற விதைப்பையை பிரித்து, அதன் விதைகளை உண்ணும். பக்கத்து பெரிய கட்டடத்தின் மாடியில், மாநாடு நடத்தும். கொய்யா மரத்தில் வந்து … Continue reading தூவித்தோழர்கள்-4
தூவித்தோழர்கள்-3
மயில் (Indian peafowl) எதிர் வீட்டு மாடி பயன்படுத்தாமல் இருப்பதால், ஒரு ஆண் மயில் அங்கு வசிக்கிறது. காலையும் மாலையும் ஒரே அகவலும், ஆடலும் தான். எங்கள் பகுதியில் மயில்களின் எண்ணிக்கை கூடுவதற்கு, இவர்தான் காரணம் என்று நினைக்கிறேன். ஒரு நாள் காலையில் தோகையை விரிப்பதும், அகவுவதுமாக இருந்தது. சுற்றிலும் பெண் மயில்களே இல்லை. ஒரு மணி நேரம் இதையே செய்து கொண்டிருந்தது. பகல் நேரங்களில் எங்கு செல்கிறது என்று யோசித்திருக்கிறேன். ஒரு வால் காக்கையை தொடர்ந்து … Continue reading தூவித்தோழர்கள்-3
