உயிரியல் வகைப்பாடு குறித்த ஒரு சிறு அறிமுகம். கரோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus) தொடங்கி வைத்த உயிரியல் வகைப்பாடு (Taxonomy), அறிவியல் முன்னேற்றத்தால் படிப்படியாக வளர்ந்து தற்போதுள்ள நிலையை அடைந்துள்ளது. அதன் படிநிலைகள்: Kingdom – உலகம் Phylum/Division – தொகுதி/பிரிவு Class – வகுப்பு Order – வரிசை/ஒழுங்கு Family – குடும்பம் Genus – பேரினம் Species – சிறப்பினம்/இனம்/சிற்றினம் Sub-species - துணையினம் ஒவ்வொரு உயிரினமும் இந்த அட்டவணைக்குள் இவ்வாறு அடுக்கப்படுகிறது. உதாரணமாக அண்டங்காக்கையின் உயிரியல் வகைப்பாடு இது . ©Link விலங்குலகத்தில் முதுகுநாணிகள் என்ற … Continue reading தூவித்தோழர்கள்-அட்டவணை
தூவித்தோழர்கள்-1
சின்னான் ( Red vented bulbul) காலை நேரத்தில் வீட்டின் எதிரில் உள்ள கருநொச்சி மரத்தில் சின்னான் வந்து அமரும். அதன் மலர் மிகவும் சிறிது. அதன் அலகோ பெரிது. எவ்வாறு மலரமுது உண்ண முடியும்? ஒரு நாள் மர்மம் விலகியது. பூவுக்கு வரும் எறும்புகளை பிடிக்க காத்திருக்கிறது. ஒரு நாள், கைக்கெட்டும் தூரத்தில் வந்து அமர்ந்து, மனதிற்கும் நெருக்கம் ஆகிவிட்டது. பெரும்பாலும் ஜோடியாகத்தான் வருகின்றன. இரண்டிற்கும் குறிப்பிடும்படியாக ஆண் பெண் வேறுபாடு எதுவும் தெரியவில்லை. … Continue reading தூவித்தோழர்கள்-1
ஒரு கால் சூரியன்
பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - அண்ணாநகர், சென்னை 'உனக்கு சந்தோஷம் தருவது எதுவோஅதுவே உனக்கு சூரியன்உதாரணமாக ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்ஒரு பப்பாளிப்பழம்ஒரு நண்பனின் முகம்ஒரு டம்ளர் தண்ணீர்இன்னும்காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்....' சூரியமறைவுப்பிரதேசம் - தேவதேவன். கடந்த ஒரு வாரம் என் வாழ்வின் சோர்வான நாட்கள். அம்மா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நானும் உடன் தங்க வேண்டியதாயிற்று. தமிழகமே ஐந்து நாள் விடுமுறையில் என்ன செய்வதென்றறியாமல் அலை மோதிக் கொண்டிருக்க, போட்டிருந்த அனைத்து திட்டங்களையும் ஒத்திவைத்துவிட்டு … Continue reading ஒரு கால் சூரியன்
மலரினும் மெல்லிது
பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - ஹைதராபாத் இன்று அதிகாலை.... என ஆரம்பிக்கும் முன் முக்கியாகமாக ஒன்று சொல்ல வேண்டியுள்ளது. பின்னர் கட்டுரை செல்லும் போக்கிலிருந்து அது விலக்கிச் செல்வதாக ஆகிவிடக்கூடும். இங்கே 'ஹிரானி ச்சாய்' என்று ஒருவகை தேனீர் தருகிறார்கள். அது இஸ்லாமியர்களின் இந்திரலோக அமிர்தம் என நினைக்கிறேன். என்ன ஒரு சுவை..! எண்ணுகையிலேயே எச்சில் ஊறுகிறது. கட்டுரைக்கு வருவோம். இன்று அதிகாலை, ஹைதராபாதில் இருக்கும் ஹுசைன் ஏரிக்கு பறவைகள் பார்க்கச் சென்றிருந்தேன். இருசக்கர வாடகை … Continue reading மலரினும் மெல்லிது
சுதந்திரத்தின் எல்லை
பறவைப்பார்த்தல் அனுபவக் குறிப்பு - கீழகொண்டையூர் சிறு வயதில் ஏழுகடல், ஏழுமலை தாண்டி ஒரு கிளியைத் தேடி எனும் கதையை கேட்கும் போது அனைவருக்கும் தானும் அப்படியொரு சாகசப்பயணம் செய்வோம் என தோன்றாமலிருந்திருக்காது. ஆனால் சிலருக்கே அப்படியான பயணங்கள் வாய்த்திருக்கும். அதிலும் எத்தனை பேருக்கு உண்மையிலேயே அதே போன்றதொரு பறவையைத்தேடி அப்பயணம் சாத்தியமாயிருக்கும் எனத் தெரியவில்லை. இதுவரை பறவைகளைப் பார்த்து பட்டியலிடாத இடங்களுக்கு நான் செல்லும் பயணங்கள் அத்தகையதொரு சாகசத்தை சாத்தியமாக்கியிருக்கின்றன. இம்முறை கீழக்கொண்டையூர், திருவள்ளூர் மாவட்டம். … Continue reading சுதந்திரத்தின் எல்லை



