காணகம்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - நித்தியவனம் - 18, 19 & 20.09.2026 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு விருந்தோம்பல்; குறள் - 86; திருவள்ளுவர் செம்மீசைச் சின்னான் (Red-whiskered Bulbul) பறவைப் பார்த்தல் அறிமுகமான பின், நித்தியவனம் மிக நெருக்கமானதாக ஆகிவிட்டது. விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட குழுவினரும் இதையே உணர்வார்கள் என எண்ணுகிறேன். அதற்கு முன் வகுப்பறை, ஓய்வறை, உணவுக்கூடம், அதன் எதிரே துருத்திய பாறை, கீழே சிறு ஓடை என்றிருந்த … Continue reading காணகம் →

அதிர்வுதாங்கியின் முன்னோடி

ஊர் மரங்கொத்தி - Black-rumped flameback (தூவித்தோழர்கள்-2)  ஊர் மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 22 முறை  வரை மரத்தை தட்ட முடியும். இடையில் நிறுத்தாவிட்டால், மூளை சூடாக வாய்ப்புள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக சுருங்கி, விரியக்கூடிய மண்டை ஓட்டை கொண்டுள்ளது. இதன் நாக்கு மண்டையோட்டை சுற்றி வரும் அளவு நீளமானது. நாக்கின் நுனியில் கூர்மையான முட்கள் உள்ளன. நீண்ட நாக்கை நீட்டி மரத்தின் பிளவுகளில் மறைந்திருக்கும் பூச்சியை பிடிக்கிறது இந்தப் பறவை. இதன் நாக்கு ஓர் அதிர்வுதாங்கியாக (Shock … Continue reading அதிர்வுதாங்கியின் முன்னோடி →

பறவைகள் வழியே…

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - வேலூர், சித்தூர் - 05 & 06.09.2026 விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட நண்பர்கள் இக்கட்டுரையை, கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து துவங்குவது முற்றிலும் தற்செயலானது. ஏனெனில் நான் எத்தனைத் தரவுகளைத் தந்தாலும், படித்தபின் நீங்கள் சொல்லப்போவது 'இது தற்செயலே' என்றுதான். உதாரணமாக, 1. இப்படத்தில் ஒருவரைத் தேடி பயணம் துவங்கும். நாங்களும் குறிப்பிட்ட ஒருவரைத் தேடியே இந்த இரண்டுநாள்  பயணத்தைத் துவங்கினோம். 2. அவர் கிடைக்காமல் எங்கெங்கோ அலைவார்கள். நாங்களும் அலைந்தோம். … Continue reading பறவைகள் வழியே… →

தூவித்தோழர்கள்-60

வெள்ளைக்கண்ணி(Indian White-eye) 2025 ஜூலை மாதம் இந்திய மரபிசைப் பயிற்சிக்கு நித்யவனம் சென்றிருந்தேன். பறவை பார்க்கும் நண்பர்கள் பலர் இருந்ததால், கிடைக்கும் இடைவேளைகளிலெல்லாம் பறவை பார்க்க சென்றோம். கிணத்துக் குடில் எதிரில் உள்ள மரத்தில் கூட்டமாக வெள்ளை கண்ணியை பார்த்தோம். மரக்கிளைகளிடைய அங்கும் இங்கும் பறந்தபடியே இருந்தது. ச்சீர் ச்சீர் என்ற மெல்லிய சீட்டியொலி போல இருந்த  அதன் குரலையும் கேட்க முடிந்தது. மொட்டுக்கள், விதைகள், பழங்கள், மலரமுது மற்றும் சிறு பூச்சிகளை உண்ணும். பல சமயங்களில் … Continue reading தூவித்தோழர்கள்-60 →

தூவித்தோழர்கள்-59

நீலத்தாழைக் கோழி (Gray-headed Swamphen) முதன்முதலில் நீலத்தாழைக் கோழியை வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பார்த்தேன். காலை வெயிலில், அதன் ஊதாவும் நீலமும் கலந்த நிறமும், முகத்தில் இருக்கும் சிவந்த பெரிய அலகும், நெற்றிக் கவசமும் மிக அழகாக காட்சியளித்தது. சத்தமே எழுப்பாமல் அமைதியாக நாமக் கோழிகளுடன் சேர்ந்து மேய்ந்து கொண்டிருந்தன. சிவப்பு நிற மெல்லிய நீண்ட கால்களை தூக்கி வைத்து பொறுமையாக நடந்தன. © Raghavendra Pai ஆழம் குறைந்த நீர்நிலை ஓரங்களில், நீர்த்தாவரங்கள் மற்றும் காட்டுப்புதர்கள் … Continue reading தூவித்தோழர்கள்-59 →