தூவித்தோழர்கள்-58

சாம்பல் சிலம்பன்(Large Gray Babbler) பொள்ளாச்சி தோட்டத்தில் 'தவிட்டுக் குருவி போல கத்திக்கொண்டிருக்கும் ஒரு பறவை கூட்டம், தோட்டத்தின் பின்புறம் உள்ளது. ஆனால் பார்க்க தவிட்டுக் குருவி போல இல்லை' என்று என் அம்மா கூறினார்கள். புதுப் பறவை பார்க்க போகும் ஆர்வத்துடன் சென்றேன். தோட்டத்தில் நுழைந்த உடன் 'க்காய் க்காய்' என்று சத்தம் கேட்டது பின்புறம் சென்று பார்த்த போது, சுமார் பத்து சாம்பல் சிலம்பன்கள் கத்திக் கொண்டு, தரையில் மேய்ந்து கொண்டிருந்தன. சில பறவைகள் … Continue reading தூவித்தோழர்கள்-58 →

தூவித்தோழர்கள்-57

பெரிய தேன்சிட்டு (Loten's Sunbird)  தில்லைவனத்  தோட்டத்தில் பெரிய தேன் சிட்டை முதன்முதலாக பார்த்தேன். சட்டென்று பார்க்க ஊதா தேன்சிட்டை போலவே இருக்கும். இதன் கரு நிற அலகு நீண்டு, கீழ்புறமாக வளைந்து இருக்கிறது. குரலும் வேறுபடுகிறது. முதலில் மந்தாரை மரத்தின் கிளையில் அமர்ந்து  இளஞ்சிவப்பு நிற பட்டாம்பூச்சி போன்ற மலரில் மலரமுது உண்டது. அதன் அடியில் சோற்றுக்கற்றாழை பூத்திருந்தது. செடியின் நடுவிலிருந்து உயரமாக வரும் மஞ்சரித் தண்டில் மணி வடிவ மலர்கள் கொண்ட  ஆரஞ்சு நிற  மஞ்சரி இருந்தது. பெரிய … Continue reading தூவித்தோழர்கள்-57 →

நீளகண்டப் பறவையைத் தேடி

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 30.07.2026 குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்பனித்த சடையும் பவளம்போல் மேனிப் பால்வெண்ணீறும்இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.* அப்பர் - தேவாரம் விஷ்ணுபுரம் பறவைகள் வட்டத்தில் வரும் மாதாந்திர போட்டியின் அறிவுப்புகளுக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. அறிவுப்புகளின் ஒரு பிரதி பறவைகளின் பிரதிநிதிக்கு ஒரு விசேஷமான வழியில் அனுப்பப்படுகிறது. பின் அந்த அறிவுப்புக்குத் தொடர்புடைய பறவை … Continue reading நீளகண்டப் பறவையைத் தேடி →

தூவித்தோழர்கள்- 56

கூகை (Eastern Barn Owl) இரவு நடை சென்றபோது, தற்செயலாக மேலே நிமிர்ந்து பார்த்தேன். மின்சார கம்பியில் கூகை, சத்தமே எழுப்பாமல் அமர்ந்திருந்தது. நாங்கள் பலமுறை புள்ளி ஆந்தை பார்த்திருக்கிறோம். கூகையைப் பார்த்தது, இதுவே முதல் முறை. தலை திருப்பி, கண் சிமிட்டி, ஆர்வமுடன் எங்களை கவனித்தது. புள்ளி ஆந்தை மிகவும் வெட்கப்படும் பறவை. நாம் பார்ப்பது தெரிந்தால், உடனே அந்த இடத்தை விட்டு அகன்று விடும். இது கொஞ்சம் கூட பயப்படவில்லை. நாங்கள் நடக்க நடக்க, … Continue reading தூவித்தோழர்கள்- 56 →

தூவித்தோழர்கள்-55

கருந்தலை மாங்குயில் (Black-hooded Oriole)  வெள்ளிமலையின் நித்யவனத்தினுள்ளே, வகுப்பு நடக்கும் ஆலடியில், ஒரு ஜோடி கருந்தலை மாங்குயில்களை பார்த்தேன். மிகவும் அருகில் அமர்ந்து, மெல்லிய புல்லாங்குழல் இசையைப்போன்ற சிட்டியொலியை எழுப்பியது. ஜூன் மாதம், மதிய நேரத்தில் சாப்பிடும் இடத்திற்கு பின்னால் இருக்கும் மரத்தில் அமர்ந்து, இறகுகளை நீவி விட்டுக் கொண்டிருந்தது. அருகில் வந்த தவிட்டுக் குருவிகளை சட்டையே செய்யாமல், இறகுகளை நீவுவதிலேயே கவனமாக இருந்தது. கழுத்தை முழுவதுமாக திருப்பி , வால் அருகில் இருக்கும் எண்ணெய் சுரப்பியில், தன் … Continue reading தூவித்தோழர்கள்-55 →