தூவித்தோழர்கள்-36

குண்டுக்கரிச்சான் (Oriental Magpie-Robin) பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்தபோது, யானை குடிலருகே அனைவரும் அமர்ந்து பறவைகளுக்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு ஆண் குண்டு கரிச்சான் மர உச்சியில் அமர்ந்து பாட ஆரம்பித்தது. அதன் குரலை ஞாபகம் வைத்துக் கொண்டேன். ஒரு பறவையின் குரலை நினைவில் வைத்தேன், என்ற ஆனந்தம் ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை . அது பாடலை மாற்றி விட்டது. நான் அதிர்ச்சியாகி விட்டேன். ஒரு பறவையே வெவ்வேறு பாடலை பாடும் என்று அதன் … Continue reading தூவித்தோழர்கள்-36 →

தூவித்தோழர்கள்-35

உண்ணிக் கொக்கு(Eastern Cattle Egret) உண்ணிக் கொக்கு கால்நடைகளுடன் இருப்பதை பார்க்கலாம். முழுவதும் வெள்ளை நிறம். மஞ்சள் நிற கூரிய அலகு. கால்கள் கரும்பச்சை நிறம். தூரத்தில் இருந்து பார்க்கும் போது, கருப்பு நிறமாக தெரியும். நடக்கும்போது தலையை முன்னால் நீட்டி நீட்டி செல்கிறது. ஆண், பெண் பறவைகளிடையே வேறுபாடு இல்லை.இதன் பெயர் உண்ணிக் கொக்கு என்றிருந்தாலும் , இது கால்நடைகளின் உண்ணியை சாப்பிடுவதில்லை. மாறாக அவை நடக்கும் போது, பறக்கும் பூச்சிகளை உண்ணுகின்றன. இனப்பெருக்க கால … Continue reading தூவித்தோழர்கள்-35 →

கோடி அம்புகள்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 28.02.2026இது குருஷேத்திரத்தில் நிகழ்ந்தது!தேரோட்டியான கிருஷ்ணன் தேரில் காண்டீபத்தை கைவிட்டு கலக்கத்துடன் நின்றிருந்த அர்ஜூனனைப் பார்த்து இப்படிச் சொன்னார். "பார்த்தா கேள்! இத்துடன் நான் உன் வழியாக உலகத்திற்கு சொல்ல வேண்டிய பதினெட்டு யோகங்களும் முடிவடைந்ததன. நீ இன்னும் குழப்பத்திலிருப்பதால், உனக்கே உனக்கென கடைசியாக ஒன்றைச் சொல்லுகிறேன். கவனத்துடன் கேட்பாயாக" என்றபடி தொடர்ந்தார்."இன்றிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் மேற்கே அவதரிக்கப்போகும் மனிதக் குமாரனை, … Continue reading கோடி அம்புகள் →

தூவித்தோழர்கள்-34

வெண்புருவ வாலாட்டி (White-browed Wagtail) அதிகாலையில் வீட்டு வேலை செய்யும் போது, இனிய பறவைப் பாடல் கேட்டது. புதிய குரலாக இருக்கிறதே என்று Merlinல் போட்டால், வெண்புருவ வாலாட்டி என்று காட்டியது. வெளியே சென்றவுடன், சட்டென்று அமைதி. வீட்டினுள் வந்தவுடன், மீண்டும் பாடல். இப்படியாக கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது. தினமும் காலையில் இதே வேலை. 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' என்று சுற்றுசுவரின் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தாலும், சட்டென்று நிசப்தம். ஒரு நாள் காலை நடை சென்று, … Continue reading தூவித்தோழர்கள்-34 →

நட்சத்திரங்களின் தொலைவு

செங்கல்பட்டு பயண அனுபவக்குறிப்பு - நட்சத்திரக் கொண்டாட்டம் & கேளம்பாக்கம் சதுப்புநிலம் -  21 & 22.02.2026 தொலைவு எனும் பொருள்தரும் சரியான சொல் எது?அருகே எனும் பொருளுக்குஅருகேவரும் சொல்லாவது உண்டா?நாங்கள் ஒரே இடத்தில் நிற்கிறோம்.என் தொலைவு, அவர் அருகாமை.எனக்கு அருகே, இவருக்கு தொலைவில்.பலர் பார்க்கும் ஒரே பொருளைச் சுட்டவெவ்வேறு சொற்கள்.உண்மையில் தொலைவைச் சுட்டும் சொல்,தொலைவா? அருகாமையா?? அன்று கண்ட ஒண்முகில்கள் (Nebula's) - நட்சத்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. © Sreeram கடந்த 21ஆம் தேதி மதியம் … Continue reading நட்சத்திரங்களின் தொலைவு →