தூவித்தோழர்கள்-54

நீளவால் கீச்சான் (Long-tailed Shrike ) வெள்ளிமலையில் நித்தியவன நுழைவாயில் அருகே, வலது புறம் மின்சார கம்பிலோ, மரத்தின் உச்சிலோ, இது அமர்ந்திருப்பதை பார்க்கலாம். கரகரப்பான உரத்த குரலில் கத்தும். வேட்டையாடத் தயாராக சுற்றிலும் கவனித்தபடி அமர்ந்திருக்கும். இரையை முடிவு செய்தவுடன், அங்கிருந்து பறந்து சென்று, வேட்டையாடிவிட்டு, மீண்டும் தன் இடத்திற்கு வரும். Passeriformes வரிசையை சேர்ந்ததாக இருந்தாலும், இது இரைக் கொல்லி பறவைகளுக்குரிய தோற்றத்தையும், நடத்தையும் கொண்டிருக்கிறது. ஒருமுறை, பாதையின் அருகில் உள்ள எல்லைக்கல்லில் அமர்ந்திருந்தது. … Continue reading தூவித்தோழர்கள்-54 →

தூவித்தோழர்கள்-53

புள்ளிச்சில்லை(Scaly-breasted Munia) தில்லைவனத் தோட்டத்தில் மே மாத விடுமுறைக்கு சென்ற போது, சுமார் 25 குருவிகள் கூட்டமாக மின்சார கம்பியில் அமர்ந்திருந்தன. தொலைநோக்கி வைத்து பார்த்தபோது அதன் மார்பு வரிகள், அது புள்ளிச்சில்லை என்று காட்டியது. அந்த பெரிய கூட்டதிற்குள் பல சிறு குழுக்கள். நெருங்கி அமர்ந்து மற்ற பறவைக்கு இறகுகளை கோதி விட்டது ஒன்று. அலகோடு அலகு சேர்த்து கொஞ்சியது மற்றொரு ஜோடி. வாயில் வைத்த ஏதோ விதையை தின்றது ஒன்று. ஓரத்தில் இருந்த பறவை … Continue reading தூவித்தோழர்கள்-53 →

அடைதலென்பது

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - உன்கல் ஏரி - ஹூப்ளி - கர்நாடகம் - 24&25.06.2026 24.06.2026 அன்று விடுதியறையில் காலை 5 மணிக்கு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இன்னும் வெளியே வெளிச்சம் பரவவில்லை. விடுதியின் எதிரிலேயே உன்கல் ஏரி (Unkal kere) இருந்தது. சுற்றிலும் கம்பி வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்த அம்மாபெரும் ஏரியுள் நுழையும்  வழி எங்கென்று தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும். முந்தய நாள் இரவிலிருந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. சென்னையின் தட்பவெப்பநிலைதான் ஹூப்ளியிலிருக்கும் … Continue reading அடைதலென்பது →

தூவித்தோழர்கள்-52

சாம்பல் கதிர்ச்சிட்டு (Ashy Prinia) நான் தினமும் கேட்கும், சில சமயம் பார்க்க முடியும் பறவை சாம்பல் கதிர்ச்சிட்டு. சிறு பூச்சிகள், புழுக்கள், சிலந்தி மற்றும் பூக்களின் மலரமுது ஆகியவற்றை உண்ணும். பெரும்பாலான நேரம் புதருக்குள்ளே இருக்கும். மிக அரிதாக அது மின்சார கம்பியில் அமர்ந்து பாடியதை பார்த்திருக்கிறேன். அங்கிருந்து அது குதிப்பது போல் பாய்ந்து, புதருக்குள் போனது. கரு நிற கூரிய சிறிய அலகு. தலை மற்றும் முதுகு பகுதிகள் சாம்பல் நிறம். சிவப்பு நிற … Continue reading தூவித்தோழர்கள்-52 →

தூவித்தோழர்கள்- 51

தெற்கத்திப் புதர்பாடி (Jerdon's Bushlark) தில்லைவன தோட்டத்தில் பறவை பார்த்துக் கொண்டிருக்கும்போது, மெர்லின் தெற்கத்திப் புதர்பாடி என்று காட்டியது. இதற்கு முன் ஒரே ஒரு முறை வெள்ளி மலையில், இப்பறவையை புல்லின் நடுவே பார்த்திருக்கிறேன். ஆகவே புதருக்குள் துலாவிக் கொண்டிருந்தேன். திடீரென்று மேலிருந்து மெல்லிய சீழ்க்கை ஒலி கேட்டது. நன்றாக தெரியும் படி மின்சார கம்பியில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தது. சற்றே பெரிய பெண் சிட்டுக்குருவியைப் போன்ற தோற்றம். அகலமான பழுப்பு அலகு. கண்ணருகில் மிக மெல்லிய கோடு … Continue reading தூவித்தோழர்கள்- 51 →