தூவித்தோழர்கள்-50

மாடப்புறா(Rock/Feral Pigeon) உடுப்பியில் ஒரு அடுக்குமாடி தங்குமிடத்தில் இருந்தேன். கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே ஒரு மாடப்புறா வந்த அமர்ந்தது. அடர் சாம்பல் நிற அலகு. இதன் அலகின் மேல் operculum/cere என்று அழைக்கப்படும் வெள்ளை நிற தோல் உள்ளது. இது தண்ணீர் ஒட்டாமல் தடுக்கும் பூச்சாக செயல்பட்டு, அதன் நாசியை பாதுகாக்கிறது. ஆரஞ்சு வண்ண கருவிழி. இறக்கைகளில் இரு கருமையான பட்டைகள். பெரும்பாலான பறவைகள் நீலம் அல்லது நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். வெள்ளை, கலவையான … Continue reading தூவித்தோழர்கள்-50 →

தூவித்தோழர்கள்-49

தூக்கணாங்குருவி(Baya Weaver) என் சிறு வயதில், முட்டாள் குரங்கும், கேட்காமல் அறிவுரை கூறிய தூக்கணாங்குருவியும் உள்ள பஞ்சதந்திர கதையில், அறிமுகமாகியது இந்த பறவை. பலமுறை இதன் கூட்டை பார்த்திருக்கிறேன். பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்து, தொலைநோக்கி வாங்கிய பின் தான், குருவியை பார்த்தேன். இனப்பெருக்க ஆண்பறவையின் தலையும், பிடரியும், மார்பும் மஞ்சள். அலகு, கன்னம், கழுத்து பகுதி கருப்பு. வயிறு, தொடை, வாலடி வெள்ளை. பழுப்பும், மஞ்சளும் கலந்த இறகுகள். இனப்பெருக்கமில்லா காலத்தில் ஆண்பறவைக்கும், பெண் பறவைக்கும் … Continue reading தூவித்தோழர்கள்-49 →

திரும்புதல்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 23.05.2026 அந்தக் குகை, இதுவரை மானுடர் கண்ட துயரங்களிலிருந்து விடுபட வேண்டி ஒரு சோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்குள் வளர்ந்த மனிதற்களுக்கு அனுமதியில்லை. அவர்களின் மேல் பாவத்தின் கறை ஏற்கனவே படிந்துவிட்டிருந்தது. எனவே, வெவ்வேறு ஊர்களில் அன்று பிறந்த குழந்தைகள், தாயின் கருவறையை விட்டு வெளியேறி வெளிச்சத்தைக் காணும் முன்னே ஒளி புகாமல், காற்று மட்டும் செல்லும்படி முடையப்பட்டிருந்த கூடைகளுக்குள் பொதியப்பட்டு, சேவகர்களால் … Continue reading திரும்புதல் →

தூவித்தோழர்கள்-48

சாம்பல் இருவாச்சி (Indian Gray Hornbill) ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு அழகு. அதற்கென்று தனித்துவமான குணங்களும் உண்டு. ஆனால் ஏதோ சில காரணங்களால், சில பறவைகள் பித்து பிடிக்க வைக்கிறது. இந்த சாம்பல் இருவாச்சி எனக்கு அப்படிப்பட்ட பறவைகளுள் ஒன்று. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத, மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் பறவை. 2024 மே பறவை பார்த்தல் வகுப்பில், ஈஸ்வர் Sir ருடன் பறவை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒன்றன்பின் ஒன்றாக ஒரு … Continue reading தூவித்தோழர்கள்-48 →

தூவித்தோழர்கள்-47

நீலமேனி ஈப்பிடிப்பான் (Verditer Flycatcher) டிசம்பர் மாதம் நடந்த தாவரவியல் வகுப்பில் கலந்து கொண்ட குழந்தைகள் சேர்ந்து, காலையில் பறவை பார்க்க சென்றனர். அப்போது முதல் முறையாக ஒரு பறவையை பார்த்தனர். Merlin செயலியில் துலாவி, இதுவாக இருக்கலாம் என்று முடிவு செய்தனர். யானை குடிலுக்கு செல்லும் வழியில், மின்சார கம்பியில் மிக அருகில் நீலமேனி ஈப்பிடிப்பான் அமர்ந்திருந்தது. எனக்கு பார்த்தவுடன் தெரிந்து விட்டது, காலையில் குழந்தைகள் பார்த்த பறவை இது தான் என்று. பஞ்சுருட்டான் அளவுள்ள … Continue reading தூவித்தோழர்கள்-47 →