தழலின் தவம்

பறவைப் பார்த்தல் அனுபவக்குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 01.05.2026 தழல் ஆடலும்அலைதலும்சிலைத்தலும் ஊர்தலும்படர்தலும்எழுதலும் தீண்டலும்பற்றலும்சேர்தலும் கொல்தலும்கொள்தலும் இவையனைத்துமாதலும்ஆன பின்இவையல்லாதாதலும் தழலே! செந்நீலநாரை (Purple heron) - என் வழி.... இன்று கொரட்டூர் ஏரிக்கு செல்லும் போதே ஒரு முடிவுடன்தான் சென்றேன். செந்நீலநாரை (Purple heron) மீனை வேட்டையாடுவதை காணாமல் திரும்புவதில்லையென்று. ஆம், கடந்த இரண்டு மாதங்களாக இந்த முயற்சியிலிருக்கிறேன். மார்ச் மாதத்திற்கான விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட குழுவினருக்கான சவால் இது. செந்நீலநாரை மீனைக் … Continue reading தழலின் தவம் →

தூவித்தோழர்கள்-46

கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher) சென்னை வீட்டின் அருகே, ஒரு தாமரைக் குளம் உண்டு. ஸ்ரீயின் பள்ளி வேன் நிறுத்தம், அங்கு உள்ளதால், தினமும் காலையில் நானும் அவளும் அங்கு காத்திருப்போம். ஒரு நாள் குளத்திற்கு மேலே, பறந்து கொண்டிருந்த கருப்பு வெள்ளை மீன் கொத்தியை பார்த்தோம். ஒரே இடத்தில் பறந்தபடியே, நீரை ஆராய்ச்சி செய்தது. சட்டென்று இறக்கைகளை மடித்து, நீரில் பாய்ந்து, மீனுடன் பறந்து சென்றது. அதற்குப் பின், சுமார் பத்து ஆண்டுகள் கழித்து, … Continue reading தூவித்தோழர்கள்-46 →

தூவித்தோழர்கள்-45

மணிப்புறா(Spotted Dove) வெள்ளி மலையில் மிகவும் பரவலாக காணப்படும் பறவைகளின் ஒன்று. மின்சார கம்பி, மரம் அல்லது தரையில் மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். 'கூ , கூ , குக்ரூ' என்று குறுகுறுக்கும். அளவில் சிறிதான புறா. நீண்ட, சதுர வடிவ நுனி கொண்ட வால். கழுத்தில் காணப்படும் கருப்பு வெள்ளை புள்ளிகள், இதன் தனித்துவமான அடையாளம். கருப்பு அலகு. கண்கள் இளஞ்சிவப்பு. மேல் பகுதி சாம்பலும் பழுப்பும் கலந்த நிறம். அடிவயிறு இளஞ்சிவப்பு கலந்த சாம்பல் … Continue reading தூவித்தோழர்கள்-45 →

தூவித்தோழர்கள்- 44

நீலப் பைங்கிளி (Malabar Parakeet) வெள்ளிமலையில் எப்போது பறவை பார்க்க சென்றாலும், தவறாமல் பார்க்கும் பறவைகளுள் ஒன்று நீலப் பைங்கிளி. பச்சை நிற மரங்களின் பின்னணியில், இதன் நீல நிறம் தனித்து தெரியும். ஆலடி அமர்ந்திருந்த போது மிக அருகே ஒரு ஜோடி பறந்து சென்றது. கிளிகள் பறந்து செல்லும் போது, கூட்டத்தினருடன் தொடர்பில் இருக்கவும், வழி தவறி விடாமல் இருக்கவும், கூவிக்கொண்டே செல்கின்றன. தாவரவியல் வகுப்பு இடைவேளையில் குழந்தைகள் பறவை பார்த்தனர். ஒரே நேரத்தில் கூட்டமாக … Continue reading தூவித்தோழர்கள்- 44 →

தூவித்தோழர்கள்-43

நீலக்கண்ணி (Blue-faced Malkoha) வெள்ளிமலைக்கு வந்தபின் தெரிந்து கொண்ட பறவைகளில் ஒன்று நீலக்கண்ணி. இதன் ஆங்கில பேரான Malkoha, எனக்கு பால்கோவாவை நினைவுபடுத்தியது. சிங்களத்தில் Mal என்றால் பூ; Koha என்றால் குயில். பூங்குயில் என்ற அழகான அர்த்தத்தை பின்பு தெரிந்து கொண்டேன். ஆசிரியர்களுடன் பறவைகளுக்காக காத்திருக்கும் போது, இதை முதன் முதலில் பார்த்தேன். செம்போத்தை நினைவு படுத்தியது. செம்பழுப்பு வண்ண சிறகுகளுக்கு பதில், மின்னும் கரும் பச்சையும், கரு நீலமும் கலந்த சிறகுகள். சாம்பல் நிறத் … Continue reading தூவித்தோழர்கள்-43 →