பறவைப் பார்த்தல் அனுபவக்குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 22.04.2026 அந்த நாள்எனக்கு நன்றாகநினைவில் இருக்கிறதுஅன்று என்னநடந்தது என்பதுதான்ஞாபகமில்லை- ஆனந்த் நமக்கு விசேஷமான நாட்கள் பல உண்டு. பிறந்த நாட்கள், பண்டிகை நாட்கள், திருவிழா நாட்கள், வார இறுதியில் வராத அரசு விடுமுறை நாட்கள், மாணவர்களுக்கு ஆசிரியர்களும், அலுவலர்களுக்கு உயரதிகாரிகளும் வராத நாட்கள் என வருடத்திற்கு சில சமயம் 366 நாட்கள் வருவதுண்டு. அவற்றில் ஒன்றென, எதிர்பாராவிதமாக நான் எதிர்கொண்ட இந்நாளுக்கு 'உலகப்புவி நாள்' … Continue reading உலகமான புவியின் நாள்
தூவித்தோழர்கள்-42
ஊதாத் தேன்சிட்டு(Purple Sunbird) வீட்டருகில் தினமும் பார்க்கக்கூடிய பறவைகளுள் ஒன்று. காலையும் மாலையும் ஜோடியாக தூங்குவாகை மரத்திற்கு வரும். அதன் குரலை தொடர்ச்சியாக கேட்க முடியும். ஓரிடத்தில் நில்லாமல், பறந்து கொண்டே இருக்கும். ஆண் பறவை மின்னும் கரு ஊதா நிறத்தில் காட்சியளிக்கும். உண்மையில் இதன் நிறம் ஊதா அல்ல. இதை விளக்கும் அருமையான காணொளி. இறகுதிர் காலத்தில் மஞ்சளும் கலந்து இருக்கும். பெண் பறவையின் மேல் புறம் அடர் நிறத்திலும், அடிப்புறம் மங்கலான நிறத்திலும் இருக்கும். … Continue reading தூவித்தோழர்கள்-42
தூவித்தோழர்கள்-41
குயில் (Asian Koel) வீட்டின் அருகில் மிக எளிதாக காணக்கூடிய பறவை குயில். ஜோடியாக தூங்குவாகை மரத்தில் அமர்ந்திருப்பதை பார்க்க முடியும். பறந்து செல்லும் பெண் குயிலின் பின்னாலேயே, ஆண் குயில் செல்லும். வேகமாக இறக்கையை அடித்துக் கொண்டு நேர்கோட்டில் பறக்கும். காகத்தைப் போன்ற கரிய உடம்பு. சிவப்பு நிறக் கண். அகலமான கூர்மையான அலகு. பழுப்பு நிறத்தில் வெண் வரிகளும், வெண் புள்ளிகளும் கொண்டிருப்பது பெண் பறவை. காலையும் மாலையும் இவற்றின் கூவுதலை தொடர்ச்சியாக கேட்க … Continue reading தூவித்தோழர்கள்-41
தூவித்தோழர்கள்-40
வெண்புருவ சின்னான்(White-browed Bulbul) வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்த போது தான், இப்பறவையை முதன் முதலில் பார்த்தேன். பெண்ணாடம் வீட்டருகில் தினமும் வருகிறது. வெள்ளி மலையில் தொலைவில் பார்த்த பறவையை, அருகில் கருவேப்பிலை மரத்தில் ஜோடியாக பார்த்தேன். கூச்சலிட்டுக்கொண்டு இங்கிருந்து தூங்கு வாகை மரத்திற்கு பறந்தது. அங்கிருந்து மறுபடியும் இங்கு வந்து அமர்ந்தது. இதை தொடர்ந்து சிறிது நேரம் செய்த பின் பறந்து விட்டது. ©Albin Jacob வெண்ணிற புருவம். குட்டையான அகலமான அலகு . … Continue reading தூவித்தோழர்கள்-40
மங்களம்
பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - மணிமங்கலம் ஏரி - காஞ்சிபுரம் - 28.03.2026 Robert Zemeckis இயக்கி Tom hanks நடித்த 'Cast away' எனும் படத்தில் ஒரு காட்சியுண்டு. சரக்குவிமான விபத்தில் உயிர் பிழைத்து, ஒரு ஆளில்லாத தீவில் கரையொதுங்கும் நாயகன், தன்னுடன் சேர்ந்து கரையொதுங்கும் பொருட்களை, அதன் உறையைப் பிரித்து ஒவ்வோன்றாக நோக்கி அந்த தீவில் உயிர்வாழ அப்பொருட்கள் எந்த வகையில் உதவும் என்று பார்த்துக் கொண்டிருப்பார். அப்பொழுது ஒரு பொதியை பிரித்துப் … Continue reading மங்களம்




